Ad Widget

அரச ஊழியர்களின் பணிநேரத்தில் அதிரடி மாற்றம்!

அரச ஊழியர்களின் பணிநேரத்தில் அதிரடி மாற்றமொன்று கொண்டுவரப்பட்டுள்ளது.

`ஒரு சில அரச ஊழியர்கள் தமது பணிகளை உரிய நேரத்தில் ஆரம்பிப்பதில்லை எனவும், சரிவர நேரமுகாமைத்துவத்தைக் கடைப்பிடிப்பதில்லையெனவும் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமையவே~ குறித்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் அரச ஊழியர்கள் காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை அலுவலகங்களில் இருந்து கடமைகளில் ஈடுபடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதோடு, தமது அலுவலக அடையாள அட்டையையும் சீருடையினையும் அணிந்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும் பொது தினமாக ஒதுக்கப்பட்டுள்ள திங்கட்கிழமைகளில் அமைச்சின் கீழ்மட்ட அதிகாரி முதல் அமைச்சின் செயலாளர் வரை அனைத்து மட்டத்திலான அதிகாரிகளும் அலுவலகத்தில் இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அந்நாளில் நோய் அல்லது தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் தவிர வேறு எந்த காரணங்களுக்காகவும் விடுமுறை வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts