முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது!

முன்னால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையாகியிருந்த நிலையில் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக லண்டனுக்கு பயணம் செய்த வேளையில், அரச நிதி பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையாகியிருந்த நிலையிலயே கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவின் செயலாளர் சமன் ஏகநாயக்க மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடமிருந்து சிஐடி வாக்குமூலங்களைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts