Ad Widget

சுகாதார நடைமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை – வடக்கு ஆளுநர்

சுகாதார வழிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளதாக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார். நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “நேற்றைய அறிக்கையின்படி கொரோனா பரவல் வடக்கில் கட்டுப்பாட்டிற்குள்...

யாழ்.வண்ணார்பண்ணை காமாட்சி அம்பாள் ஆலய தலைவர் மற்றும் செயலாளர் கைது!

கொவிட்-19 கட்டுப்பாட்டு விதிகளை மீறி, தேர்த் திருவிழாவை நடத்திய குற்றச்சாட்டில் யாழ்.வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த இருவரும், யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் ஏற்படுவதற்கான சூழ்நிலையை உருவாக்கிக்கொடுத்தார்கள் என குற்றஞ் சாட்டப்பட்டு, வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது. யாழ்.வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள்...
Ad Widget

இலங்கையில் கொரோனாவால் மேலும் 8 உயிரிழப்புகள் பதிவு – ஒரேநாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 8 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. பொல்கொல்ல, ஹெட்டிபொல, மத்துகம, நுகேகொட, பன்னிப்பிட்டிய, அம்பகஹபலஸ்ஸ, வத்தள மற்றும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர ஆகிய பிரதேசங்களிலேயே இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன. அத்துடன், 62, 45, 53, 56, 76, 48 மற்றும் 57 வயதுடைய ஆண்களும்...

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!!

கொரோனா தொற்று பரவல் நிலையைக் கருத்திற்கொண்டு நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் ஏப்ரல் 30 ஆம் திகதிவரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். ஏற்கனவே திருகோணமலை, அம்பாறை, கொழும்பு, மேல் மாகாணம், வடமேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் மற்றும் புறநகர் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் இராணுவத்தினர்

யாழ்ப்பாணம் மற்றும் புறநகர் பகுதிகளிலுள்ள பிரதான சந்திகளில், தீவிர கண்காணிப்பு பணியில் இராணுவத்தினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். குறித்த பணிக்காக கொக்குவில் சந்தியில், தகர கொட்டகை முகாம் ஒன்றினையும் அமைத்துள்ள இராணுவத்தினர் முகக்கவசத்தை உரியமுறையில் அணியாதவர்களை எச்சரித்து, உரிய முறையில் அணியுமாறும் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைபிடிக்குமாறும் மக்களை அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தல்...

யாழ்ப்பாணம் முடக்கப்படுமா?- முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார் அரசாங்க அதிபர்!!

யாழ்ப்பாணத்தை தற்போது முடக்குவது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் க.மகேசன் மேலும் கூறியுள்ளதாவது, யாழில் நேற்று மாத்திரம் 13 பேருக்கு கொரோனா வைரஸ்...

நாட்டினுள் தற்போது வைரஸ் காய்ச்சல் ஒன்றும் காணப்படுகிறது!!

நாட்டினுள் தற்போது வைரஸ் காய்ச்சல் நிலமை ஒன்று காணப்படுவதாக விஷேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். டெங்கு காய்ச்சலை போன்று இந்த வைரஸ் காய்ச்சல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வட்டுவாகலில் வெடிபொருள் வெடித்ததில் இளைஞன் சாவு!!

முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்துக்கு அருகில் உள்ள கடற்படை முகாமுக்கு முன்பாக வெடிபொருள் ஒன்று வெடித்ததில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மற்றொரு இளைஞன் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 1.40 மணியளிவில் இடம்பெற்றது. சம்பவத்தில் முல்லைத்தீவு செல்வபுரத்தைச் சேர்ந்த சந்திரகுமார் திஷாந்த் (வயது-19) என்ற இளைஞன் சம்பவ...

அவசர சிகிச்சைப் பிரிவுகளில் இடப்பற்றாக்குறை நிலவுகின்றது- பிரசன்ன குணசேன

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், அவசர சிகிச்சைப் பிரிவுகளில் இடப் பற்றாக்குறை தற்போது நிலவுகின்றதென அரச மருந்தாக்க கூட்டுதாபனத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன கூறியுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பிரசன்ன குணசேன மேலும்...

இலங்கையில் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா தொற்று – மேலும் மூன்று உயிரிழப்புகள் பதிவு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் மூவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அவிசாவளை, கந்தான மற்றும் கல்பாத்த ஆகிய பகுதிகளிலேயே இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. 92 வயதுடைய ஆணொருவரும் 70 வயதுடைய பெண்கள் இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 647ஆக அதிகரித்துள்ளது....

வடக்கு மாகாணத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று!!

வடக்கு மாகாணத்தில் மேலும் 15 பேருக்கு நேற்று திங்கட்கிழமை கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ். சாவகச்சேரியில் நால்வருக்கும், பருத்தித்துறையில் 2 பேருக்கும் தெல்லிப்பழையில் இருவருக்கும் சண்டிலிப்பாயில் ஒருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதேவேளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்ற மூவருக்கு கொரோனா...

கொரோனா பரவல்: நாடு முடக்கப்படுமா என்பது தொடர்பாக இராணுவத் தளபதியின் அறிவிப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவரும் நிலையில் நாட்டை முடக்கும் தீர்மானம் எதுவும் இல்லையென இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை, வார இறுதி நாட்களில் எந்த நிகழ்வுகளையும் நடத்த வேண்டாமெனவும் பொதுமக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்குமாறும் அவர் கோரியுள்ளார். இதுதொடர்பாக கொழும்பில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே இராணுவத் தளபதி இதனைக் கூறியுள்ளார். அத்துடன்,...

நாட்டில் அனைத்து பாடசாலைகளையும் மூடுமாறு கோரிக்கை!!

கோவிட் -19 வைரஸ் பரவுவதால் நாட்டின் அனைத்து பாடசாலைகளையும் விரைவில் மூடுமாறு இலங்கை அதிபர்கள் சங்கம் கல்வி அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் பியாசிரி பெர்னாண்டோ, தற்போதைய சூழ்நிலையில் பாடசாலைகளை மூடப்படாவிட்டால் பிரச்சினை ஏற்படும் என்று சுட்டிக்காட்டினார்.

தீவிர சிகிச்சை பிரிவுகளில் கோவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு ஆபத்தானது – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்ட திறனை மீறினால், உயிரிழப்புகளின் எண்ணிக்கையை குறைக்க முடியாது என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கிறது. ஊடகங்களுடன் பேசிய சங்கத்தின் ஊடகக் குழுவின் உறுப்பினர் மருத்துவர் பிரசாத் கொலம்பேஜ், இந்த நேரத்தில் வைரஸ் பரவுவதை நிறுத்தாவிட்டால், நாடு மீண்டும் மூடப்பட வேண்டும் அல்லது கடுமையான...

யாழ்ப்பாணத்தில் மேலும் 16 பேருக்கு கோரோனா தொற்று

யாழ்ப்பாணத்தில் மேலும் 16 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடம் என்பவற்றில் 396 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. 17 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர...

உடைக்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி மீண்டும் அதே இடத்தில் திறப்பு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்பட்டு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதி இரவு, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள், தமிழ் உணர்வாளர்கள் அரசியல் தலைவர்கள் கண்டனம் வெளியிட்டதோடு பல்கலைக்கழக மாணவர்கள்...

வயோதிபர்கள் வசிக்கும் வீடுகளில் கைவரிசை காட்டிய முக்கிய புள்ளி பிடிபட்டார்- அவருடன் மேலும் அறுவர் கைது!

யாழ்ப்பாணத்தில் வயோதிபர்கள் வசிக்கும் வீடுகளைக் குறிவைத்து நள்ளிரவில் புகுந்து வாள்களைக் காண்பித்து கொள்ளையிட்டுவரும் கும்பலின் பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து 18 பவுண் தங்க நகைகள், காசு மற்றும் வாள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை, இந்த சந்தேகநபரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட நகைகளை வாங்கி விற்றமை மற்றும் அடகு பிடித்தமை போன்ற குற்றச்சாட்டில் மேலும்...

தமிழ் இளைஞர், யுவதிகளை பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை- அஜித் ரோஹன

வடக்கு மாகாணத்தின் பொலிஸ் நிலையங்களுக்கு தமிழ் இளைஞர், யுவதிகளை இணைத்துக் கொள்வதற்கு பொலிஸ் தலைமையகம் அர்ப்பணிப்புடனான சேவையினை எதிர்காலத்தில் வழங்கும் என இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் சிரேஷ்ட அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரித்துள்ளார். இதனூடாக தமிழ் மொழி இளைஞர், யுவதிகள் பொலிஸ் நிலையத்தில் முழுமையான பங்களிப்பினை வழங்க எதிர்காலத்தில் ஒன்றிவது காலத்தின் கட்டாயமாகும் என...

திருநெல்வேலி-பாரதிபுரம் பகுதி விடுவிக்கப்படுகிறது- யாழ். மாவட்ட மக்களுக்கும் எச்சரிக்கை!

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள பாரதிபுரம் பகுதி முடக்கத்திலிருந்து விடுவிக்கப்படுவதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். இதன்படி, கடந்த 28 நாட்களாக கண்காணிப்பு வலயமாக இருந்த பாரதிபுரம் பகுதி நாளை வெள்ளிக்கிழமை முதல் விடுவிக்கப்படவுள்ளது. அத்துடன், யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்று நிலைமை தீவிரமடையலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மக்கள் சுகாதார...

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் வைத்தியசாலையில் அனுமதி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ். சிறீ சற்குணராசா மாரடைப்பினால் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் இன்று (வியாழக்கிழமை) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நாளைய தினம் வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவுத்தூபியினை காலை துணைவேந்தர் திறந்து வைக்கவிருந்த நிலையில் இன்றைய தினம் அவர் மாரடைப்பினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால்...
Loading posts...

All posts loaded

No more posts