அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் தொடர்பில் விரும்பத்தகாத கருத்துக்களை தெரிவித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி வடமாகாண சபையின் முன்பாக இன்று (17) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் தொடர்பில், வடக்கில் முக்கிய பொறுப்புக்களில் உள்ள அதிகாரிகள் சிலர் கூடி விரும்பத்தகாத கருத்துக்களை தங்களிடையே பகிர்ந்து கொண்டமை தொடர்பிலான ஒலி பதிவு சமூக...

இணையம் மூலம் வருமானம் ஈட்டுபவர்களிடமிருந்து வரிகளை வசூலிப்பது குறித்து அறிவித்தல்!

2025/2026 மதிப்பீட்டு ஆண்டு முதல் சேவை ஏற்றுமதி மூலம் ஈட்டப்படும் வருமானத்திற்கு வரி விதிக்கப்படும் என உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் அறிவித்துள்ளது. இருப்பினும், அந்த வருமானத்திற்கு 18, 24, 30 மற்றும் 36 சதவிகிதம் என்ற வழக்கமான வருமான வரி விகிதங்களில் வரி விதிக்கப்படாது என உள்நாட்டு வருவாய்த் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி ஆணையர் ஹிரான்...
Ad Widget

நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோட்சவ பெருந்திருவிழா இன்று வெகு விமர்சையாக ஆரம்பமானது. இன்று காலை 8.15 மணியளவில் வசந்த மண்டப பூஜை இடம்பெற்றதைத் தொடர்ந்து, காலை 10 மணிக்கு கொடியேற்ற நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. இதன்போது பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு நல்லூர் கந்தசுவாமி பெருமானை வழிபட்டு அருளாசி...

பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் ஹெரோயினுடன் கைது!!

கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் உட்பட ஐவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து கணிசமான அளவு ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த உப தவிசாளர் கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலின்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்...

நெடுந்தீவு படகு அனர்த்தம் – கடற்தொழில் அமைச்சர் விடுத்துள்ள உத்தரவு!!

குறிக்கட்டுவான் இறங்குதுறையிலிருந்து நெடுந்தீவு நோக்கிப் பயணித்த படகு, விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகளை மேற்கொள்ளுமாறு தொடர்புடைய தரப்பினருக்கு கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பணிப்புரை விடுத்துள்ளார். குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த சிறிய ரக தனியார் படகு புறப்பட்டு சில நிமிடங்களில் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் படகில் பயணித்த 2...

எரிபொருள் விலையை மீளாய்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது!!

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை உயர்வு, காப்புறுதி, போக்குவரத்து செலவுகள் அதிகரித்துள்ளதன் காரணமாக, இலங்கையில் எரிபொருள் விலையை மீளாய்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடப்படும் தற்போதைய செலவுகளை ஆய்வு செய்த பின்னர், அரசாங்கத்திடம் புதிய மானியத்தை கோருவதற்கோ அல்லது...

மக்களின் இன உணர்வுடனான பேராதரவுடன் தொடர்கிறது “நீதியின் ஓலம் 2” போராட்டம்!

யாழ். செம்மணியில் தமிழ் மக்கள் மீது முன்னெடுக்கப்பட்ட மிலேச்சத்தனமான மனிதப் படுகொலைக்கு நீதி கோரியும், சர்வதேச விசாரணை ஒன்றின் ஊடாகவே இதற்கான நீதி வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையினை வலியுறுத்தும் முகமாகவும் தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் ”நீதியின் ஓலம் 2“ நீதி கோரும் தொடர் போராட்டத்தின் இறுதி நாளான இன்று...

யாழில் இராணுவ சிப்பாய்காக கட்டப்பட்ட வீடு கையளிப்பு!!

புத்தூர் பகுதியில் இராணுவ சிப்பாய்காக கட்டப்பட்ட வீடு நேற்றையதினம் (16) கையளிக்கப்பட்டது. இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவினால் குறித்த வீட்டுக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்ட, வீடானது நேற்று யாழ்ப்பாணம் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ரத்னாயக்கவினால் கையளிக்கப்பட்டது. இராணுவத்தில் பணியாற்றும் தமிழ் இராணுவ லண்ட்ஸ்கோப்ரல் எம்.ஆர் ராஜா என்பவருக்கு...

நெடுந்தீவு படகு அனர்த்தம் – அனைவரும் பாதுகாப்பாக மீட்பு!!

குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கு சென்ற படகில் பயணித்தவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என கடற்படை பேச்சாளர் கமாண்டர் சமிந்த வலாகுலுகே தெரிவித்தார். குறித்த படகில் 2 படகோட்டிகள் உட்பட 10 ​பேர் பயணித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து நேற்று பிற்பகல் 3 மணிக்கு பயணித்த படகு ஒன்று உரிய நேரத்தில் நெடுந்தீவை வந்தடையவில்லை என...

இரண்டாம் நாளில் இந்தியா வலுவான நிலையில்!!

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான ஓட்ட இலக்கினை பெற்றுள்ளது. போட்டியின் இரண்டாம் நாளான நேற்றும் மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. நேற்றைய (16) இரண்டாம் நாள் ஆட்ட நேர நிறைவில் இந்திய அணி தமது முதலாம் இனிங்ஸில் 9 விக்கெட்டுக்களை இழந்து 460 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இந்திய...

