மரநடுகை மாதத்தில் இந்த மண்ணுக்குச் சொந்தமான மரங்களுக்கு முக்கியத்துவம்

வடமாகாண மரநடுகை மாதமான கார்த்திகை முதலாம் திகதி தொடங்கி முப்பதாம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த மண்ணுக்குச் சொந்தமான மரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடுகை செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வடமாகாண மரநடுகை மாதம் தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை (30.10.2016) அவர் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில்,...

யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் ஏன் பாரபட்சம்? பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி

யாழ்ப்பாண முஸ்ஸிம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கான அடிப்படை தேவைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்று யாழ் கிளிநொச்சி முஸ்ஸிம் பணிமனையின் தலைவரும் யாழ் மாவட்ட மீள்குடியேற்ற செயலனியின் தலைவரும் ஆகிய மௌலவி எச்.எம் சுபியான் இன்று தெரிவித்தார். வடக்கிலிருந்த முஸ்ஸிம் மக்கள் கடந்த 1990ம் ஆண்டு ஒக்டோபர் 30ம் திகதி விடுதலைப் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 26 வருடங்கள்...
Ad Widget

வடக்கில் நிலவும் வேலையில்லாப் பிரச்சனை;வவுனியாவில் விசேட சந்திப்பு

வடமாகாணத்தில் வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது தொடர்பில் மத்திய அரசாங்கத்தின் ஏற்பாட்டில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. வவுனியா மாவட்ட செயலகத்தில் மனிதவலு, தொழிற்துறை அமைச்சின் ஏற்பாட்டில் வடக்கு மாகாணத்தில் இவ் அமைச்சின் கீழ் பணிபுரியும் உத்தியோகத்தர்களுடனான சந்திப்பு நேற்று இடம்பெற்றது. இந்த சந்திப்பில் மனதவலு, தொழில்துறை இராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீர,...

பட்டாசு வெடித்தில் வீடொன்று முற்றாக எரிந்து நாசம் : முல்லைத்தீவில் சம்பவம்

முல்லைத்தீவு - கைவேலிப்பகுதியில் தீபாவளிப்பண்டிகையை முன்னிட்டு கொழுத்தப்பட்ட பட்டாசு வெடித்தில் வீடொன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது எனினும் எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. முல்லைத்தீவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கொழுத்தி மக்கள் கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில் முல்லைத்தீவு –கைவேலிப்பகுதியில் இன்று காலை 10.45 அளவில் வீடொன்றில் விழுந்த பட்டாசால் அந்த வீடு முற்றாக எரிந்துள்ளது. தீயை...

கையடக்க தொலைபேசி பாவனையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்

அடுத்த மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் தொலைபேசி கட்டணத்தில் மூன்றில் ஒரு பகுதி வற் வரியாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது புதிய வற் வரி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான வரி என்பவற்றுக்காக தொலைபேசி முற்கொடுப்பனவு அட்டை பயன்படுத்துபவர்களின் கட்டணத்திலேயே இவ்வாறு கொடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரு வரிகளுக்கும்...

இறக்காமத்தில் திடீரென உதித்த புத்தர்சிலை: தமிழ்- முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு

அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாணிக்கமடு பகுதியில், இன்று (சனிக்கிழமை) புதிதாக புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டுள்ளமை அப்பகுதி தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பாரிய விசனத்திற்கு உள்ளாகியுள்ளது. தமிழ் மக்கள் வாழும், இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாணிக்கமடு பகுதியிலுள்ள மாயக்கல்லி மலையிலேயே இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அம்பாறையிலிருந்து பௌத்த மதகுருமார்களுடன்...

வடமாகாண முதலமைச்சர் அரசியலமைப்பை மீறியுள்ளாராம்

அரசியலமைப்பின் 154 ஆம் உறுப்புரையில் முதலமைச்சர் ஒருவர் வெளிநாடு செல்வதாயின் ஆளுநரின் அனுமதியைப் பெற்று தான் வெளிநாடு செல்ல வேண்டும் மாறாக வட மாகாண முதலமைச்சர் சி.வீ. விக்னேஸ்வரன் ஆளுநருக்கு அறிவிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாண முதலமைச்சர் சி.வீ. விக்னேஸ்வரன் வெளிநாடு சென்றமை தொடர்பில் இதுவரையில் வட மாகாண ஆளுநருக்கு அறிவித்தல் விடுக்கவோ அனுமதி...

துப்பாக்கிச் சூட்டில் பலியாகிய மாணவர்களின் குடும்பங்களை ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த 21ஆம் திகதி காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களைச் சந்திக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் பயணம் செய்யவுள்ளார். கீரிமலைப் பிரதேசத்தில் வீடற்றோருக்கு புதிய வீடுகள் கட்டும் பணி நிறைவடைந்து வருகின்றது. இந்நிலையில் குறித்த வீடுகளை உரியவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை...

யாழ் சம்பவம் தொடர்பான அறிக்கை அடுத்த வாரம் பொலிஸ் ஆணைக்குழுவிற்கு

யாழ் சம்பவம் தொடர்பான அறிக்கை அடுத்த வாரம் பொலிஸ் ஆணைக்குழுவிற்கு யாழ் மாணவர்கள் இருவரின் உயிரிழப்பு சம்பந்தமாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவினரின் அறிக்கை அடுத்த வாரம் பொலிஸ் ஆணைக்குழுவிற்கு கிடைக்கும் என்று ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ குரே கூறினார். குறித்த குழு கடந்த தினங்களில் யாழ் சென்று விசாரணைகளை முன்னெடுத்திருந்ததாக அவர் கூறினார். கடந்த 20ம்...

