- Sunday
- June 14th, 2026
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் யாழ் மாவட்ட பிராந்திய அலுலகத்தின் ஏற்பாட்டில் சுத்தமான குடிநீருக்கான மக்களின் நலன் என்னும் கருப்பொருளில் உலக நீர் தின நிகழ்வின் மாபெரும் நடைபவனி நேற்று இடம்பெற்றது. யாழ் பண்ணையில் அமைந்துள்ள தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அலுலகத்தில் இருந்து யாழ் மாவட்ட செயலகம் வரை இந்த நடை பவனி...
450 கிராம் பாணின் விலையை நான்கு ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாக, பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
கடந்த டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி இராணுவ உயர் பாதுகாப்பு வலய பகுதியில் இருந்து விடுவிக்கப்பட்ட 701.5 ஏக்கர் நிலப்பரப்பில் 486.5 ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் 700 குடும்பங்கள் மீளக்குடியமர விரும்பம் தெரிவித்து, தமது பதிவுகளை மேற்கொண்டுள்ளதாக பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் விடுவிக்கப்பட்ட...
'வலிகாமம் மேற்குப் பிரதேசத்தில் அமைந்துள்ள சங்கானை வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் மக்களுக்கான சேவையை அர்ப்பணிப்புடன் ஆற்றிவருகின்றனர்' என வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியதிகாரி தெரிவித்தார். சங்கானை வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் தனியாக கிளினிக் நடத்துவதால் பெரும்பாலான நேரங்களில் வைத்தியர் வைத்தியசாலையில் இருப்பதில்லையென பொதுமக்கள் முறைப்பாடுகள் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின. அந்தச் செய்தி தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்...
ஐக்கிய தேசியக் கட்சியினால் கடந்த வாரம், கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் நடத்தப்பட்ட நடைபவனிக்கு எதிராக, பொலிஸ் மா அதிபரிடம் 'சிங்கள ராவய' அமைப்பு முறைப்பாடொன்றைச் செய்துள்ளது. இந்த நடைபவனியால், குறித்த பிரதேசத்தில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது என்று, மேற்படி அமைப்பின் பொதுச் செயலாளர் வண.மாகல்கந்த சுதந்த தேரரினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கர்ப்பிணிப் பெண்களுக்காக மாதாந்தம் வழங்கப்படும் போசனைப் பொதிக்குப் பதிலாக வவுச்சர் ஒன்றைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரமொன்றை, எதிர்வரும் நாட்களில் அமைச்சரவையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேற்படி போசனைப் பொதியைப் பெற்றுக்கொள்ளும் போது, தாங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக கர்ப்பிணிப்...
சரத் பொன்சேகா தனது சுயநலனுக்காகவே அனைத்துலக விசாரணைக்கு ஆதரவளித்துள்ளார். இவர் முன்னைய அரசாங்கத்தில் இராணுவ நீதிமன்றால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு இரண்டு ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதற்குப் பழிதீர்க்கும் முகமாகவே அனைத்துலக விசாரணைக்கான ஆதரவை வழங்கியுள்ளார். இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் Manekshaw எழுதியுள்ள பத்தியில் குறிப்பிட்டுள்ளார். இதனை மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. பீல்ட் மார்சல் சரத்...
புலி படத்தின் தோல்விக்கு பிறகு விஜய் நடித்துள்ள படம் தெறி. ராஜா ராணி இயக்குநர் அட்லீ இயக்கியுள்ள இப்படம் பக்கா ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். விஜய்யுடன் சமந்தா, எமி ஜாக்சன் என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளார்கள். முக்கிய ரோலில் மீனாவின் மகள் நைனிகா, விஜய்யின் மகளாக நடித்திருக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு...
'கபாலி' படத்தின் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. 'தெறி, கபாலி' இரண்டு படங்களையும் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார். இரண்டு படங்களுக்குமான வியாபாரப் பேச்சுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அவை முடிந்துவிட்டதாகச் சொல்லப்பட்டாலும் எந்த ஏரியா, என்ன விலை என்ற தகவல் இன்னும் வெளியாகாமலே உள்ளது. சில ஏரியாக்களில் இரண்டு படங்களையும் ஒருவருக்கே கொடுத்துள்ளதாகவும்...
பாகிஸ்தான் இடையேயான உலக கோப்பை 20 ஓவர் லீக் போட்டி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் தொடக்கத்தில் இந்திய தேசிய கீதத்தை பாட பிரபல பாலிவுட் நட்சத்திரமான அமிதாப் பச்சன் பாடினார். அதேபோல்,பாகிஸ்தான் தேசிய கீதத்தை பாகிஸ்தான் பாடகர் ஷபாகத் அமானத் அலியும் பாடினர். தொடர்ந்து போட்டி...
இன்று காலை கல்முனை நோக்கி புறப்பட்ட அரச பேருந்தும், தனியார் பேருந்தும் நிறைவான பயணிகள் இருந்தும் A9 சாலையில் ஒன்றை ஒன்று போட்டி போட்டு வேகமாக ஓடி கொண்டிருந்ததால் , பயணி ஒருவர் கொடிகாம்ம் பொலிஸ்க்கு தெலைபேசி மூலம் தகவல் தெரிவித்ததை அடுத்து கொடிகாம சந்தியில் வைத்து பொஸிஸ் இனால் இரு சாரதிகளுக்கும் எச்சரிக்கப்பட்டு ,...
தமிழ் மக்கள் பேரவை தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் தீர்வுத்திட்ட வரைபை முழுமையாக்குமெனவும், அதன் பின்னர் அரசாங்கத்திற்கு கையளிக்கும் எனவும் பேரவையின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடுகள் தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இந்த விடயம்...
தனது மகள் யசோதராவை கொலை செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச திட்டம் தீட்டியிருந்தார் என்று குற்றம்சாட்டியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க. ஹூனுப்பிட்டியவில் நேற்று நடந்த சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கான தெளிவுபடுத்தும் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றியத போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 'கடந்த 9 ஆண்டுகளாக தான் அரசியலிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாகவும், கட்சியிலிருந்த...
யுத்தத்தால் உடல்ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கும், வீடுகளை இழந்தவர்களுக்கும் 65,000 வீடுகள் அமைத்துக் கொடுக்கும் திட்டத்தின் கீழ் வீடுகளைப் பெற்றுக் கொள்ள புனர்வாழ்வு மீள் குடியேற்ற அமைச்சு விண்ணப்பங்களை கோரியுள்ளது. காணி உறுதிப்பத்திரம், அரசாங்க காணி அனுமதிப்பத்திரம் இல்லாமல் பத்து வருடங்களுக்கு மேல் ஒரு காணியில் வசிப்பவர்களும் இந்த வீட்டுத்திட்டத்தின் கீழ் வீடுகளைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்க முடியும் என...
கடந்த சில வாரங்களாக மின்சாரத் தடைப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் கொழும்பு உள்ளிட்ட நகரப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு எதிர்வரும் சிங்கள- தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது மற்றொரு புதுப்பிரச்சினை ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் கடும் வரட்சியான காலநிலை காரணமாக நாட்டின் பெரும்பாலான நீர்த்தேக்கங்கள் வற்றிப் போயுள்ளன. இதன் காரணமாக நகரப்...
கொழும்புத்துறை- வசந்தபுரம் பகுதியில் தனியார் காணியொன்றில் இருந்து இரண்டு மீதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டிருந்தது. கைக்குண்டு மீட்கப்பட்டு இரண்டு நாட்கள் கழித்து காணியை துப்பரவு செய்யும் போது மீதிவெடியொன்று வெடித்ததுடன் அதில் ஒருவர் காயமடைந்திருந்தார். இந்த நிலையிலேயே குறித்த பகுதியில் விசேட அதிரடி படையினர் மற்றும் குண்டு...
கிளிநொச்சி - கோரமோட்டை ஆற்றில் குளித்து கொண்டிருந்த இளைஞர் ஒருவர், சுழியில் அகப்பட்டு மரணமானார். இவர் நேற்று பிற்பகல் 3.40 மணியளவில் சுழியில் அகப்பட்டதாகவும், மாலை 5.18 மணியளவில், இளைஞனின் சடலம் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி மலையாளபுரத்தை சேர்ந்த இருபது வயதான ஸ்டான்லி என்ற இளைஞரே மரணமானதாக தெரியவருகிறது. இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி...
சாவகச்சேரியில் கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடையாததால் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சாவகச்சேரி மறவன்புலோவில் இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி மறவன்புலோ கிழக்குப் பிரதேசத்தில் வசித்து வரும் ரவீந்திரன் நிலோஜினி என்ற 16 வயது மாணவியே இவ்வாறு தற்கொலை செய்துள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1...
கொழும்பில் அமைக்கப்படவிருந்த கிரிஷ் சதுக்கத் திட்டத்துக்கு அனுமதி வழங்குவதற்காக 45 கோடி ரூபாவை தரகுப் பணமாக நாமல் ராஜபக்ஷ பெற்றுள்ளார். இது தொடர்பான விசாரணைகளை நிதி மோசடி தடுப்புப் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர் என ஊழலுக்கு எதிரான முன்னணி தெரிவித்துள்ளது. கொழும்பு புறக்கோட்டையில் ஹோட்டல்கள், அலுவலகங்கள் மற்றும் வீடுகள் கொண்ட கிரிஷ் சதுக்கம் ஒன்றை அமைக்க இந்திய...
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்திவரப்பட்ட 6.5 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் இந்திய மீனவர்கள் இருவர் கடற்படையினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டனர் என பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் சந்தேகத்துக்கிடமான முறையில் வந்த படகை மறித்து சோதனையிட்டபோது, மூன்று பைகளில் பொதி...
Loading posts...
All posts loaded
No more posts
