Ad Widget

பிரித்தானியா வேண்டுமென்றே ஆத்திரமூட்டுகின்றது – ரஷ்யா கடும் குற்றச்சாட்டு

பிரித்தானியா வேண்டுமென்றே ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

பிரித்தானியா தனது RC-135 உளவு விமானத்தை ரஷ்யா மீது பறக்க அனுமதி கோரியதாகவும், இது வேண்டுமென்றே ஆத்திரமூட்டும் நடவடிக்கை என்று பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ரஷ்ய வான்பரப்பில் எந்தவிதமான அத்துமீறல்களையும் தடுக்கும் பொறுப்பு ரஷ்யாவின் விமானப்படைக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் மேலும் கூறியுள்ளது. இதேவேளை, பிரித்தானிய உளவு விமானம் ஒன்று ரஷ்ய வான்வெளியை மீறிச் சென்றதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ரஷ்ய போர் விமானம் ஒன்று பிரித்தானிய விமானத்தை ரஷ்ய வான்வெளியில் இருந்து வெளியேற்றியதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பேரண்ட்ஸ் கடலுக்கும் வெள்ளைக் கடலுக்கும் இடையில் அமைந்துள்ள கேப் ஸ்வியாடோய் நோஸ் அருகே ரஷ்ய விமான எல்லையை பிரித்தானிய உளவு விமானம் மீறியதாக பாதுகாப்பு அமைச்சு மேலும் கூறியுள்ளது.

Related Posts