Ad Widget

ஏப்ரல் 27இல் அனைத்து பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகளும் மீள ஆரம்பம்

ஏப்ரல் 27 செவ்வாய்க்கிழமை நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சுகாதார பரிந்துரைகளுக்கு இணங்க பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

“விடுதிகளை திறப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, பல்கலைக்கழகத்தின் தொடக்கத்தில் 4 மற்றும் 3 ஆம் ஆண்டு மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் பின்னர் தொடங்கப்படும்.

பல்கலைக்கழக பரீட்சைகளை நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு ஏற்பாடு செய்துள்ளது.

இதற்கிடையில், 2021 ஓகஸ்டில் பாடசாலை விடுமுறைகள் இந்த ஆண்டு ஒரு வாரமாக வரையறுக்கப்பட்டுள்ளது.

பாடத்திட்டத்தை நிறைவு செய்ய வேண்டிய அவசியம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 4 முதல் ஒக்டோபர் 30 வரை நடைபெறும். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.

க.பொ.த சாதாரணதரப் பரீட்சை 2022 ஜனவரி கடைசி வாரத்தில் நடைபெறும்” என்றும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

Related Posts