கடந்த 100 ஆண்டுகளில் ஒப்பிடும் போது மிக அதிக அளவு வெயில்-நாசா

தற்போது கோடைகாலம் தொடங்கி விட்ட நிலையில் வெயில் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. இது குறித்து அமெரிக்காவின் நாசாவின் விண்வெளி ஆய்வு கல்வி நிறுவனமான கட்டார்டு இன்ஸ்டியூட்டின் இயக்குனர் கவின் ஸ்மிட் ஒரு அறிக்கை வெளியிட்டுள்டுள்ளது.

அந்த அறிக்கையில் கடந்த 100 ஆண்டுகளைகாட்டிலும் உலகில் பிப்ரவரி மாதத்தில்தான் கடும் வெயில் அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் வழக்கத்தைவிட 1.14 டிகிரி செல் சியஸ் வெப்பம் கூடுதலாக இருந்தது.

ஆனால் பிப்ரவரி மாதத்திலும் அது 1.35 டிகிரி செல்சியசாக அதிக அளவு அதிகரித்துள்ளது என்று அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

இது கடந்த 100 ஆண்டுகளில் ஒப்பிடும் போது மிக அதிக அளவு என கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு காரணம் மனிதர்களால் வெளியான அசுத்த வாயுக்களால் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு புவியில் வெப்பம் அதிகரித்ததாகவும் கருதப்படுகிறது.

Related Posts