யாழ்.உற்பத்தியாளர்களை ஏமாற்றும் வெளிமாவட்ட வியாபாரிகள்

வெளிமாவட்ட வியாபாரிகள் , உள்ளூர் உற்பத்தியாளர்களிடம் காசோலை மோசடியில் ஈடுபட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் , இது தொடர்பில் உள்ளூர் உற்பத்தியாளர்களை விழிப்புடன் இருக்குமாறும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். யாழ் உற்பத்தியாளர்களை நாடி வரும் வெளிமாவட்ட வியாபரிகள் , அவர்களிடம் இருந்து உற்பத்தி பொருட்களை கொள்வனவு செய்து விட்டு , பணத்திற்கு பதிலாக காசோலைகளை...

தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் பதவியிலிருந்து சிவாஜிலிங்கம் பதவி நீக்கம்!!

தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம். கே சிவாஜிலிங்கம் பதவியில் இருந்து நீக்கப்பட்டது உண்மை எனவும், இதனை கட்சியின் தலைவர் சிறிகாந்தாவும் சிவாஜிலிங்கமும் வெளிப்படையாக உளச்சான்றுடன் தெரிவிக்க வேண்டும் எனவும் அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சு.நிசாந்தன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பின் போதே அவர் இதனைத்...
Ad Widget

யாழில் வறட்சியால் சுமார் 70,000 பேர் பாதிப்பு!

வறட்சியுடன் கூடிய காலநிலை காரணமாக யாழ் மாவட்டத்தில் 69,113 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது யாழ் மாவட்டத்தில் நிலவுகின்ற வறட்சியுடன் கூடிய காலநிலை காரணமாக இதுவரை 21,714 குடும்பங்களைச் சேர்ந்த 69,113 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கூடுதலாக...

குடும்பஸ்தரொருவர் கிராம மக்களால் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை!!

சுன்னாகம் பகுதியில் 19 வயது யுவதியுடன் வீட்டை விட்டு வெளியேறிய 54 வயதுடைய குடும்பஸ்தர் கிராம மக்களின் கொடூர தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். சங்குவேலி பகுதியைச் சேர்ந்த மரியதாஸ் ஜெயதாஸ் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். கடந்த 5 ஆம் திகதி யுவதியொருவரை காணவில்லை என உறவினர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...

உக்ரைனில் கொடிய ஏவுகணைகளை குவிக்கும் பிரான்ஸ்! நீண்ட தூர இலக்குகளை தாக்க திட்டம்

நீண்ட தூர இலக்குகளை தாக்கக்கூடிய SCALP ஏவுகணைகளை உக்ரைனுக்கு பிரான்ஸ் வழங்கியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 525 நாட்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நீண்ட தூர இலக்குகளை தாக்கி அழிக்க கூடிய ஏவுகணை தங்களுக்கு வழங்குமாறு மேற்கத்திய நாடுகளிடம் உக்ரைன் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றது. இந்நிலையில் நீண்ட தூர இலக்குகளை...

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இனி தவணை பரீட்சை!!

2024ஆம் ஆண்டு முதல் அனைத்துப் பாடசாலைகளுக்கும் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தவணை பரீட்சை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். இத்தீர்மானம் தரம் 01 முதல் உயர்தரம் வரை அதாவது தரம் 13 வரை ஒவ்வொரு பாடசாலையிலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதுவரை ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு வருடத்தில் மூன்று...

உக்ரைன்-ரஷ்ய போரில் தீவிரமடையும் தாக்குதல்கள்! ஒரே இரவில் பலர் பலி

கருங்கடலில் ரஷ்ய டேங்கர் மீது கிவ் நடத்திய தாக்குதலை தொடர்ந்து ரஷ்ய மற்றும் உக்ரைனிய படைகள் தங்கள் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன. ஒரே இரவில் தீவிர வான்வழி தாக்குதல்கள் மற்றும் ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன்போது குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபியாவில் உக்ரைனில் போரை எப்படி முடிவுக்கு கொண்டுவருவது என்பது குறித்து,...

வாகன மோசடி; யாழ், கிளிநொச்சியை சேர்ந்த மூவர் கைது!!

மோட்டார் சைக்கிளில் இயந்திர , அடிச்சட்ட இலக்கங்களை முச்சக்கர வண்டிக்குப் பயன்படுத்தி மோசடி செய்ய முயன்ற குற்றச்சாட்டில் யாழ் பொலிஸாரினால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர் நீதிமன்றினால் பிணையில் விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தெரியவருவதாவது , யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர்...

இந்திய அரசினால் வழங்கப்பட்ட பேருந்து விபத்து!! சாரதி படுகாயம்!!

மீசாலையில் பயணிகள் தரிப்பிடத்துடன் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில், பேருந்து சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில், பயணிகள் தரிப்பிடமும் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி நேற்றிரவு பயணித்த பேருந்தொன்றே மீசாலை , புத்தூர் சந்திக்கு அருகில் இவ்வாறு பயணிகள் தரிப்பிடத்துடன் மோதி விபத்துக்கு உள்ளானது. ”பேருந்தின் பிரேக் மற்றும் ஸ்ரேறிங் வேலை செய்யவில்லை”...

‘யாழ் நிலா ஒடிஸி’ ரயில் சேவை ஆரம்பம்

சுற்றுலாப் பயணிகளை பிரதான இலக்காகக் கொண்ட ‘யாழ் நிலா ஒடிஸி’ என்ற ரயில் இன்று முதல் கல்கிசைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் சேவையில் ஈடுபடவுள்ளது. வார இறுதி நாட்களில் இயக்கப்படும் ‘யாழ் நிலா ஒடிஸி’ இன்று இரவு 10 மணிக்கு கல்கிசை நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 10...

யாழ். பல்கலைக்கழக மாணவி சடலமாக மீட்பு!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மன்னார் மாவட்டத்தை சேர்ந்த, யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ பீட இரண்டாம் வருட மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்திற்கு அருகில் வீடொன்றில் சக மாணவிகளுடன் வாடகைக்கு தங்கியிருந்த நிலையில் நேற்றையதினம் மாணவி விரிவுரைக்கு செல்லாது அறையில் தனித்து இருந்ததாகவும், சக மாணவிகள் அறைக்கு வந்த வேளை மாணவி...

அதிக ஹெரோயின் பாவனையினால் இளைஞன் பலி!!

யாழில் அதிக ஹெரோயின் பாவனை காரணமாக இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குருணாகல் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞனே நேற்றைய தினம் இவ்வாறு உயிரிழந்துள்ளார். மின்சார உபகரண விற்பனைக்காக குறித்த இளைஞன் யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ள நிலையில் கல்வியங்காட்டில் அவர் நேற்றைய தினம் உபகரணங்களை விற்பனை செய்துகொண்டிருந்த வேளை மயங்கி விழுந்துள்ளார். இதன்போது அவருடன் சேர்ந்து வியாபாரத்தில்...

உலக பேரழிவிற்கு திட்டமிடும் ரஷ்யா! உக்ரைன் விடுத்துள்ள எச்சரிக்கை செய்தி

உலக பேரழிவுக்கான போரை ரஷ்யா நடத்தி வருவதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். இஸ்மாயில் துறைமுகம் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலால் ஏற்றுமதிக்கு தயாராகவிருந்த உக்ரைனின் 40 ஆயிரம் டன் தானியங்கள் சேதமடைந்தன. இதன் காரணமாக ஆப்பிரிக்க நாடுகளில் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டி காணொளி வெளியிட்டுள்ள ஜெலென்ஸ்கி, சர்வதேச உணவு சந்தையில்...

யாழில் கண்புரை சத்திர சிகிச்சை நடவடிக்கைகள்!!

யாழ். மாவட்டத்தில் கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நோயாளர்களை இனங்கண்டு அவர்களுக்கான சத்திரசிகிச்சையினை யாழ். போதனா வைத்தியசாலையில் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சத்திரசிகிச்சைகள் கண்சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி மலரவன் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சத்திரசிகிச்சை திட்டமானது ஐக்கிய இராச்சியத்தின் Assist RR நிறுவனத்தினால் ஒருங்கிணைக்கப்படுவதுடன் சத்திர சிகிச்சைகளுக்கான கண்வில்லைகளும், சத்திரசிகிச்சை...

பௌத்த மயமாகும் சுழிபுரம் முருகன் கோயில்? அச்சத்தில் மக்கள்

சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த அரச மரம் சங்கமித்தையுடன் தொடர்புடைய அரச மரம் என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த அரச மரம் தொல்பொருள் சின்னமாக அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் அரச மரத்தை தொல்பொருள் திணைக்களத்தினர் ஆக்கிரமித்து , புத்தர் சிலைகளை...

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்புகள் திருட்டு!

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் பிரதேச வாசிகள் இரும்பு திருட்டில் ஈடுபட்டு வருவதாகவும் , கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் சுமார் 120 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய இரும்புகள் திருடப்பட்டுள்ளதாகவும் சீமெந்து கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜகத் தர்மபிரிய தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தொழிற்சாலைக்கு உரிய பாதுகாப்பு இல்லாத காரணத்தால், தொழிற்சாலைக்கு அருகில்...

கிளாலியில் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு

பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிளாலி கடற்கரையில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் மீது நேற்றைய தினம் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் பளை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவர் தற்போது சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இச்சம்பவம்...

வவுனியா தாக்குதல் சம்பவம் : பிரதான சந்தேகநபர் கைது!

வவுனியா – தோணிக்கல் பகுதியில் வீடு புகுந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், ஏற்கனவே கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களையும் 11 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த கொலை மற்றும் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை நேற்று வவுனியா மாவட்ட நீதிமன்ற...

யாழில் கட்டணமானி பொருத்தாத முச்சக்கர வண்டிகள் அகற்றம்!

யாழ் நகர்ப் பகுதியில், முச்சக்கர வண்டித் தரிப்பிடத்தில் இருந்து கட்டணமானி பொருத்தாத முச்சக்கர வண்டிகளை அகற்றும் நடவடிக்கையில் போக்குவரத்துப் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். யாழ் நகர் பகுதியில் இன்றைய தினம் காலை முதல் பொலிஸார் குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ் மாவட்டத்தில் பெரும்பாலான முச்சக்கர வண்டிகளில் கட்டணமானி பொருத்தப்படாமையினால் மக்களிடம் அதிகளவில் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாகப்...

கடவுச்சீட்டு தொடர்பில் விசேட அறிவிப்பு!!

வவுனியா பிராந்திய அலுவலகத்தில் கடவுச்சீட்டு சேவைகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவிக்கும் வகையில் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. தற்போதுள்ள பொதுமக்களின் நெருக்கடியை குறைக்கும் வகையில் இன்று (03) முதல் வட மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் அநுராதபுரம் மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு மாத்திரம் வவுனியா பிராந்திய அலுவலகத்தின் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என...
Loading posts...

All posts loaded

No more posts