வடக்கில் இடம்பெற்றுள்ள நிதி மோசடி தொடர்பாக அரசாங்கம் இதுவரையில் எந்த நடவடிக்கையினையும் எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, இன்று சபையில் குற்றம் சுமத்தியிருந்ததுடன் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் பல கேள்விகளை முன்வைத்திருந்தார்.
குறிப்பாக தெற்கில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் நிதி மோசடிகளுக்கான வழக்குகள் முன்னெடுக்கப்படுவதாகவும் ஆனால் வடக்கில் அவ்வாறு இல்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, குறிப்பிட்டுள்ளார்.
எனவே தற்போதைய அரசாங்கம் அரசியல் பழிவாங்கலை மாத்திரமே முன்னெடுப்பதாக, மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளதாக இராமநாதன் அர்ச்சுனா, குறிப்பிட்டுள்ளார்.
இதற்குப் பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ” குறித்த விடயம் தொடர்பில் தனக்கு இரண்டு நாட்கள் அவகாசம் தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த விடயம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்திருந்தால் அல்லது சிஜடிக்கு முறைப்பாடு செய்திருந்தால் அது தொடர்பான விபரங்களை தன்னிடம் வழங்குமாரும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் லஞ்ச ஊழல் ஆணைக்குழு என்பது, சுயாதீனமாக இயங்குகின்ற ஆணைக்குழு எனவும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் லஞ்ச ஊழல் ஆணைக்குழு வருவதில்லை எனவும், எனினும் இரண்டு நாட்களுக்குள் இதற்கான பதிலை தான் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.