Ad Widget

தீவிர சிகிச்சை பிரிவுகளில் கோவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு ஆபத்தானது – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்ட திறனை மீறினால், உயிரிழப்புகளின் எண்ணிக்கையை குறைக்க முடியாது என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கிறது.

ஊடகங்களுடன் பேசிய சங்கத்தின் ஊடகக் குழுவின் உறுப்பினர் மருத்துவர் பிரசாத் கொலம்பேஜ், இந்த நேரத்தில் வைரஸ் பரவுவதை நிறுத்தாவிட்டால், நாடு மீண்டும் மூடப்பட வேண்டும் அல்லது கடுமையான முடிவுகள் எடுக்கப்பட வேண்டியிருக்கும் என்று தெரிவித்தார்.

“தீவிர சிகிச்சை பிரிவுகளில் தற்போது 35 க்கும் மேற்பட்ட கோவிட்-19 நோயாளிகள் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

கோரோனா வைரஸின் புதிய திரிபு ஏற்பட அதிக ஆபத்து உள்ளது” என்றும் மருத்துவர் கொலம்பேஜ் சுட்டிக்காட்டினார்.

Related Posts