- Saturday
- September 13th, 2025

யாழ்ப்பாணம், செம்பியன்பற்று வடக்கு பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணிகளை இலங்கை கடற்படையினருக்கு நிரந்தரமாக வழங்கும் நோக்குடன் தொடர்ந்து 4 ஆவது நாளாக நேற்று (27) காணி அளவீட்டு முயற்சி இடம்பெற்றுள்ளது. அதே சமயம் இந்நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்புத்தெரிவித்து வந்த நிலையில் குறித்த முயற்சி தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது பிரதேச மக்களுடன் நாடாளுமன்ற...

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி நீதி கோரியும் சர்வதேசத்தின் கண்காணிப்பை வலியுறுத்தியும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது இந்த பூரண ஹர்த்தாலுக்கு வடக்கு கிழக்கில் பல அரசியல் கட்சிகள் ,பல பொது அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். வெள்ளிக்கிழமை (28) வட்டுவாகல் பாலத்தில் ஆரம்பித்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை நோக்கி பேரணியொன்றும் மேற்கொள்ளப்படவுள்ளது....

சகாயபுரம் மாதகல் பகுதியில் வசிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளீர் அணிச் செயற்பாட்டாளர் ராஜினி அவர்களது வீட்டினுள் 27-07-2023 நள்ளிரவு வேளையில் பி.ப 10.45 மணியளவில் இளவாலைப் பொலீசார் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்டுள்ளனர். முல்லைத்தீவில் இடம்பெறவுள்ள மனிதப் புதைகுழிககு சர்வதேச நீதிகோரும் போராட்டத்திற்கு பொது மக்களைத் தயார்ப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த கட்சியின் மிக...

ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட தெற்கு உக்ரைனில் உள்ள டோக்மாக்கின் முக்கியமான தளவாட மையத்தில் ராக்கெட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக மாஸ்கோவால் நிறுவப்பட்ட பிராந்திய தலைவர் தெரிவித்துள்ளார். அவற்றில் மூன்று ராக்கெட்டுகள் வெடித்துள்ளதாகவும், நான்காவது ஒரு தொடருந்து நிலையம் அருகே விழுந்துள்ளது. ஆனால் வெடிக்கவில்லை என தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலின் போது ஒருவர் காயமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். டோக்மாக்...

நல்லூர் உற்சவத்தையொட்டி தினசரி புகையிரதச் சேவைகளை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 21 ஆம்திகதி நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா ஆரம்பமாகவுள்ளதால், பக்தர்களின் நலன் கருதி தினசரி புகையிரத சேவைகளை அதிகரிக்குமாறு நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனத்தின் பொது முகாமையாளர் புகையிரத திணைக்களத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறிய தந்தையால் 13 வயதான சிறுமியொருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. யாழ், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர், இரண்டாவது தடவையாக திருமணம் செய்து கொண்டு தனது முதல் தாரத்தின் மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அப் பெண்ணின் இரண்டாவது கணவர், 13 வயதான அப்பெண்ணின் மகளை துஷ்பிரயோகத்துக்கு...

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் நாளைய தினம் வெள்ளிக்கிழமை பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட உள்ளது. பூரண ஹர்த்தாலை மேற்கொள்ள வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. அதேவேளை நாளைய தினம் வெள்ளிக்கிழமை வட்டுவாகல் பாலத்தில் ஆரம்பித்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை நோக்கி பேரணியொன்றும் மேற்கொள்ளப்படவுள்ளது....

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியில் வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்த நிலையில் உயிரிழந்த சிறுமிக்கு சம்பள காசு கொடுக்கப்படவில்லை என சிறுமியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கல்வியங்காட்டு பகுதியில் உள்ள வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்த வட்டுக்கோட்டை முதலி கோவிலடியை சேர்ந்த கேதீஸ்வரன் தர்மிகா (வயது 17) எனும் சிறுமி , வேலை பார்த்து வந்த...

ஊர்காவற்றுறை - காரைநகர் பாதையில் பயணிகளைத் தாக்கிய வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பாதைப் பணியாளர் 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று புதன்கிழமை(26) ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோதே மன்று அவருக்கு விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பித்தது. இதேவேளை கடமை நேரத்தில் பாதைச் சேவையில் ஈடுபடாமல் மது போதையில் நின்று படகு ஓட்டுநரைத் தாக்கிய மற்றைய...

முல்லைத்தீவு மாவட்டத்தில் நாளை (28) இடம் பெறும் ஹர்த்தாலுக்கு ஆதரவாக தனியார் பேருந்து சேவைகள் இடம் பெறாது. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவத்தையும் கண்காணிப்பை வலியுறுத்தியும் நாளை (28) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கும் பூரண ஹர்த்தாலுக்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்திருந்தனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று நாளை (28)...

