Ad Widget

சீன ஆய்வுக்கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது!

சீன இராணுவத்தின் ஆய்வுக்கப்பலான யுவான் வாங் 5 (Yuan Wang 5) இன்று காலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது.

செய்மதிகளைக் கண்காணிக்கக்கூடிய இக்கப்பல் ஆகஸ்ட் 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டைக்கு வரவிருந்தது. எனினும் இதன் வருகையை ஒத்திவைக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு கோரியிருந்தது.

‘ யுவான் வாங் 5’ கப்பலானது 750 கிலோமீட்டர் சுற்று வட்டத்தில் அமைந்துள்ள இடங்கள் தொடர்பிலான தரவுகளை பெற்றுக்கொள்ளும் வசதி கொண்டது என கூறப்படுகிறது.

இக்கபப்ல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையுமால், இந்தியாவின் தெற்கு பிரதேசத்தின் பாதுகாப்பு நிலையங்கள், மற்றும் 6 துறைமுகங்கள் தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமென செய்திகள் வெளியாகியிருந்தன.

கல்பாக்கம் அணுமின் நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையம், கொச்சியில் உள்ள தெற்கு கடற்படை முகாம் உள்ளிட்ட முக்கிய இடங்களும் இவற்றில் அடங்கும் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில், இக்கப்பல் இலங்கை வர அனுமதிக்கப்பட்டதையடுத்து இன்று காலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது.

இதேவேளை இக்கப்பல் வருகையை முன்னிட்டு இலங்கையிலுள்ள சீனத் தூதுரகம் வரவேற்பு வைபவமொன்றை நடத்தவுள்ளதாக அறியமுடிகின்றது.

Related Posts