ரயில்வே பொலிசை கத்தியால் குத்திய நடிகை!!

மஹராஷ்டிராவில் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணிப்பது தொடர்பான மோதலில், ரயில்வே பாதுகாப்புப் படை பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய நடிகை அந்தரா பானர்ஜியை பொலிஸார் கைது செய்தனர்.

மஹாராஷ்டிரா மாநிலம் தானேயைச் சேர்ந்தவர்,’வெப் சீரிஸ்’ எனப்படும் இணையதள டிவி தொடரில் நடிக்கும் நடிகை அந்த்ரா பானர்ஜி, இவர் கடந்த 12ஆம் திகதி குஜராத் மாநிலம் சூரத்துக்கு ஆரவல்லி கடுகதி ரயிலில் சென்றுள்ளார்.

துாங்கும் வசதி கொண்ட பெட்டிக்கு முன்பதிவு செய்த அவர் குளிரூட்டப்பட்ட பெட்டியில் பயணித்தார்.

இது தொடர்பாக அந்த ஆசனத்தை முன்பதிவு செய்தவருக்கும் நடிகைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதை விசாரிக்க வந்த ரயில்வே பாதுகாப்பு படை பொலிஸ் அதிகாரியான எஸ்.ஐ. யாமினி காந்த் மிஸ்ராவுடன் முரண்பாடு ஏற்பட்டது.

அப்போது கத்தியால் அவரைக் குத்தியதால் நடிகை அந்தரா கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Posts