இப்படியும் ஒரு மோசடியா? வௌியான அதிர்ச்சி தகவல்!!

கட்டுமானத் துறை சார்ந்த பொருட்களை இணையத்தளம் வாயிலாக விற்பனை செய்து பண மோசடியில் ஈடுபடும் கும்பலொன்று இயங்கி வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்கள் ஊடாகப் பொருட்களை விற்பனை செய்வதாகக் கூறி இந்த மோசடி இடம்பெறுவதாகப் பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர். அஸ்பெஸ்டாஸ், சீமெந்து அல்லது பிற பொருட்களைச் சந்தை விலையை விடக் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக...

தென் கொரியாவுடனான கூட்டு இராணுவப் பயிற்சிகளை குறைக்க ட்ரம்ப் உத்தரவு

ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் பங்கேற்க தென் கொரியா மறுத்ததை சுட்டிக்காட்டி, அந்நாட்டுடனான கூட்டு இராணுவப் பயிற்சிகளை கணிசமாகக் குறைக்குமாறு பென்டகனுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இராணுவப் பயிற்சிகள் தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பாக, ட்ரூத் சோஷியல் தளத்தில் ட்ரம்ப் வெளியிட்ட பதிவில், பயிற்சிகளை முற்றிலுமாக ரத்து செய்ய காலதாமதமாகிவிட்ட போதிலும், இதில் பங்கேற்க...

4 ஆயிரத்திற்கும் அதிகமான பொலிஸ் அதிகாரிகள் சேவை இடைவிலகல்!!

2020 ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டின் ஜூன் 24 ஆம் திகதி வரையிலான சுமார் 7 ஆண்டுகள் காலப்பகுதியில் பல்வேறு காரணங்களால் 4,308 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையை விட்டு விலகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு சேவையில் இருந்து விலகியவர்களில் 3,936 ஆண் அதிகாரிகளும் 372 பெண் அதிகாரிகளும் அடங்குகின்றனர். இவர்களில் அதிகளவிலானோர் கடந்த...

இந்தோனேசியாவில் மீண்டும் பதிவான நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, இன்று (17) மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் புளோரஸ் (Flores) பகுதியில் இன்று அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக ஜேர்மன் புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. எனினும் இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வௌியாகவில்லை. இந்தோனேசியாவில்...

அடுக்குமாடி குடியிருப்பொன்றில் இருந்து வீழ்ந்த சிறுவன் பலி!!

கொழும்பு 09 பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் இருந்து சிறுவன் ஒருவன் கீழே விழுந்து உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் கொழும்பு 09 பகுதியைச் சேர்ந்த 12 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. குறித்த சிறுவன் 14 மாடிகளைக் கொண்ட அந்த குடியிருப்பின் மேல் மாடியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்திற்கு அருகில், மேலும் சில சிறுவர்களுடன் இணைந்து சுற்றியுள்ள காட்சிகளைப்...

இலங்கை – வியட்நாம் நேரடி விமான சேவை ஆரம்பம்

வியட்நாமிற்கும், இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து, வியட்நாம் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான முதலாவது விமானம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. வியட்நாமின் ஹோ சி மின் நகரத்திலிருந்து வருகை தந்த VN-671 என்ற இலக்கத்தைக் கொண்ட இந்த எயார்பஸ் A-320 ரக விமானம் நேற்று (16) இரவு 11.02...

கால்பந்தில் இதுவே எனது கடைசி ஆண்டாக இருக்கும் – ரொனால்டோ

போர்த்துக்கல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சமீபத்திய பேட்டி கால்பந்து உலக ரசிகர்களை பெரும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. தமது நீண்ட கால தோழியான ஜோர்ஜினா ரோட்ரிக்ஸுடன் திருமணம் முடிந்த கையோடு, அளித்த பேட்டியில் 2026-27 கால்பந்து சீசன் தனது தொழில்முறை வாழ்க்கையின் கடைசி ஆண்டாக இருக்கக்கூடும் என்று அவர் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். விளையாட்டை விட்டு...

கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி!!

பீகார் மாநிலம் லக்கிசராய் பகுதியில் உள்ள கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். கோயிலில் மின்கம்பி அறுந்து விழுந்தபோது மக்கள் அலறியடித்து ஓடியதால் நெரிசல் ஏற்பட்டதால் 7 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில் மேலும் பலர் காயமடைந்தனர். நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளையும், கூட்ட...

ரயில்வே பொலிசை கத்தியால் குத்திய நடிகை!!

மஹராஷ்டிராவில் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணிப்பது தொடர்பான மோதலில், ரயில்வே பாதுகாப்புப் படை பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய நடிகை அந்தரா பானர்ஜியை பொலிஸார் கைது செய்தனர். மஹாராஷ்டிரா மாநிலம் தானேயைச் சேர்ந்தவர்,'வெப் சீரிஸ்' எனப்படும் இணையதள டிவி தொடரில் நடிக்கும் நடிகை அந்த்ரா பானர்ஜி, இவர் கடந்த 12ஆம் திகதி குஜராத் மாநிலம் சூரத்துக்கு...