நல்லாட்சியில் நம்பிக்கையுண்டு: சம்பந்தன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வென்று கிடைக்குமென்ற நம்பிக்கை இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள் குடியேற்றம், இந்து மத அலுவல்கள் அமைச்சு மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் அலரி...

இரணைமடு நீர்ப்பாசனத் திட்டத்தில் பசுமாடுகள் வளர்ப்புத் திட்டம்

இரணைமடு நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் கிளிநொச்சியில் பசுமாடுகள் வளர்ப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட 28 பயனாளிகளுக்கு வெள்ளிக்கிழமை (28.10.2016) வடக்கு விவசாய மற்றும் கால்நடை அபிவிருத்தித்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலப்பினப் பசுமாடுகளை வழங்கி வைத்து இத்திட்டத்தைச் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார். இரணைமடு நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டம் விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதி நிறுவனத்தின் இலகு...

விடுதலை புலிகள் மீண்டும் உயிர்பெற்று வருகின்றனர்!!

வடக்கு மற்றும் கிழக்கில் மாகாணத்தில் நிர்வாகம் முழுமையாக சீர்குழைந்துள்ளது. விடுதலை புலிகள் மீண்டும் உயிர்பெற்று வருகின்றனர். எனவே அரசாங்கம் உடனடியாக தேர்தலை நடத்தி மக்கள் ஆணையை பெற்றுக் கொள்ள வேண்டும். பொது மக்களுக்கு உண்மைகளை மூடி மறைத்து விட்டு பாதுகாப்பு படைகளை முகாமிற்குள் அரசாங்கம் முடக்கி விட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு குறித்து பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை...

தாய்ப்பால் புரைக்கேறி சிசு பலி

கைதடி, நுணாவில் பகுதியில் 11 நாட்களேயான சிசு, தாய்ப்பால் புரைக்கேறி, இன்று புதன்கிழமை (26) அதிகாலை உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. நுணாவில் பகுதியைச் சேர்ந்த ரவீச்திரசர்மா பிரகதீஸ்சர்மா என்ற சிசுவே இவ்வாறு உயிரிழந்துள்ளது. நித்திரையிலிருந்து எழுந்த சிசுவுக்குத் தாயார், அதிகாலை 12.30 மணியளவில் தாய்ப்பால் கொடுத்துள்ளார். தாய்ப்பால் அருந்திய பின்னர் சிசுக்கு...

1990ல் வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மக்களுக்கான அறிவித்தல்

1983 தொடக்கம் 2009ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு இடைப்பட்ட காலத்தில் பயங்கரவாத அச்சுறுத்தலினால் தமது சொந்தக் காணிகளை கைவிட்டவர்கள் அல்லது உயிர் அச்சுறுத்தலின் காரணமாக மிகக் குறைந்த விலையில் காணிகளை விற்றவர்கள் தங்களது காணிகளை மீளப் பெறுவதற்கான விசேட சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இச் சட்ட மூலமானது இரண்டு வருடத்திற்கு மாத்திரமே செல்லுபடியாகும் என்பதால் இவ்வாறான...

நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை சூறாவளியாக (KYANT) மாறியுள்ளது. இது இலங்கையின் வடகிழக்கே 1300 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இதனால் இலங்கைக்கு எவ்வித நேரடி பாதிப்புகளும் இல்லை என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...

ஜெயலலிதா நலம்பெற பால்குடம் எடுத்த பெண் மயங்கி விழுந்து பலி

முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி சேலத்தில் பால்குடம் எடுத்த பெண் கூட்டநெரிசலில் மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உடல்நலக்குறைவினால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் பூரண நலம் பெற வேண்டி தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள்,...

கோழி கூண்டில் தாயை அடைத்து வைத்திருந்த மகள் கைது

களுத்துறை மாவட்டத்திற்கு உட்பட்ட கல்கமுவ, வன்னிகுடாவெவ பிரதேச வீடொன்றில் தாயொருவரை கோழிக் கூண்டில் அடைத்து சங்கிலியால் கட்டி வைத்திருந்த மகள் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் 85 வயதுடைய முஸ்லிம் வயோதிப தாயொருவர் கோழிக் கூட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து குறித்த தாய் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மூன்று...

கூட்டமைப்பின் தீர்மானத்தை எதிர்த்த டெனீஸ்வரன்

வவுனியா பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானத்தை எதிர்த்து, அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு ஆதரவாக வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைச்சர் றிசாட் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், பதில் முதலமைச்சர் குருகுலராஜா ஆகியோரின் இணைத்தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இடம்பெற்றது. இதன்போது,...

யாழ். பல்கலை மாணவர்கள் படுகொலை; வேறு சூழ்ச்சிகள் உள்ளதா? சுமந்திரன்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரினால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பின்னால் வேறு ஏதாவது சக்திகள் இயங்கியிருந்தால், அதனை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டார். மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த சம்பவத்தை ஒரு...

ஆளுநர் அனுப்பிய கடிதத்தை திருப்பி அனுப்பிய பல்கலை மாணவர்கள்!

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்திற்கு, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் ஆளுநருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் எழுதிய இந்தக் கடிதத்தின் ஊடாக எதனைக் கூற விரும்புகின்றீர்கள் என்பதை எம்மால் புரிந்து கொள்ள முடியாது எனவும் இலங்கையின் அரச கரும்மொழிகள் சிங்கள, தமிழ் மொழிகள் என நினைவுபடுத்த விரும்புவதாகத்...
Loading posts...

All posts loaded

No more posts