தென்மராட்சி மட்டுவில் வடக்கு பகுதியிலுள்ள வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி இறந்த நிலையில் மீக்கப்பட்டுள்ளார். சடலம் நேற்றையதினம் மீட்கப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். 82 வயதுடைய தம்பையா சரோஜினி என்ற மூதாட்டி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறி்த்த மூதாட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பான...

உக்ரைன் - ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடையும் நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. ரஷ்யாவின் முக்கிய நகரமான கிரிமீயா மற்றும் மாஸ்கோ நகரத்தின் மீது நடந்த உக்ரைனின் ஆளில்லா விமான தாக்குதலையடுத்து எந்த நேரத்திலும் ரஷ்ய போர் விமானங்கள் உக்ரைன் மீது பதிலடி தாக்குதல் நடத்தும் எனவும் உக்ரைன்...

வவுனியா நகரசபை நூலக கட்டிடத்தில் வடமாகாண ஆளுநரின் மக்கள் ஒழுங்கமைப்பு தொடர்பாடல் அலுவலகம் இன்று வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்சினால் திறந்து வைக்கப்பட்டது. வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் ஆளுநரை தொடர்பு கொள்வதற்கு நீண்ட தூரம் பயணித்து யாழ்ப்பாணம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு குறித்த அலுவலகம்...

வடமாகாணத்தில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக தீ விபத்துக்கள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடுமையான வெப்பம் மற்றும் வறண்ட காலநிலை காரணமாக ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல தீ விபத்துக்கள் வடக்கின் பல்வேறு பகுதிகளில் அண்மைய நாட்களில் பதிவாகியுள்ளன. வவுனியா இரட்டைப்பெரியகுளத்தில் அமைந்துள்ள தென்னை நார் ஆலை ஒன்றில் சனிக்கிழமை (22)...

போக்குவரத்து விதிமீறல்களுக்கான தகைமை இழப்பு புள்ளி செயல்முறை அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த முறையின் கீழ், 24 புள்ளிகளைபெறும் சாரதியின் அனுமதிப்பத்திரம் உடனடியாக இரத்து செய்யப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். இதற்கிடையில், வீதிகளில் இடம்பெறும் தவறுகளுக்கு குறித்த வீதியிலே...

யாழ்.ஊர்காவற்துறை - காரைநகர் பாதை சேவையில் அரை நிர்வாணமாக மதுபோதையில் நின்ற அரச பணியாளரொருவர் பொது இடத்தில் அரச ஊழியரொருவரை கொட்டனினால் தாக்கி அட்டகாசம் புரிந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. ஊர்காவற்துறையில் இருந்து காரைநகர் நோக்கி பயணித்த பாதையில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கடல்...

இலங்கைக்கான பாப்பரசரின் பிரதிநிதியுடன் யாழ் மறை மாவட்ட முதல்வரும் மேலும் ஒரு குருவும் நல்லூர் கந்தனை வழிபடுவதற்கு சென்றிருந்தனர். அவர்கள் ஆலயத்தின் முன்றலில் நின்று வணங்கி விட்டு வெளியேறிய போது நல்லூர் கந்தசாமி ஆலய நிர்வாகத்தினர் அவர்களை மதகுருவின் ஆடையுடன் உள்ளே சென்று வழிபட முடியும் என அழைத்திருந்தார்கள் அந்த அழைப்பை ஏற்று ஆலயத்திற்குள் கத்தோலிக்க...

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (28.07.2023) நடைபெறவுள்ள போராட்டத்திற்கும் வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண கடையடைப்பு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முழு ஆதரவு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று (25.07.2023) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது. குறித்த ஊடக...

வவுனியாவில் கும்பல் ஒன்றினால் கடுமையாக தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளைஞன் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். தோணிக்கல் பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த இனந்தெரியாத சிலர், வீட்டை எரித்ததோடு, அங்கிருந்தவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டனர். இந்தத் தாக்குதலில் ஏற்கனவே இளம் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் எரிகாயங்களுடன் வவுனியா...

ரஷ்யாவின் மற்ற ஏவுகணைகளை, உக்ரைன் இராணுவம் சுட்டுவீழ்த்தி வரும் நிலையில், 'பி-800 ஒனிக்ஸ் யாக்ஹான்ட்' ஏவுகணையை மட்டும் சுட்டு வீழ்த்த முடியவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. கடந்த, 20ஆம் திகதி ஒடெசா நகரம் மீது, ரஷ்யா இராணுவம், காலிபர், இஸ்கந்தர், பி-800 ஒனிக்ஸ் யாக்ஹான்ட் ஏவுகணைகள் வாயிலாக தாக்குதல் நடத்தியது. காலிபர், இஸ்காந்தர் ஏவுகணைகளை...

All posts loaded
No more posts