Ad Widget

அடுத்த மூன்று வாரங்கள் ஆபத்தானவை – இராணுவத் தளபதி எச்சரிக்கை!!

எதிர்வரும் மூன்று வாரங்கள் மிகவும் ஆபத்தானவை என எச்சரித்துள்ள இராணுவத் தளபதி சவேந்திர சில்வா புத்தாண்டு காலப்பகுதியில் மக்களின் நடமாட்டம் அதிகரித்தமை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தற்போதை சூழலில் மக்கள் வீட்டை விட்டு வெளியேறும் போது மக்கள் முகமூடி அணிவது மிகவும் அவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், வார இறுதி நாட்களில்...

பல்கலைகழங்களை ஆரம்பிக்கும் திகதி ஒத்திவைப்பு!!

பல்கலைகழங்களை ஆரம்பிக்கும் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜீ.எல் பிரிஸ் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 27 ஆம் திகதி பல்கலைகழகங்கள் மீள ஆரம்பிப்படும் என ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்து. இருப்பினும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள காரணத்தால் பல்கலைகழக ஆரம்பம் மேலும் 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Ad Widget

யாழ். நகரப்பகுதியில் கிருமித் தொற்று நீக்கி மருந்து விசுறும் செயற்பாடு முன்னெடுப்பு!

இராணுவத்தினரால் யாழ். நகரப்பகுதி சுத்தமாக்கி கிருமித் தொற்று நீக்கி மருந்து விசுறும் செயற்பாடு முன்னெடுப்பு. யாழ்ப்பாண நகரப் பகுதியில் அண்மையில் அதிகளவானோர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய யாழ்ப்பாண நகரின் பஸார் வீதிப் பகுதி ராணுவத்தினரால் நீரூற்றி கழுவப்பட்டு கிருமித் தொற்று நீக்கும் மருந்து விசிறும் செயற்பாடு இன்று (வியாழக்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது. இராணுவத்தின் 51-வது படையணி...

கொவிட் பரவல் – பாடசாலைகளை மூடுவதற்கு எவ்வித தீர்மானமும் இல்லை

நாட்டில் தற்போது நிலவும் கொவிட் வைரஸ் தொற்று பரவல் நிலைமையைப் பொறுத்து பாடசாலைகளை மூடுவதற்கு இதுவரையிலும் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ஏதேனுமொரு பாடசாலையில் கொவிட் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டால் இதற்கு முன்னர் நடைமுறைப்படுத்திய வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

வடக்கில் மேலும் 21 பேருக்கு கோரோனா தொற்று; 11 பேர் யாழ்ப்பாணம் பொலிஸார்

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் 11 பேர் உள்பட வடக்கில் மேலும் 21 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 788 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. 21...

கொடிகாமத்தில் இராணுவத்தினர் துப்பாக்கி சூடு – கடத்தல்காரர் தப்பியோட்டம்

கொடிகாமம் பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றி சென்ற உழவு இயந்திரத்தின் மீது இராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். கொடிகாமம் பாலாவி காட்டுப்பகுதியில் இராணுவத்தினர் நேற்று மாலை 6.30 மணியளவில் சுற்று காவல் பணியில் (ரோந்து) ஈடுபட்டிருந்த போது சட்டவிரோத மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை மறித்தகாகவும் ,அதன் போது, இராணுவத்தினரின் கட்டளையை மீறி அவர்கள்...

அமெரிக்க மிஷன் உரிமை கோரிய ஆதனம் யூனியன் கல்லூரிக்கே சொந்தம்!!

அமெரிக்கன் மிஷன் உரிமை கோரும் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் பராமரிப்பில் உள்ள ஆதனத்தை கல்லூரியிடம் பொறுப்பளித்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் இன்று கட்டளையிட்டது. அத்துடன், அமைதிக்கு பங்கம் விளைவித்தனர் என குற்றஞ்சாட்டப்பட்ட அமெரிக்க மிஷனின் அருட்தந்தையர்கள் இருவரை தலா 5 லட்சம் பெறுமதியான பிணை முறியில் விடுவித்த நீதிமன்று, அவர்கள் இருவரும் 6 மாதகாலத்துக்குள் அமைதிக்கு...

வடக்கில் எதிர்வரும் வாரங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் – ஆ. கேதீஸ்வரன்

எதிர்வரும் மூன்று வாரங்கள் வடக்கில் கொரோனா தொற்று வீதம் அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள கொரோனா நிலைமைகள் தொடர்பில் மதத் தலைவர்களுக்கும், மாகாண சுகாதார பிரிவினருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், “வடக்கு மாகாணத்தில் அண்மைய நாட்களில்...

யாழில்.நாட்டு துப்பாக்கி உட்பட வெடிமருந்துகளுடன் மூவர் கைது!

யாழ். வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்நாட்டு தயாரிப்பிலான துப்பாக்கியும் அவற்றுக்கு பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் மற்றும் பன்றி இறைச்சி என்பவற்றுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுண்டிக்குளம் காட்டுப் பகுதியில் மூவர் வேட்டையில் ஈடுபடுவதாக கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மீட்கப்பட்ட துப்பாக்கி, வெடிபொருட்கள்...

யாழ்.மரியன்னை தேவாலயத்தில் அஞ்சலி நிகழ்வுகள்!

ஈஸ்டர் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் மரியன்னை தேவாலயத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது. கடந்த 2019ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் , நட்சத்திர விடுதிகளில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 39 வெளிநாட்டவர்கள் உட்பட சுமார் 250 இற்கும் மேற்பட்டோரின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. 500இற்கும் மேற்பட்டவர்கள் அவயவங்களை இழந்து...

இலங்கையில் கோவிட்-19 தடுப்பூசி பெற்ற 6 பேருக்கு குருதிக் கட்டிகள்; மூவர் சாவு

ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா-செனெகா கோவிட்-19 தடுப்பூசி பெற்ற பின்னர் இலங்கையில் ஆறு பேருக்கு குருதிக் கட்டிகள் ஏற்பட்டமை பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.அவர்களில் 03 பேர் உயிரிழந்துவிட்டதாப அமைச்சர் குறிப்பிட்டார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிலையியற் கட்டளையின் கீழ் கோரிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி...

திருநெல்வேலி பாரதிபுரத்தை சேர்ந்த ஐவர் உள்ளிட்ட 7பேருக்கு கொரோனா!!

யாழ்ப்பாணத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 643 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அதில் 7 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. திருநெல்வேலி பாரதிபுரம்...

ஈஸ்டர் தாக்குதலில் உயிர்நீத்தவர்களை நினைவுகூர இரண்டு நிமிடங்கள் ஒதுக்குங்கள் – பேராயர் அழைப்பு!

ஈஸ்டர் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக இன்று (புதன்கிழமை) காலை 8.45மணிக்கு இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில், பேராயர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். இதேநேரம், இந்தத் தாக்குதல்களால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கொழும்பு –...

பருத்தித்துறை- அல்வாயில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு- மூவர் படுகாயம்

வடமராட்சி- பருத்தித்துறை, அல்வாய் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த மூவர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அல்வாய் பகுதியினைச் சேர்ந்த 2பிள்ளைகளின் தந்தையான மு.கௌசிகன் (வயது 31) என்பவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். உறவினர்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் பின்னர் வாள்...

கூட்டமைப்பின் அறிக்கையினால் அரசு மகிழ்ச்சி!

மாகாணசபை தேர்தலை விரைவில் நடத்த வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையினால் தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாக கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஏனெனில், கடந்த அரசாங்கத்தில் மாகாணசபை தேர்தல் நடத்தப்படாமல் தள்ளிவைக்கப்பட்டதில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தொடர்புபட்டிருந்தது என கூறினார். முன்னாள் அரசாங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்டு தவறாக அங்கீகரிக்கப்பட்ட சட்டமூலம் காரணமாக மாகாணசபை தேர்தலை நடத்த...

நிலாவரையில் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளுக்கு தடை ஏற்படுத்தியதாக வலி.கிழக்கு தவிசாளர் மீது வழக்கு

நிலாவரையில் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளின் அரச கடமைக்கு தடை ஏற்படுத்தினார் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்ப் பலகையினை அகற்றினார் எனக் குற்றச்சாட்டப்பட்ட ஏற்கனவேயுள்ள விசாரணையில் உள்ள வழக்கு என மத்திய அரசின் திணைக்களங்களால் தாக்கல் செய்யப்பட்ட இருவேறு...

ஏப்ரல் 27இல் அனைத்து பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகளும் மீள ஆரம்பம்

ஏப்ரல் 27 செவ்வாய்க்கிழமை நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுகாதார பரிந்துரைகளுக்கு இணங்க பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். “விடுதிகளை திறப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, பல்கலைக்கழகத்தின் தொடக்கத்தில் 4 மற்றும் 3 ஆம் ஆண்டு மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். முதல்...

உலக சுகாதார ஸ்தாபனத்தால் அங்கீகரிக்கப்படாத சீன தடுப்பூசியை அரசு தர முயற்சிக்கிறதா? – சிவாஜி கேள்வி

உலக சுகாதார ஸ்தாபனத்தால் அங்கீகரிக்கப்படாத சீன தடுப்பூசியை அரசு இலங்கை மக்களுக்கு வழங்க முயற்சிக்கிறதா? என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். யாழில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இலங்கையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் மந்த கதியிலேயே நடைபெறுகிறது. குறிப்பாக...

யாழ்ப்பாணத்தில் நான்கு பொலிஸார் உட்பட மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாணத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அதன்படி யாழ். மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 6 பேருக்கு தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களில் இருவர் சுயதனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் என்றும் ஏனைய நால்வர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் என்றும் வைத்தியர்...

தமிழ் அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் விமர்சிக்கும் செயற்பாடுகளை நிறுத்தவேண்டும் – சிவாஜி

தமிழ் அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் விமர்சிக்கு செயற்பாடுகளை நிறுத்தவேண்டும் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்கால மாகாண முதலமைச்சர்வேட்பாளர் தொடர்பில் அரசியல்வாதிகளால் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் தொடர்பில், இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுமா?...
Loading posts...

All posts loaded

No more posts