Ad Widget

எதிர்வரும் நாட்களில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எச்சரிக்கை!!

நாட்டில் எதிர்வரும் நாட்களில் கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் சில வாரங்கள் மிகுந்த அவதானம் மிக்கதாகும் என்று அந்தப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். பண்டிகை காலப்பகுதியில் சிலர் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காமையினாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழில் கொரோனா நோய் தொற்று காரணமாக ஒருவர் உயிரிழப்பு!

கொரோனா நோய் தொற்று காரணமாக யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். கல்வியங்காடு , வீரபத்திரர் கோவிலடியை சேர்ந்த 77 வயதான முதியவரே உயிரிழந்துள்ளார். யாழ்.போதனா வைத்திய சாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார். குறித்த சடலத்தை சுகாதார விதிமுறைகளின்...
Ad Widget

பாடசாலைகளை உடைத்து 40 லட்சம் ரூபாய் பெறுமதியான பொருள்கள் திருட்டு; மூவர் சிக்கினர்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் 9 பாடசாலைகளை உடைத்து 40 லட்சம் பெறுமதியான இலத்திரனியல் கற்றல் உபகரணங்களை திருடிய குற்றச்சாட்டில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை, முழங்காவில், குமுழமுனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர்கள் மூவரே இவ்வாறு கைது...

யாழ். பல்கலைக்கழகத்தில் மீள அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திறக்கப்படுகிறது!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் மீள அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி எதிர்வரும் ஏப்ரல் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது. தமது அழைப்பின் பேரில், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர் எஸ்.ஸ்ரீசற்குணராசா திறந்துவைப்பார் என பல்கலை மாணவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி பல்கலைக்கழக நிர்வாகத்தினால் கடந்த ஜனவரி எட்டாம்...

திருநெல்வேலி சந்தையுடன் தொடர்புடைய 11 பேர் உட்பட வடக்கில் 14 பேருக்குக் கொரோனா!

வடக்கில் மேலும் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடங்களில் 386 பேரின் மாதிரிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்படி, யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டியுள்ள வர்த்தக...

யாழ் இளைஞர்களை இராணுவத்தில் இணைத்துக்கொள்வது குறித்து பாதுகாப்பு பதவி நிலை பிரதானி கருத்து தெரிவிப்பு

"கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வரும் ஆட்சேர்ப்புப் பணியின் போது 1600 க்கும் மேற்பட்ட யாழ்ப்பாண தமிழ் இளைஞர் யுவதிகளை இலங்கை இராணுவத்தில் சேர்ப்பது, அந்த இளைஞர்கள் எங்கள் அமைப்பின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் உயர்ந்த மரியாதையையும் கடுமையாக உறுதிப்படுத்துகிறது தடைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், பல்வேறு அதிருப்தி மற்றும் பிளவுபடுத்தும் கூறுகள் அவர்களைத் தூண்ட...

இராணுவத் தளபதியால் யாழ்பாணத்தில் மற்றுமொரு வீடு கையளிப்பு

பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியும், கோவிட் -19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் யாழ்ப்பாணத் தீபகற்பத்திற்கான தனது விஜயத்தின் போது யாழ்ப்பாணத்தின் கிராண்ட் பஜாரில் இராணுவத்தால் வரிய குடுமபத்திற்காக கட்டப்பட்ட புதிய வீட்டை (12)கையளித்தார். யாழ் பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்தா...

கொரோனா வைரஸால் அனைவரும் திடமான மனதுடன் வாழ வேண்டும்!

கொரோனா வைரஸ் குறித்த செய்திகள், பாதிப்புகள், இழப்புகள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகுகின்றனர். இதுவும் ஒருவித பாதிப்பே என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அனைவரும் திடமான மனதுடன் வாழ பழகி கொள்ள வேண்டும் என மனோ தத்துவ நிபுணர்கள் அறிவுரை வழங்குகின்றனர். அந்த பரிந்துரைகள் பினவருமாறு: கொரோனா...

திருநெல்வேலியில் எண்மர் உள்பட வடக்கில் 10 பேருக்கு கோரோனா தொற்று

யாழ்ப்பாணத்தில் மேலும் 8 பேருக்கும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தலா ஒருவரும் என வடக்கு மாகாணத்தில் மேலும் 10 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 186 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. 10...

வடமராட்சியில் எஸ்ரிஎப் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகாயம்!!

சிறப்பு அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி படுகாயமடைந்த இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வடமராட்சி கிழக்கு முள்ளி பகுதியில் இன்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாகனம் ஒன்றில் மணல் கடத்தலில் ஈடுபட முற்பட்ட போதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தி்ல் துன்னாலையைச் சேர்ந்த இருவர் படுகாயமடைந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது....

சாவகச்சேரியை சேர்ந்த பெண் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

சாவகச்சேரி கல்வயலைச் சேர்ந்த 59 வயதுடைய பெண் ஒருவர் கொவிட்-19 நோயால் உயிரிழந்துள்ளார். இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். முள்ளேரியா தொற்றுநோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார். பெண்ணின் சடலம் சுகாதார நடைமுறைகளின் கீழ் முள்ளேரியாவிலேயே மின்தகனம் செய்யப்படவுள்ளது

முல்லைத்தீவில் மின்னல்தாக்கி 3 விவசாயிகள் உயிரிழப்பு

முல்லைத்தீவு குமுளமுனை தண்ணிமுறிப்பு 03 கண்டம் வயல்வெளிப்பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட விவசாயிகள் மூவர் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்கள். நேற்று (15)மாலைவேளை தண்ணிமுறிப்பு உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழைபெய்துவந்துள்ளது. குமுழமுனை பகுதியனை சேர்ந்த இரு விவசாயிகளும்,கேப்பாபிலவு பகுதியினை சேர்ந்த ஒரு விவசாயியும் குறித்த பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை மின்னல் தாக்குதலுக்கு...

சுமந்திரன் மற்றும் சிறிதரன் யாழ். போதனா வைத்தியசாலைக்கு விஜயம்!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சி.சிறிதரன் ஆகியோர் விஜயம் செய்தனர். வைத்தியசாலைக்கு இன்று (வியாழக்கிழமை) அதிகாலை விஜயம் செய்த அவர்கள் அங்குள்ள குறைபாடுகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டனர். மேலும் வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தா உள்ளிட்ட வைத்திய நிபுணர்களுடன் கலந்துரையாடியதுடன், நிலவும் ஆளணி...

சைக்கிளில் பயணித்த சகோதர சிறுவர்களை மோதிய வடி வாகனம்: ஒருவர் சாவு; மற்றையவர் படுகாயம்

சகோதரர்கள் இருவர் துவிச்சக்கர வண்டியில் பயணித்த போது எதிரே வந்த வடி வாகனம் மோதியதில் சிறுவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றைய சிறுவன் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். சித்திரைப் புத்தாண்டு தினமான நேற்று காலை 8.45 மணியளவில் நாவலர் வீதி கனகரத்தினம் மகா வித்தியாலயத்துக்கு அருகில் இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது....

யாழ்ப்பாணத்தில் மேலும் 25 பேருக்கு கோரோனா தொற்று; 21 பேர் திருநெல்வேலி கடைகளைச் சேர்ந்தோர்

யாழ்ப்பாணத்தில் மேலும் 25 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 145 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அதில் 25 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. திருநெல்வேலி சந்தை வர்த்தகர்கள், பணியாளர்கள் மற்றும் அவர்களது...

புத்தாண்டு தினத்தில் நடந்த சோகம் – ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

யாழ்ப்பாணம் மட்டுவிலில் ஒன்றரை வயது குழந்தை மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் குழந்தை உயிரிழந்துள்ளது. வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை 8வயதுடைய சிறுவன் இயக்கியபோது, மோட்டார் சைக்கிளுக்கு எதிரே விளையாடிக்கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை மீது மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. இதனையடுத்து படுகாயங்களுக்கு உள்ளான குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில்...

வடமாகாணத்தில் மேலும் 20 பேர் கோரோனா வைரஸால் பாதிப்பு; நல்லூரைச் சேர்ந்த ஒருவர் சாவு

யாழ்ப்பாணத்தில் மேலும் 18 பேருக்கும் முல்லைத்தீவு, மன்னாரில் தலா ஒருவருக்கும் என வடக்கு மாகாணத்தில் 20 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் நல்லூர் செட்டித்தெருவில் வசிக்கும் 81 வயது பெண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் அவருக்கு கோவிட்...

பிரதமரின் தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

அனைத்து இலங்கையர்களினதும் புதிய எதிர்பார்ப்புகள் நிறைவேறும் தமிழ் சிங்கள புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு இந்த வாழ்த்து செய்தியை மிகுந்த மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறேன். நம் நாட்டு மக்கள் பழங்காலத்திலிருந்தே பழங்கால பழக்கவழக்கங்களுக்கும் மரபுகளுக்கும் முன்னுரிமை அளித்து, விழாக்களை கொண்டாடி வருகின்றனர். விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களுடன் பின்னிப் பிணைந்திருக்கும் கலாசார ரீதியாக மதிப்புமிக்க சமூக நடைமுறைகள் இந்த...

தரம் 5 புலமைப் பரிசில், க.பொ.த. உயர்தரப் பரீட்சை நடைபெறும் திகதிகள் அறிவிப்பு

ஓகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த 2021ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் சாதாரணதரப் பரீட்சை திகதிகளை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 4ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி 30ஆம் திகதிவரை இடம்பெறுகிறது. க.பொ....

வீடுகளில் வளர்க்கப்படும் பூனையைப் புலியென்பதை யாரும் ஏற்கமாட்டார்கள்- சிறிகாந்தா

எலிகளைப் பிடிப்பதற்காக வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் பூனைகளை, அவை புலிகளை ஒத்திருக்கின்றன என்று கூறுவதைப் பாரபட்சமின்றி சிந்திக்கும் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசியக் கட்சியின் தலைவர், சட்டத்தரணி என்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கம் செய்ய முயன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் யாழ்ப்பாண மாநகர முதல்வர் சட்டத்தரணி...
Loading posts...

All posts loaded

No more posts