Ad Widget

வடமாகாண முதலமைச்சர் அரசியலமைப்பை மீறியுள்ளாராம்

அரசியலமைப்பின் 154 ஆம் உறுப்புரையில் முதலமைச்சர் ஒருவர் வெளிநாடு செல்வதாயின் ஆளுநரின் அனுமதியைப் பெற்று தான் வெளிநாடு செல்ல வேண்டும் மாறாக வட மாகாண முதலமைச்சர் சி.வீ. விக்னேஸ்வரன் ஆளுநருக்கு அறிவிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாண முதலமைச்சர் சி.வீ. விக்னேஸ்வரன் வெளிநாடு சென்றமை தொடர்பில் இதுவரையில் வட மாகாண ஆளுநருக்கு அறிவித்தல் விடுக்கவோ அனுமதி பெறவோ இல்லையென குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த 14 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை வெளிநாட்டுப் பயணத்தில் ஈடுபட்டுள்ளார். இவரது பயணம் முடியும் வரை பதில் முதலமைச்சரை நியமிப்பதற்காக கடந்த 15 ஆம் திகதி கூடிய வட மாகாண சபைக் கூட்டத்தின் போது சபைத் தலைவர் சி.வி.கே. சிவஞானத்தினால் கல்வி அமைச்சர் ரி. குருகுலராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள இவர் இதுவரை வட மாகாண ஆளுநர் முன்னிலையில் பதில் முதலமைச்சராக பொறுப்புக்களைப் பாரமொடுக்காதுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் இது தொடர்பில் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதன் பின்னர் தான் வெளிநாடு செல்ல முடியும். இருப்பினும் இந்த நடைமுறைகளை வடக்கு முதலமைச்சர் மீறியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Related Posts