Ad Widget

கடுமையான காய்ச்சல் ஏற்படுபவர்களுக்கு அவசர எச்சரிக்கை!!

கடுமையான காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடுமாறு அவசர எச்சரிக்கையொன்று வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் கோசல கருணாரத்ன குறித்த எச்சரிக்கையை வழங்கியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ஒமிக்ரோன் வைரஸ் திரிபால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு இரண்டாவது நாளில் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியர் ஒருவரை நாடுங்கள்.

இவ்வாறான நிலையில் உள்ள பிள்ளைகளுக்கு ரெபிட் ஆன்டிஜென் பரிசோதனை அல்லது டெங்கு ஆன்டிஜென் பரிசோதனை ஒன்றை மேற்கொள்வது அவசியம்.

மேலும், காய்ச்சல் ஏற்பட்டு வீட்டில் இருக்கும் நிலைமையில், பரசிட்டமோலை மாத்திரம் கொடுப்பது சிறந்தது. அத்துடன், அவர்களை பாடசாலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts