Ad Widget

253 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டது மண்ணெண்ணெய் விலை – புதிய விலை 340 ரூபாய்!

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு லீற்றர் மண்ணெண்ணையின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, 253 ரூபாவினால் மண்ணெண்ணையின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் பழைய விலை – 87 ரூபாய் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் புதிய விலை – 340 ரூபாய்

இன்று 3 மணித்தியால மின்வெட்டு அமுல்!

இன்று (22) 3 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்த இலங்கை மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, பகலில் 1 மணி நேரம் 40 நிமிடமும், இரவில் 1 மணி நேரம் 20 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதியில்...
Ad Widget

வடக்கில் முதியவர்களை கண்காணிப்பதற்கு ஆளுநர் விசேட திட்டம்!

வட மாகாணத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களை கண்காணிப்பதற்காக வடமகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவினால் விசேட திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள வயதான முதியவர்கள் உடல் உள ரீதியில் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர். ஆரோக்கியம் குன்றுதல், அறிவாற்றல் குறைதல், மனநிலையில் பாதிப்பு, பொருளாதார நெருக்கடி மற்றும் செயல்திறன்...

ரஷ்ய அதிபரின் மூளையாக செயற்பட்டவரின் மகள் குண்டுவெடிப்பில் பலி

ரஷ்ய அதிபர் புடினின் நெருங்கிய உதவியாளரின் மகள் கார் வெடித்து பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரஷ்ய அதிபர் புடினின் முக்கிய ஆலோசகரும், புடினின் மூளையாகவும் செயற்பட்ட அலெக்சாண்டர் டக்கினை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் அவரது மகள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. பத்திரிக்கையாளராவும், அரசியல் விமர்சகராகவும் பணியாற்றிவந்த அவரது மகள் டார்யா டகினா (Darya Dugina), நிகழ்ச்சி ஒன்றில்...

விசேட தேவைக்குட்பட்ட நபர் ஒருவரின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் நகரில் அமைந்துள்ள புதிய சந்தை கட்டடத் தொகுதிக்குள் ஆண் ஒருவரின் சடலம் கண்டறியப்பட்டுள்ளது. இன்று (19) காலை குறித்த சடலம் அவதானிக்கப்பட்டு யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. விசேட தேவைக்குட்பட்ட நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். குறித்த சடலத்தை மீட்டு அடையாளம் காணும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது!

நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய கூட்டு தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தற்போது பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளதாக தொழிற்சங்கவாதியான ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார். நிலவும் தட்டுப்பாடு காரணமாக எரிபொருளைப் பெறுவதற்காக வாகனங்கள் இரண்டு அல்லது மூன்று நிரப்பு நிலையங்களுக்குச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். போதியளவு எரிபொருள் இருப்பதாக கூறும் அமைச்சர்...

பளையில் மீண்டும் வெடிப்பொருட்களுடன் ஒருவர் கைது!

பளை‌ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) வெடிபொருட்களுடன் ஒருவர் கைது. [caption id="attachment_90906" align="aligncenter" width="759"] Business crime[/caption] பளை பிரதேச இத்தாவில் பகுதியில் நபர் ஒருவரின் வீட்டில் வெடிபொருட்கள் வைத்திருப்பதாக பளை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலையடுத்து குறித்த வீடு சுற்றிவளைக்கப்பட்டது. பின் குறித்த நபரின் வீட்டில் தேடுதலில் ஈடுபட்ட போது...

மந்திரிமனை இடிந்து விழும் நிலையில் உள்ளது!!

யாழ்ப்பாணத்தில் உள்ள மந்திரிமனை எதிர்வரும் மழைக்காலத்தில் இடிந்து விழுந்துவிடுமோ என்கிற அச்சம் காணப்படுவதால் அதனை மீள்நிர்மாணம் செய்வதற்கு தேவையான நிதியை பெற செல்வந்தர்களும் புலம்பெயர்ந்தவர்களும் உதவமுன்வர வேண்டுமென யாழ்ப்பாண மரபுரிமை மையத்தினர் அவசர கோரிக்கையை விடுத்தனர். யாழ் ஊடக மையத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே யாழ்ப்பாண மரபுரிமை மையத்தினர் இந்த அவசர...

கடுமையான காய்ச்சல் ஏற்படுபவர்களுக்கு அவசர எச்சரிக்கை!!

கடுமையான காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடுமாறு அவசர எச்சரிக்கையொன்று வழங்கப்பட்டுள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் கோசல கருணாரத்ன குறித்த எச்சரிக்கையை வழங்கியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், ஒமிக்ரோன் வைரஸ் திரிபால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு...

போர் பரபரப்பிற்கு மத்தியில் ரஷ்யாவிற்கு படைகளை அனுப்பும் சீனா

இந்தியா, பெலாரஸ், ​​மொங்கோலியா, தஜிகிஸ்தான் மற்றும் பிற நாடுகள் உட்பட, புரவலன் தலைமையிலான கூட்டு இராணுவப் பயிற்சிகளில் பங்கேற்க சீன துருப்புக்கள் ரஷ்யாவுக்குச் செல்லும் என்று சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கூட்டுப் பயிற்சியில் சீனாவின் பங்கேற்பு தற்போதைய சர்வதேச மற்றும் பிராந்திய சூழ்நிலையுடன் தொடர்பில்லாதது என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த மாதம்,...

யாழ். பல்கலையில் சேர்.பொன்னம்பலம் இராமநாதன் அரங்காற்று, கட்புலக் கலைகள் என்ற பெயரில் புதிய பீடத்தை ஆரம்பிக்க வர்த்தமானி வெளியீடு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் கீழ் இயங்கி வந்த இராமநாதன் நுண்கலைக் கழகம் “சேர். பொன்னம்பலம் இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீடமாக (Sri Ponnambalam Ramanathan Faculty of Performing and Visual Arts)த் தரமுயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவித்தல் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிறேம ஜெயந்தவினால் கடந்த 16ஆம் திகதி கையொப்பமிடப்பட்டு, அதிசிறப்பு...

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கும் போது தேசிய அடையாள அட்டை அவசியம்!

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கும் போது தேசிய அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமானது என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதுகுறித்த அறிவித்தலினை வெளியிட்டுள்ளது. தேசிய அடையாள அட்டை இல்லாதபட்சத்தில் வேறு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணத்தை முன்வைக்கும் விண்ணப்பதாரர்கள் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது. எனினும், குறித்த ஆவணத்தின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியாது...

நண்பனின் வீட்டில் உயிரிழந்த இளைஞனின் மரணத்திற்கான காரணம் வௌியானது!!

நண்பன் வீட்டுக்கு சென்ற நிலையில் உயிரிழந்தவர், ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றியமையால் தான் உயிரிழந்தார் என உடல் கூற்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது. கோப்பாய் பகுதியை சேர்ந்த குறித்த நபர் திருநெல்வேலி பகுதியில் உள்ள தனது நண்பர் ஒருவரின் வீட்டுக்கு நேற்று முன்தினம் (16) சென்றுள்ளார். அங்கு கதிரையில் அமர்ந்தவர் சிறிது நேரத்தில் மயங்கி சரிந்து உயிரிழந்தார்...

மேற்கத்தியநாடுகள், இந்தியாவுடன் இணைந்து பொருளாதாரத்தை மேப்படுத்தலாமென இலங்கை கனவு காண்கின்றது – கஜேந்திரகுமார்

இலங்கையில் போர் முடிவுக்கு வந்து 13 வருடங்கள் தாண்டியும் போர்க்காலத்தில் இருந்த பொருளாதார நிலையை விட இலங்கையின் பொருளாதாரம் மிக மோசமாகியுள்ளது.இந்தக் கடன் பொறிக்குள் விழுந்திருக்க கூடிய இலங்கை தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கு ஒரு வழி இருக்கின்றது. அதற்கு தமிழ் மக்களுடன் தமிழ் தேசத்தை அங்கீகரிக்கின்ற ஒரு தீர்வை எட்டவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய...

10 மணி நேர மின் துண்டிப்புக்கு முகம்கொடுக்க நேரிடும் – சம்பிக்க எச்சரிக்கை

செப்டம்பர் மாதம் இறுதியில் இருந்து இரண்டரை மில்லியன் தொன் நிலக்கரி கொண்டுவர முறையாக நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் 10 மணி நேர மின் துண்டிப்புக்கு முகம்கொடுக்கவேண்டிய நிலை ஏற்படும் என பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். பொரலஸ்கமுவ 43 ஆவது படையணி காரியாலலயத்தல் புதக்கிழமை (17) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே...

தனிநபரொருவர் ஒரு மாதத்திற்கு வசிப்பதற்கு சராசரியாக 12 ஆயிரத்து 444 ரூபாய் போதுமானது!

இலங்கையில் தனிநபரொருவர், ஒரு மாதத்திற்கு வசிப்பதற்கு சராசரியாக 12 ஆயிரத்து 444 ரூபாய் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்திற்கான அறிக்கையின்படி, தனிநபர் ஒருவரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய குறைந்தபட்ச மாதச் செலவு 12 ஆயிரத்து 444 ரூபா என குறிப்பிடப்படுகின்றது. கொழும்பு...

யாழில் சிறுமிகள் இருவர் கடத்தப்பட்டு துஸ்பிரயோகம்! 7 பேருக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணத்தில் 17 வயது சிறுமிகள் இருவரை கடத்திச் சென்றமை மற்றும் தகாத செயலில் ஈடுபட்டமை என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் பேருந்து சாரதிகள் இருவர், நடத்துநர்கள் இருவர் உட்பட ஐவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், வீட்டைவிட்டு வெளியேறி குற்றச்செயலில் ஈடுபட்ட சிறுமிகள் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. இந்த கைது...

பத்து அல்லது அதற்கு மேற்ப்பட்ட குழந்தைகள் பெற்ற தாய்மார்களுக்கு விருது!!

பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்ற ரஷ்யா தாய்மார்களுக்கு விருது வழங்கப்படவுள்ளது. சோவியத் காலத்தில் வழங்கப்பட்ட அந்த விருதை மீண்டும் வழங்க ரஷ்ய அதிபர் புடின் முடிவு செய்துள்ளார். ரஷ்யாவில் பத்து அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றடுத்து வளர்க்கும் தாய்மார்களுக்கு சோவியத் காலத்தில் வழங்கப்பட்ட கௌரவ விருதான 'Mother Heroine' விருதை மீண்டும் அறிவித்துள்ளார் ஜனாதிபதி...

நண்பனின் வீட்டுக்கு சென்றவர் மயங்கி விழுந்து மரணம்!

நண்பனின் வீட்டுக்கு வந்து கதிரையில் அமர்ந்தவர் திடீரென மயங்கி சரித்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கோப்பாயை சேர்ந்த பாலசுப்பிரமணியம் ஐயர் கணநாதசர்மா (வயது 34) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் திருநெல்வேலி பகுதியில் உள்ள தனது நண்பர் ஒருவரின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு கதிரையில் அமர்ந்தவர் சிறிது நேரத்தில் மயங்கி சரிந்துள்ளார். உடனடியாக வீட்டார் அவரை மருத்துவமனைக்கு...

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் இனிமேல் கூட்டமைப்பினர் தலையிடக்கூடாது!!

காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தை மழுங்கடிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஊக்குவிக்க படுகின்றனர் என்றும் இந்த விடயத்தை அரசியல் லாபத்திற்காகவே கூட்டமைப்பினர் பயன்படுத்துகிறார்கள் என்றும் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்தார். கல்முனையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,...
Loading posts...

All posts loaded

No more posts