கொட்டடியில் ஏராளமான ஆயுதங்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டடி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் வெடி பொருட்கள் அவதானிக்கப்பட்டது. இதுகுறித்து யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இந்நிலையில் இதனைப் பொலிசார் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அந்தவகையில் இன்றையதினம் குறித்த வெடிபொருட்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது ஏராளமான ஆயுதங்கள் மீட்கப்பட்டன. யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா...

ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்!!

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தனது மனைவியான பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு தனிப்பட்ட விஜயம் செய்வதற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால்...
Ad Widget

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது!

முன்னால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையாகியிருந்த நிலையில் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து...

மனிதப் புதைகுழிகள் : சர்வதேச விசாரணை ஊடாகவே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும்!!

மனிதப் புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச விசாரணை ஊடாகவே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கும் என வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்களின் அமைப்பின் தலைவி யோகராசா கலாறஞ்சினி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் சங்க அலுவலகத்தில் இன்று (22) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டே அவர் இதனை தெரிவித்துள்ளார்....

மக்களை கொன்று விட்டு மின்சாரம் எதற்கு?

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (21) ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்து சங்க உறுப்பினர்கள் மற்றும் மன்னார் முச்சக்கர வண்டி சங்கத்தினர் ஆதரவு வழங்கிய நிலையில் குறித்த போராட்டத்தில் கலந்து...

நல்லூர் தேர்த் திருவிழாவில் நகை திருடிய இளம் யுவதி கைது!!

நல்லூர் ஆலய தேர்த் திருவிழாவின் போது நகைகளைத் திருட முற்பட்ட 24 வயது இளம் யுவதி ஒருவரை ஆலயப் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த சாரணர்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். நேற்று (21) நடைபெற்ற நல்லூர் ஆலய தேர்த் திருவிழாவின் போது, குறித்த யுவதி பக்தர்களிடையே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நடமாடியதை சாரணர்கள் அவதானித்து, அவரைத்...

மயிலிட்டி துறைமுகத்தை நவீனமயப்படுத்த நடவடிக்கை!

மயிலிட்டி துறைமுகத்தை நவீன துறைமுகமாக மாற்றியமைப்பதற்குரிய நடவடிக்கை வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, கிழக்கில் வாழைச்சேனை துறைமுகத்தை விஸ்தரிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கொழும்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாறறும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர்...

யாழ் விமான நிலையத்தை வினைதிறனாக மாற்ற முயற்சி!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் படிப்படியாக வணிகத் திட்டத்துடன் மேம்படுத்தப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (20) நாடாளுமன்றத்தில் உறுதியளித்தார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறினார். சுமார்...

நாளை யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!!

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலய தேர்த்திருவிழா பாடசாலை நாளில் இடம்பெறுகின்றமையால், பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்களும் குறித்த நிகழ்வில் பங்குபெற வேண்டும் எனும் நோக்கில் யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை நாளை வியாழக்கிழமை (21) வழங்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் ப.பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோர் இன்று புதன்கிழமை...

முல்லைத்தீவு இளைஞன் உயிரிழப்பு : கைதான 4 இராணுவ வீரர்களுக்கும் விளக்கமறியல்

முல்லைத்தீவு, முத்தையன்கட்டு குளத்தில் சடலமாக மீட்கப்படட இளைஞனின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நான்கு இராணுவ வீரர்களும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (26) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட பதில் நீதிபதி முன்னிலையில் குறித்த 4 இராணுவ வீரர்களும் நேற்று ஆஜர்படுத்தப்பட்டபோதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், அடையாள அணிவகுப்பிற்குட்படுத்தப்பட்ட போது, அவர்களில்...

யாழில் பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு!!

கொடிகாமம் பகுதியில் நேற்று நீர் குழாய்களை மண்ணில் புதைக்கும் பணிகளுக்காக நிலத்தினை அகழ்ந்து போது ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. குழாய்களை புதைப்பதற்காக நிலத்தினை அகழ்ந்து போது சந்தேகத்திற்கு இடமான முறையில் உரை பை ஒன்று காணப்பட்டதை அடுத்து, கொடிகாம பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த...

ஜனாதிபதியுடன் மன்னார் மறைமாவட்ட ஆயர் விசேட கலந்துரையாடல்!!!

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும், இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் இடையில்இடம்பெற்ற விசேட சந்திப்பு குறித்து மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு தமிழ் நேசன் அடிகளார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது மன்னார் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக மன்னார் ஆயர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினார். மின்...

வட்டுவாகல் பாலத்தை புனரமைக்க அனுமதி!!

வட்டுவாகல் பாலத்தின் புனரமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. குறித்த பாலத்தின் நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தத்தை வழங்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வட்டுவாகல் பாலம் என அழைக்கப்படும் பரந்தன் - கரைச்சி – முல்லைத்தீவு (A035) வீதியின் 50/1...

தெற்கை போன்று ஏன் வடக்கில் நிதி மோசடிகளை விசாரணை செய்வதில்லை? இராமநாதன் அர்ச்சுனா

வடக்கில் இடம்பெற்றுள்ள நிதி மோசடி தொடர்பாக அரசாங்கம் இதுவரையில் எந்த நடவடிக்கையினையும் எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, இன்று சபையில் குற்றம் சுமத்தியிருந்ததுடன் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் பல கேள்விகளை முன்வைத்திருந்தார். குறிப்பாக தெற்கில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் நிதி மோசடிகளுக்கான வழக்குகள் முன்னெடுக்கப்படுவதாகவும் ஆனால் வடக்கில் அவ்வாறு இல்லை என்றும்...

போலி பரப்புரைக்கு வடக்கில் மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகளும் உயிர்கொடுக்க முற்படுகின்றனர்!!

இந்த ஆட்சி கவிழும் என வங்குரோத்து அடைந்த அரசியல்வாதிகள் பிரச்சாரம் முன்னெடுத்து வருகின்றனர். இந்த போலி பரப்புரைக்கு வடக்கில் மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகளும் உயிர்கொடுக்க முற்படுகின்றனர் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இலங்கை ஐயப்ப சுவாமிமார்களின் யாத்திரையினை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தியதன் பின்னர் அது தொடர்பான விசேட கலந்துரையாடல்...

முத்தையன்கட்டு இராணுவ முகாமில் இடம்பெற்ற சம்பவம் திட்டமிட்டசெயலாகவே தெரிகின்றது!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் இராணுவ முகாமுக்குள் இளைஞர்கள் சட்டவிரோதமாக பிரவேசித்தமை பிரிவினைவாத தரப்பினரின் திட்டமிட்டசெயலாகவே தெரிவதாக பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” முல்லைத்தீவு முத்தையன்கட்டு ராணுவ முகாமுக்குள் சென்ற இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தின் மூலம் சில பிரிவினைவாத தரப்பினர் அரசியல் லாபம் ஈட்டுவதற்கு முயற்சிக்கின்றனர்....

நல்லூரடியில் வன்முறையில் ஈடுபட்ட ஐவருக்கும் விளக்கமறியல்!

நல்லூரடியில் வன்முறையில் ஈடுபட்ட ஐவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஐவர் அடங்கிய குறித்த குழு நல்லூரடியில் இருந்த நால்வர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் காயமடைந்த நால்வரில் இருவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் தாக்குதலை நடாத்திய ஐவரையும் நல்லூரடியில் கடமையில் இருந்த பொலிசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட...

அடுத்த வருடம் மாகாண சபை தேர்தலை நடத்த திட்டம்!!

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தற்போதுள்ள சட்டச் சிக்கல்கள் தீர்க்கப்பட்ட பின்னர், அடுத்த ஆண்டு முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். கிளிநொச்சி பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய...

இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று ஹர்த்தால்

முத்தையன்கட்டு இளைஞன் மரணம் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் திங்கட்கிழமை (17) காலை முதல் மதியம் வரை பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகிறது. இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இந்த ஹர்த்தாலுக்கு அரசியல் கட்சிகள்,சிவில் அமைப்புக்கள் மற்றும் வணிக பிரதிநிதிகள் உட்பட பல்வேறு தரப்பினர் முழுமையான...

நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள வீதித் தடை தொடர்பில் யாழ். மாநகர சபை அமர்வில் குழப்பம்!

யாழ்பாணம் நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள வீதித் தடை தொடர்பாக யாழ். மாநகர சபையின் நேற்றைய அமர்வில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்தன. யாழ்.மாநகர சபையின் முதல்வர் விவேகானந்தராஜா மதிவதனி தலைமையில் நடைபெற்றது. இதன்போது நல்லூர் மகோற்சவத்தின்போது அமைக்கப்பட்டுள்ள வீதித்தடை தொடர்பாக கடும் வாதப் பிரதி வாதங்கள் இடம்பெற்றன. குறிப்பாக நல்லூர் ஆலய பின்பக்க பருத்தித்துறை வீதி முழுமையாக...
Loading posts...

All posts loaded

No more posts