Ad Widget

20 மாவட்டங்களுக்கு கடுமையான மழை தொடர்பான சிவப்பு அறிவிப்பு

நாட்டில் உள்ள 20 மாவட்டங்களுக்கு கடுமையான மழை தொடர்பான சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு நாளை காலை 7 மணிவரை செல்லுபடியாகும் எனவும் குறிப்பிடப்படுகின்றது. கொழும்பு, திருகோணமலை, அனுராதபுரம், புத்தளம், பொலன்னறுவை, மாத்தளை, மட்டக்களப்பு, குருநாகல், கம்பஹா,...

அரச அதிகாரிகளுக்கான விஷேட சுற்றறிக்கை!!

அரச நிறுவனங்களுக்கு பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கடிதங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கான பதில்களை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது. அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே மாயாதுன்னவின் கையொப்பத்துடன் இது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கொவிட்-19 தொற்று நிலைமை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடி...
Ad Widget

பெட்ரோலை ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாட்டினை வந்தடைந்தது!

36 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் பெட்ரோலை ஏற்றிய கப்பலொன்று நேற்றிரவு நாட்டை வந்தடைந்துள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது. கப்பலிலிருந்து பெட்ரோலை இறக்கும் பணிகள் இன்று(புதன்கிழமை) ஆரம்பிக்கப்படும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

மத்திய அரசாங்கம் புலம்பெயர் அமைப்புக்களின் தடையை நீக்கியமை வேடிக்கைக்குரியது- பார்த்தீபன்

வெளிநாடுகளில் இருந்து வரும் நன்கொடைகள் மற்றும் முதலீடுகள் என்பனவற்றை தமிழ் பிரதேசங்களுக்கு கிடைக்கவிடாமல் தடுக்கும் மத்திய அரசாங்கம், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் தடைகளை நீக்கி, இலங்கையில் முதலீடு செய்யுமாறுக் கோரியுள்ளமை வேடிக்கைக்குரியது என்று யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் தெரிவித்துள்ளார். ஜப்பான் அரசாங்கம் யாழ்.மாநகர சபைக்கு கழிவகற்றல் வாகன இறக்குமதி செலவுக்கு என வழங்கிய...

கொழும்பில் காணாமல்போயுள்ள தமிழ் மாணவன்! தாயார் விடுத்துள்ள அவசர வேண்டுகோள்!!

கொழும்பில் கடந்த இரண்டு மாதங்களாக காணாமல்போயுள்ள மாணவன் தொடர்பில் தகவல் தெரிந்தால் உடனடியாக தகவல் தருமாறு மாணவனின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு தனியார் கல்லூரியில் படித்து வரும் சம்சுதன் மன்னர் மன்னர் (ரஷீத்) எனும் மாணவன் கடந்த ஜூலை மாதம் 10 ஆம் திகதி முதல் காணாமல்போயுள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக இவர் தொடர்பில்...

மூடப்படும் நூற்றுக்கணக்கான எரிபொருள் நிரப்பு நிலையங்கள்!

நாட்டில் தற்போது மீண்டும் எரிபொருள் வரிசைகள் அதிகரித்து வருகின்றமை தொடர்பில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ச தகவலொன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி பெற்றோலியக் கூட்டுத்தாபனம், காசோலை முறைமையை இடைநிறுத்தியதன் காரணமாக, ஒரே தடவையில் பணத்தை செலுத்தி எரிபொருளைப் பெற்றுக் கொள்ள முடியாததாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். கொழும்பில் நேற்று...

அரிசி உள்ளிட்ட 48 பொருட்கள் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை!

பொருட்கள் விற்பனை, உற்பத்தி மற்றும் இறக்குமதி குறித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. 48 வகையான பொருட்களின் உற்பத்தி, களஞ்சியப்படுத்தல் மற்றும் விற்பனை தொடர்பில் பல நிபந்தனைகளை விதித்து இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்று அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் அல்லது எந்தவொரு நபரும் கோரும்...

சொந்த தாயின் மரண தண்டனையை நிறைவேற்றிய மகள்!!

ஈராக்கில் உள்ள தெஹ்ரானில் பெற்ற மகள் தனது தாயின் மரண தண்டனையை நிறைவேற்ற கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். இந்த மகள் தாய் நின்றிருந்த நாற்காலியைத் தள்ளச் சொல்லியுள்ளனர். ஈரானின் சர்வாதிகார ஆட்சியால் மீண்டும் ஒருமுறை கொடூரமான தண்டனையின் இந்த வழக்கு இதயத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த பெண்ணின் பெயர் மரியம் கரிமி என்று கூறப்படுகிறது. 13 ஆண்டுகளுக்கு முன்பு அவர்...

60 வயதுக்கு மேற்பட்ட சகலரையும் டிசம்பருக்குள் ஓய்வுபெற வைக்க நடவடிக்கை!

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் வெற்றி கண்டுள்ளதாவும், தற்போது இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இடைக்கால வரவு – செலவுத்திட்டத்தினை நாடாளுமன்றத்தில் முன்வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்ததும் அது குறித்து நாடாளுமன்றத்திற்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். செப்டம்பர் முதலாம் திகதி...

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு யாழில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ். நாவலர் வீதியில் உள்ள (UNHCR) அலுவலகம் முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்து. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களோடு யாழ். பல்கலைகழக மாணவ பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடதக்கது. இதேவேளை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் முன்றில் கிளிநொச்சி காணாமல்...

புதுக்குடியிருப்பு நகரில் போராட்டத்துக்கு ஆதரவாக பூரண கடையடைப்பு!!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது இன்று 2000 நாட்களை கடக்கின்ற நிலையில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாகிய இன்று (30) தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற நீதியான சர்வதேச விசாரணையை வலியுறுத்தி புதுக்குடியிருப்பு நகர்...

செப்டம்பர் 7 வரை அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை!

மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அடுத்த சில நாட்களில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலைமை காணப்படுகின்றது. மேல் மாகாணத்திலும் காலி மற்றும்...

போதுமான எரிபொருள் இருப்பு உள்ளதாக மீண்டும் அறிவிப்பு!

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்திற்காக பயன்படுத்தப்படும் பௌசர்களின் எண்ணிக்கை 100 ஆக குறைவடைந்துள்ளன. இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார். முன்னதாக எரிபொருள் விநியோகத்திற்காக சுமார் 350 முதல் 400 பௌசர்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறானதொரு பின்னணியிலேயே நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் எரிபொருள் வரிசைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது....

70 பேருக்கு கொவிட் தொற்று!! 5 பேர் உயிரிழப்பு!!

நாட்டில் மேலும் 5 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். உயிரிழந்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 1 ஆணும் 3 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 1 ஆணும் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, நாட்டில் மேலும் 70 பேருக்கு கொவிட் தொற்று...

யாழில் போதைப் பொருளை நுகர்ந்த 2 பெண்கள் கைது!

யாழ்ப்பாணத்தில் பாழடைந்த வீடு ஒன்றுக்குள் வைத்து போதைப் பொருளை நுகர்ந்து கொண்டிருந்த 2 பெண்களை நேற்றிரவு (29) பொலிஸார் கைது செய்ததுடன், அவர்கள் வசமிருந்த 2 கிராம் போதைப் பொருளையும் கைப்பற்றினர். யாழ்ப்பாணம் பொம்மைவெளிப் பகுதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் வைத்து போதைப் பொருளை நுகர்ந்து கொண்டிருப்பதாக, யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு...

இன்று முதல் 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு!

நாட்டில் இன்று(செவ்வாய்கிழமை) முதல் எதிர்வரும் 2ஆம் திகதி வரை 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய, ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில், காலையில் 1 மணித்தியாலமும், இரவில் 1 மணித்தியாலமும் 20...

பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக தொடர்ந்தும் குரல் கொடுக்க வேண்டும்- சுரேஷ்

பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக தெற்கு அரசியல்வாதிகளும் மனித உரிமை அமைப்புக்களும் தொடர்ந்தும் குரல் கொடுக்க வேண்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெறிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கொடுமையை இன்றளவிலும் தமிழ் மக்கள் அனுபவித்து வருகின்றனர்....

இலங்கையில் 300 ரூபாவாக அதிகரிக்கும் பாணின் விலை!! யாழில் 15 நாட்களில் வெதுப்பகங்களை மூடும் நிலை!!

எதிர்வரும் நாட்களில் பாண் ஒரு இறாத்தலின் விலையை 300 ரூபாவாக அதிகரிக்க நேரிடும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது. சந்தையில் கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு நிலவுவதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன குறிப்பிட்டுள்ளார். அத்துடன், டொலர் நெருக்கடி காரணமாக கோதுமை மா இறக்குமதியை...

ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் சூரியனில் விழும் பனி போல் இறந்து விடுவார்கள் – உக்ரைன் எச்சரிக்கை

ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் சூரியனில் விழும் பனி போல் இறந்து விடுவார்கள் என உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை 185வது நாளை தொட்டிருக்கும் நிலையில், ரஷ்ய படைகளின் தாக்குதல் ஜபோரிஜியாவிலும், உக்ரைனின் தெற்கு பகுதிகளிலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நாட்டின் விமானப் போக்குவரத்து தினத்தில் பேசிய உக்ரைனிய...

மன்னாரில் பாரிய போராட்டம்!

மன்னார் தீவு பகுதியில் இடம் பெற்று வரும் கனிய வள மண் அகழ்வு மற்றும் உயர் வலு கொண்ட காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மன்னாரில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இடம் பெற்ற இந்த போராட்டத்தில் மன்னார் மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் பல...
Loading posts...

All posts loaded

No more posts