Ad Widget

ரஷ்ய அதிபரின் மூளையாக செயற்பட்டவரின் மகள் குண்டுவெடிப்பில் பலி

ரஷ்ய அதிபர் புடினின் நெருங்கிய உதவியாளரின் மகள் கார் வெடித்து பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ரஷ்ய அதிபர் புடினின் முக்கிய ஆலோசகரும், புடினின் மூளையாகவும் செயற்பட்ட அலெக்சாண்டர் டக்கினை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் அவரது மகள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பத்திரிக்கையாளராவும், அரசியல் விமர்சகராகவும் பணியாற்றிவந்த அவரது மகள் டார்யா டகினா (Darya Dugina), நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு தனது தந்தையின் காரில் வீடு திரும்பிய போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

அவர் பயணித்த காரில் முன்கூட்டிய பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கிரிமியா மற்றும் உக்ரைனில் ரஷ்ய இராணுவ நடவடிக்கைகளுக்கு பின்னால் இருந்தவர் அலெக்சாண்டர் டுகின் என்றும் கூறப்படுகின்றது.

Related Posts