Ad Widget

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் எனவும் எதிர்பாக்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழையுடன் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படும் என்பதனால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் ஹம்பாந்தோட்டையில் இருந்து காலி ஊடாக கொழும்பு வரையான கடற்பரப்புகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் இதன்போது வடகிழக்கு திசையில் 20-30 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என்றும் இதன்போது கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts