- Monday
- July 7th, 2025

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கு திரும்புவார் என உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்த உதயங்க வீரதுங்க அங்கிருந்து வெளியேறும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். நாடு திரும்பி மக்களுக்கு சேவையாற்றுவார் என்றும் இருப்பினும் மீண்டும் அரசியலில் ஈடுபடமாட்டார் என்றும் உதயங்க வீரதுங்க...

கடற்தொழிலாளர் எதிர்கொள்ளும் மண்ணெண்ணை பிரச்சினைக்கு இந்தவார இறுதியிலிருந்த தீர்வு கிடைக்கும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஏற்கனவே பல்வேறு பாதிப்புக்களையும், பொருளாதாரத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், கடல்சார் உணவினை பெற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு விலை...

யாழ்ப்பாணத்தில் கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 76 வயதுடைய வயோதிபப் பெண்ணே நேற்றிரவு உயிரிழந்தார். கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாகவே அவர் உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது. நீண்ட நாள்களுக்கு பின் யாழ்ப்பாணத்தில் கோவிட்-19 நோய்த்தொற்றின் பரவல் அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை தகவல்கள்...

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் எதிர்வரும் காலங்களில் சாரதி அனுமதி பத்திரம் மற்றும் வாகன கைமாற்றங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் மறுசீரமைப்பு செய்ய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அனுமதி கோரியுள்ளது. திணைக்களம் அதன் அனைத்து சேவைகளுக்கான கட்டணங்களைத் மறுசீரமைப்பதற்கு அமைச்சரின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இது விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்படும்....

கடந்த ஒரு வார காலப்பகுதியில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த 7 நாட்களில் ஆயிரத்து 197 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 68 ஆயிரத்து 141...

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ வெளிநாட்டில் செய்யும் எந்தவொரு செலவுக்கும் அரசாங்கம் பணத்தை செலவிடவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அவ்வாறான அனைத்து செலவுகளும் முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட பணத்திலிருந்தே செலவிடப்படுகின்றது என அரசாங்க தகவல் திணைக்களம் கூறியுள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டு செலவுகள் தொடர்பாக நேற்று இடம்பெற்ற அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்....

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் உயிரை மாய்க்க தவறான முடிவெடுத்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்.பல்கலைக்கழகத்தின் துறையொன்றின் தலைவராக இருந்த பேராசிரியர் தனது மேல் படிப்பிற்காக வெளிநாடு செல்ல அனுமதி கோரி இருந்த நிலையில், அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவரது துறைத்தலைவர் பதவி மற்றுமொரு பேராசிரியருக்கு வழங்கப்பட இருந்த நிலையில் துறைத்தலைவராக...

பிரித்தானியா வேண்டுமென்றே ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. பிரித்தானியா தனது RC-135 உளவு விமானத்தை ரஷ்யா மீது பறக்க அனுமதி கோரியதாகவும், இது வேண்டுமென்றே ஆத்திரமூட்டும் நடவடிக்கை என்று பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ரஷ்ய வான்பரப்பில் எந்தவிதமான அத்துமீறல்களையும் தடுக்கும் பொறுப்பு ரஷ்யாவின் விமானப்படைக்கு...

பொது மக்கள் தமக்குத் தேவையான கடலுணவுகளை ஒன் – லைன் மூலம் பெற்றுக் கொள்வதற்கான பொறிமுறை ஒன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த சேவை இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் பம்பலப்பிட்டி மீன்விற்பனை நிலையத்தில் நேற்று (திங்கட்கிழமை) சம்பிரதாயபூர்வமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார். அதனடிப்படையில் PICME ஊடாக இலங்கை கடற்றொழில்...

பருத்தித்துறை நகரில் உள்ள தையல் கடை ஒன்றுக்குள் முக மூடிகளுடன் நுழைந்த கும்பல் ஒன்று கடையை அடித்து நொருக்கியதுடன், உரிமையாளரை வாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்று இரவு மின்வெட்டு அமுலில் இருந்த சமயம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் பாலகுமார் எனும் 44 வயதுடைய நபரே காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்...

சீன இராணுவத்தின் ஆய்வுக்கப்பலான யுவான் வாங் 5 (Yuan Wang 5) இன்று காலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது. செய்மதிகளைக் கண்காணிக்கக்கூடிய இக்கப்பல் ஆகஸ்ட் 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டைக்கு வரவிருந்தது. எனினும் இதன் வருகையை ஒத்திவைக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு கோரியிருந்தது. ‘ யுவான் வாங் 5’ கப்பலானது 750 கிலோமீட்டர் சுற்று வட்டத்தில்...

விலை சூத்திரத்தின் அடிப்படையில் எரிபொருள் விலைகளில் எந்தவொரு மாற்றத்தினையும் ஏற்படுத்தாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் முதலாம் மற்றும் 15 ஆம் திகதிகளில் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படுமென மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார். இதன்படி, எரிபொருள் விலை திருத்தம் நேற்று இரவு மேற்கொள்ளப்படுமென எதிர்பார்க்கப்பட்ட போதும், இந்த விடயம் தொடர்பில்...

பிள்ளைகளின் உடல்நிலை குறித்து பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தற்போது கொரோனா வைரசு தொற்றினால் பாதிக்கப்படுபவர்களுக்கு, முதல் இரண்டு நாட்களில் அதிக காய்ச்சல் காணப்படும். இதனால் விசேடமாக அவ்வாறு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று பொரளை ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய...

இன்று முதல் 19ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, A முதல் W வரையான வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5...

நாட்டில் 200 க்கும் அதிக மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. இவ்வாறு தொடர்ந்தும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுமாயின் நாடு மோசமான நிலைமையை எதிர்கொள்ள நேரிடும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பல...

காங்கேசன்துறையில் இருந்து காலி நோக்கி பயணித்த மஹவ ரயிலில் மோதலில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கசந்துறையிலிருந்து காலி நோக்கிச் செல்லும் ரயிலில் ஏறிய மூவர், ரயில் இருக்கை தொடர்பில் நபருடன் தகராறு செய்துள்ளனர். மேலும் குடிபோதையில் ரயிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி மோதலில் ஈடுபட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது ரயிலில் இருந்த மற்றொரு நபர் அவர்களை...

பிரித்தானிய விமானம் ஒன்று ரஷ்ய வான்வெளியை மீறிச் சென்றதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்நிலையில், ரஷ்ய போர் விமானம் ஒன்று பிரித்தானிய விமானத்தை ரஷ்ய வான்வெளியில் இருந்து வெளியேற்றியதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பேரண்ட்ஸ் கடலுக்கும் வெள்ளைக் கடலுக்கும் இடையில் அமைந்துள்ள கேப் ஸ்வியாடோய் நோஸ் அருகே ரஷ்ய விமான எல்லையை பிரித்தானிய உளவு விமானம்...

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரில் தங்கியிருந்த காலப்பகுதியில் 67 மில்லியன் ரூபாவை ஹோட்டல் கட்டணமாக செலுத்தியதாக தகவலறித்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் அவரது மனைவி அயோமா ராஜபக்ஷவும் கடந்த 11ஆம் திகதி தாய்லாந்து செல்லும் வரை சிங்கப்பூரில் உள்ள மரினா பே சாண்ட்ஸ் ஹோட்டலில் தங்கியிருந்தனர். ஹோட்டலின் தங்குமிட கட்டணமாக...

அரச செலவினங்களைக் கட்டுப்படுத்துதல் என்ற தலைப்பில் திறைசேரி செயலாளரால் குறிப்பிடப்பட்ட தேசிய வரவு செலவுத் திட்ட சுற்றறிக்கை இலக்கம் 03/2022 இன் விதிகளின்படி அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களும் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார். அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள்,...

மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி மாத பெருவிழா இன்று காலை சிறப்பாக இடம்பெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில், அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபேட் அன்ராடி ஆண்டகை, கொழும்பு உயர் மறை மாவட்டத்தின் துணை ஆயர் மேதகு அன்ரன் ரஞ்சித் பிள்ளை நாயகம் ஆண்டகை ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை...

All posts loaded
No more posts