- Saturday
- September 13th, 2025

இந்திய ரூபாய் தொடர்பான தவறான தகவல்களை தெளிவுபடுத்தி இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி உள்ளூர் கொடுக்கல் வாங்கல்களுக்கு இலங்கையில் செல்லுபடியாகும் நாணயமாக இலங்கை ரூபாயே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது இலங்கையில் சுற்றுலாவுக்கு இந்தியா முக்கிய ஆதாரமாக இருப்பதால், வங்கி பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை ஒரு நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக அங்கீகரிப்பது...

இந்திய இராணுவத்தினால் 63 தமிழ் பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டமையை நினைவுகூரும் வகையில் நினைவேந்தல் நிகழ்வு நேற்று (02.08.2023) வல்வெட்டித்துறையில்அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. 1989 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 2 ஆம் திகதி வல்வெட்டித்துறை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இந்திய இராணுவத்தினால் 63 தமிழ் பொதுமக்கள் சுட்டும், வெட்டியும், எரித்தும் கொல்லப்பட்டிருந்தனர். இதன்போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டு,...

உக்ரைனின் ஒடேசா பிராந்தியத்தின் தெற்கில் உள்ள துறைமுகம் மற்றும் தொழில்துறை வசதிகள் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Izmail பகுதியை இலக்கு வைத்து ரஷ்ய ட்ரோன்கள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உக்ரைன் விமானப்படை எச்சரித்திருந்தது. இதில் தானிய சேமிப்பு கிடங்குகள் பல சேதமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. தானிய சேமிப்பு கிடங்குகள் பல சேதமடைந்துள்ளதாக கூறப்படும்...

கிளிநொச்சி பளை பிரதேசத்தில் உள்ள பனைக்காட்டில் நேற்று (01) ஏற்பட்ட தீயினால் சுமார் 2000 பனை மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. இந்த பனை காட்டை அண்டிய தனியார் பண்ணை ஒன்றின் தொழிலாளர்கள் குழுவொன்று தோட்டத்தின் குப்பைகளுக்கு தீ வைத்துள்ளதுடன் பனைக்காடு நோக்கி தீ பரவியதால் பனைக்காடு தீக்கிரையாகியுள்ளது. தீயினால் சேதமடைந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பனை மரங்கள்...

இலங்கை - இந்திய ஒப்பந்தம் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பொருளாதார அபிவிருத்தி, அரசியல் தீர்வு உள்ளடங்கலாக சகல அம்சங்களையும் அமுல்படுத்jத வேண்டும் என்பதை இலங்கைக்கு தொடர்ந்து வலியுறுத்துவோம் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளிடம் குறிப்பிட்டுள்ளார். இந்திய உயர்ஸ்தானிகர்...

வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடொன்றுக்கு தீ வைத்து தம்பதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. கடந்த மாதம் 23ஆம் திகதி வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற பிறந்தநாள் விழாவின் போது வீட்டுக்குள் புகுந்த 8 பேர், அங்கிருந்தவர்களை கூரிய ஆயுதங்களால் தாக்கி, வீட்டிற்கு தீ வைத்ததாக தெரிவிக்கப்பட்டது. அங்கு வீட்டில்...

ரஷ்யாவின் தலைநகரான் மொஸ்கோ நகரிலுள்ள கட்டடமொன்றில் இன்று இரண்டாவது தடவையாகவும் ட்ரோன் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், மொஸ்க்வா சிட்டி கொம்பிளக்ஸ் கட்டடம் நேற்று மீண்டும் ட்ரோன் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகவும் மேயர் சேர்ஜி சோபியானின் தெரிவித்துள்ளார். எனினும் உக்ரைனின் பல ட்ரோன்களை ரஷ்ய படையினர் சுட்டுவீழத்தியுள்ளதாகவும், ஒரு ட்ரோன் மேற்படி கட்டடத்தை தாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி,...

கடல் நீர் உட்புகாத வகையில் வயல் வெளிகளை அண்டிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மண் மேடுகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் மண்ணை வெட்டி எடுத்து சென்ற டிப்பர் வாகனங்களில் ஒரு வாகனத்தை பொதுமக்கள் மடக்கி பிடித்துள்ளனர். யாழ்ப்பாணம் அராலி பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அராலி பகுதியில் கடற்கரையை...

அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக்குவதற்கு தொடர்பாக தாம் விவாதித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு, அரசியலமைப்பின் 13வது திருத்தம், மாகாண சபைத் தேர்தல்கள் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நடத்தப்பட்ட சர்வகட்சி மாநாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக எம்.ஏ. சுமந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது...

”தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் தீர்வுப் பயண செயற்பாட்டின்” 100 நாள் செயற்பாட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை நோக்கிய பயணத்திற்கு வலுச் சேர்க்கும் வகையிலும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று யாழில் நடைபெற்றது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில், இடம்பெற்ற இப் போராட்டமானது யாழ்ப்பாணம் பழைய பூங்கா முன்பாக...

லங்கா பிரீமியர் லீக் தொடரின் முதலாவது போட்டியில் கொழும்பு ஸ்டைக்கேர்ஸ் அணியை வீழ்த்தி ஜப்னா கிங்ஸ் அணி முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது லங்கா பிரீமியர் லீக்கின் ஆரம்ப போட்டி ரசிகர்களின் பெரும் எதிர்பபார்ப்புக்கு மத்தியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக ஆரம்பமாகியது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு ஸ்டைக்கேர்ஸ் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது....

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக புகலிடம் தேடி இலங்கை வவுனியா மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அகதிகளாக படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையை இன்று திங்கட்கிழமை (31) காலை சென்றடைந்துள்ளனர். தகவல் அறிந்த தமிழக கடற்படையினர் அவர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இவ்வாறு...

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான பீடங்கள் பெரும்பான்மை இனத்தவர்களின் கைகளுக்கு சென்றுள்ள நிலையில் ஐந்து வருடங்கள் சென்றால் வடக்குமாகாணம் தமிழர்களின் மாகாணம் எனக் கூறும் நிலை மாறிவிடும் என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியரும் வேந்தருமான பத்மநாதன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் விருந்தினர் விடுதியில் சனிக்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர்...

யாழ்ப்பாணம் என்பது சைவமும் தமிழும் கொட்டி கிடக்கின்ற ஒரு அருள் பூமி என தென்னிந்திய திரைப்பட நடிகையும் பேச்சாளருமான கஸ்தூரி தெரிவித்துள்ளார். தாவாடி அம்பலவான முருகன் ஆலயத்தின் திருமஞ்ச திருவிழா ( 29.07.2023) இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், யாழ்ப்பாணம் என்பது அருள் பூமி. இலங்கை முழுவதுமே...

எரிபொருள் விலையில் அடுத்த மாதம் மாற்றங்கள் ஏற்படலாம் என இலங்கை கனியவள கூட்டுதாபனம் அறிவித்துள்ளது. கனியவள மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்துள்ளார். தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார். மேலும், நாடளாவிய ரீதியாக செயற்படும் எரிபொருள் நிலையங்கள் 50 சதவீதமான கையிருப்பினை கொண்டிருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்....

ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் உக்ரைன் வீரர்கள் இருவர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். உக்ரைனின் வடகிழக்கு நகரமான சுமியில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைனின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்ய ஏவுகணை தாக்கிய சுமியில்...

மனித புதைக்குழி விவகாரத்தில் சர்வதேசம் நீதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று பாரிய பேரணியொன்று இன்று முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டது. இதில், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், மதகுருமார், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்த ஹர்த்தாலுக்கு, வர்த்தகர் சங்கங்கள், தனியார் பேருந்து...

ல்வெட்டித்துறை பகுதியில் நேற்றையதினம் 5 முதலைகள் பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தொண்டமனாமாறு செல்வச்சந்நிதி ஆற்று நீரேரியில் நீண்டகாலமாக முதலைகளின் அச்சுறுத்தல் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்த நிலையிலேயே நேற்றைய தினம் குறித்த முதலைகள் பிடிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் ஆற்று நீரேரியில் 4 முதலைகளும் கொம்மந்தறை பகுதியில் உள்ள நீர் சகதியில் ஒரு முதலையும் பிடிக்கப்பட்டுள்ளதாகத்...

புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க யாழ்ப்பாணத்திற்கு தீடீர் விஜயமொன்றை மேற்கொண்டார். கடற்படையின் விசேட படகு மூலம் நெடுந்தீவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக அமைச்சர் வருகை தந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின்போது நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் நேற்று இடம்பெற்ற பாடசாலை நூலக அபிவிருத்தி மற்றும் மொழி இலக்கிய கலை மேம்பாட்டுத்திட்டத்தினை அமைச்சர்...

மாகாண சபை தேர்தல் தேவையில்லை என சி.வி. விக்னேஸ்வரன் ஜனாதிபதியிடம் கூறியதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று (27) யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே எம்.ஏ. சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்று (26) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியால் அதிகாரப் பகிர்வு சம்பந்தமாக உரையாடுவதற்கு என்று கட்சி தலைவர்களுக்கு...

All posts loaded
No more posts