Ad Widget

யாழ் சம்பவம் தொடர்பான அறிக்கை அடுத்த வாரம் பொலிஸ் ஆணைக்குழுவிற்கு

யாழ் சம்பவம் தொடர்பான அறிக்கை அடுத்த வாரம் பொலிஸ் ஆணைக்குழுவிற்கு யாழ் மாணவர்கள் இருவரின் உயிரிழப்பு சம்பந்தமாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவினரின் அறிக்கை அடுத்த வாரம் பொலிஸ் ஆணைக்குழுவிற்கு கிடைக்கும் என்று ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ குரே கூறினார்.

குறித்த குழு கடந்த தினங்களில் யாழ் சென்று விசாரணைகளை முன்னெடுத்திருந்ததாக அவர் கூறினார்.

கடந்த 20ம் திகதியன்று மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த யாழ் பல்கலைக்கழகத்தின் இரு மாணவர்களில் ஒருவர் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூடு காரணமாக ஏற்பட்ட விபத்தில் இரண்டு மாணவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

முன்னதாக பொலிஸார் தாம் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளவில்லை என மறுத்ததோடு இருவரின் மரணத்துக்கும் விபத்தே காரணம் எனவும் கூறினார்.

பின்னர் பிரேதப் பரிசோதனையில் உயிரிழந்த ஒரு மாணவரின் உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை தற்போது குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

குற்றப் புலனாய்வு பிரிவினரின் அறிக்கைப்படி அடுத்த கட்ட நடவடிக்கைகள் பொலிஸ் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும் என்று ஆரியதாஸ குரே கூறினார்.

குறித்த மாணவர்களின் உயிரிழப்பு சம்பவம் குற்றச் செயல் என்பதால் அது தொடர்பில் விசாரிக்கும் அதிகாரம் பொலிஸ் ஆணைக்குழுவிற்கு இல்லை என்றும், பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் ஏதேனுமத் குறைகள் இருப்பின் ஆணைக்குழு தலையிடும் என்றும் பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ குரே மேலும் கூறினார்.

Related Posts