இரண்டாம் நாளில் இந்தியா வலுவான நிலையில்!!

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான ஓட்ட இலக்கினை பெற்றுள்ளது.

போட்டியின் இரண்டாம் நாளான நேற்றும் மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

நேற்றைய (16) இரண்டாம் நாள் ஆட்ட நேர நிறைவில் இந்திய அணி தமது முதலாம் இனிங்ஸில் 9 விக்கெட்டுக்களை இழந்து 460 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் தேவ்தத் படிக்கல் 167 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.

கே.எல் ராஹூல் 82 ஓட்டங்களையும், துருவ் ஜூரெல் 51 ஓட்டங்களையும் அதிபட்சமாக பெற்றுக் கொடுத்தனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் பிரபாத் ஜயசூரிய 4 விக்கெட்டுக்களையும், கேசர நுவந்த 3 விக்கெட்டுக்களையும், அசித்த பெர்னாண்டோ ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

Related Posts