பீகார் மாநிலம் லக்கிசராய் பகுதியில் உள்ள கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.

கோயிலில் மின்கம்பி அறுந்து விழுந்தபோது மக்கள் அலறியடித்து ஓடியதால் நெரிசல் ஏற்பட்டதால் 7 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் மேலும் பலர் காயமடைந்தனர். நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளையும், கூட்ட நெரிசல் முகாமைத்துவ பணிகளையும் கண்காணித்து வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் பீகார் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.