Ad Widget

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்!!

விலை சூத்திரத்தின் அடிப்படையில் எரிபொருள் விலைகளில் எந்தவொரு மாற்றத்தினையும் ஏற்படுத்தாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஒவ்வொரு மாதமும் முதலாம் மற்றும் 15 ஆம் திகதிகளில் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படுமென மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார்.

இதன்படி, எரிபொருள் விலை திருத்தம் நேற்று இரவு மேற்கொள்ளப்படுமென எதிர்பார்க்கப்பட்ட போதும், இந்த விடயம் தொடர்பில் எவ்வித அறிவிப்புகளும் விடுக்கப்படவில்லை.

இதனிடையே, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை மிகவும் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, WTI தர மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 88 தசம் 42 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.

அத்துடன், Brent தர மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 93 தசம் 91 அமெரிக்க டொலராகவும் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts