Ad Widget

நடேஸ்வரா வித்தியாலயம் மீண்டும் மாணவர்களுக்காக!

நடேஸ்வரா மகா வித்தியாலயம் மீண்டும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை(12) மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

அண்மையில் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, போரின் போது இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வந்த நடேஸ்வரா மகா வித்தியாலயத்தை நல்லிணக்க செயற்பாட்டினை வலுப்படுத்தும் ஓர் அங்கமாகவும் அங்குள்ள மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையிலும் மீள கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

யாழ் குடா நாட்டில் தீவிரவாதச் செயல்கள் அதிகரித்திருந்த வேளையில் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் உருவாக்கப்பட்டது. இதன்போது நடேஸ்வரா மகா வித்தியாலயம் அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ளீர்க்கப்பட்டு இராணுவ தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது.

அப்போதிலிருந்து அப்பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள் தற்காலிக இடங்களில் கல்வி கற்று வந்தனர். அரசினால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்கச் செயற்பாடுகளின் ஓர் அங்கமாக இப்பாடசாலை மீளவும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டதுடன் கல்வி அமைச்சினால் அது மறுசீரமைக்கபடவுமுள்ளது.

அத்துடன் இந்நிகழ்வின் போது 701 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களான தெல்லிப்பளையைச் சேர்ந்த 650 குடும்பங்களுக்கும் கோப்பாயைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.

Related Posts