Ad Widget

காலவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் கால எல்லை நீடிப்பு

காலவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் கால எல்லை டிசெம்பர் 31ஆம் திகதிவரை நீடிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் கோரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படும் நடவடிக்கைகள் காரணமாக இந்த சலுகைக் காலம் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு லட்சம் இளையோருக்கு வேலைவாய்பு – 34, 818 பேருக்கு பயிற்சியாளர் நியமனம் வழங்கப்பட்டது

மிகக் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு லட்சம் இளையோருக்கு அரச வேலைவாய்ப்பை வழங்கும் திட்டத்தின் கீழ் பயிற்சியாளர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நடவடிக்கை நேற்றையதினம் (ஒக்.19) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 34 ஆயிரத்து 818 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நியமனம் பெறுபவர்கள் தங்கள் திறன்கள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப அடையாளம் காணப்பட்ட 25...
Ad Widget

புங்குடுதீவு தனிமைப்படுத்தலில் இருந்து இன்று காலை விடுவிப்பு!!

புங்குடுதீவில் கடந்த 5ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் சட்டம் இன்று காலை நீக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர், க. மகேசன் தெரிவித்தார். கடந்த மூன்று வாரங்களாக யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதி தற்காலிக முடக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தது. அப்பகுதியில் சுய தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் எவருக்கும் தொற்று ஏற்படவில்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது. அதனடிப்படையில் புங்குடுதீவு...

பௌத்த மத மேம்பாட்டுக்காக இந்தியா வழங்கிய நிதி தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட கூடாது!!

பௌத்தத்திற்கான நிதி, ஆயுதப் படைகளுக்கு பயிற்சிக்காக வழங்கப்படும் உதவிகள் தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட கூடாது என்ற உத்தரவாதத்தை இலங்கை அரசிடம் பெற்றுக்கொள்ள வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது 13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக...

யாழில் கொரோனா பரவல் நிலமை கட்டுப்பாட்டுக்குள்- மாவட்டச் செயலாளர்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று நிலமை கட்டுப்பாட்டுக்குள் காணப்படுகின்றது என மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். எனினும் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போதைய நிலமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை...

யாழில் 20வது திருத்தத்திற்கு எதிப்பு தெரிவித்து மின் விளக்குகளை அணைத்து ஒளி விளக்குகளை ஏற்றுக!!

அரசியலமைப்பின் 20வது திருத்த சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு, வீடுகளில் மின் விளக்குகளை அணைத்து ஒளி விளக்கொன்றினை ஏற்றுமாறு ஜனநாயகத்திற்கான ஒன்றிணைந்த இளையோர் அணி மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. யாழ்.ஊடக அமையத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே குறித்த அமைப்பின் பிரதிநிதி அ.பெனிஸ்லஸ் துஷான் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். குறித்த...

வவுனியா வைத்தியசாலையில் சமூக பரவல் இல்லை – பணிப்பாளர்

வவுனியா வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று சமூகப் பரவலாக மாறுவதற்கான வாய்ப்புகள் இல்லை என வைத்தியசாலையின் பணிப்பாளர் க.நந்தகுமார் தெரிவித்தார். இது தொடர்பாக இன்று ஊடகங்களக்கு கருத்து வெளியிட்ட அவர், பூந்தோட்டம் தனிமைப்படுத்தல் மையத்தில் கொரோனோ தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் உரிய பாதுகாப்பு நடைமுறைகள் பேணப்பட்டே வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்டிருந்தனர் என தெரிவித்துள்ளார். எனவே அதன்...

யாழில் கொரோனா மருத்துவமனைக்கு எதிராக போராட்டம் நடத்த மக்கள் முயற்சி- பொலிஸார் குவிப்பு

யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச மருத்துவமனையை, கொரோனா மருத்துவ நிலையமாக மாற்றும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. மாவட்டத்துக்கு ஒரு கொரோனா வைத்தியசாலை அமைக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணத்துக்கான கொரோனா மருத்துவமனையாக மருதங்கேணி பிரதேச மருத்துவமனை தெரிவு செய்யப்பட்டு, அதன் பணிகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், இன்றைய தினம் அங்கு பணியாற்றுவதற்கான மருத்துவர்கள் மற்றும்...

மேலும் 47 பேருக்கு கோரோனா தொற்று!!

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை கோரோனா பரவல் தொடர்சியில் மேலும் 47 பேர் கோரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இன்று திங்கட்கிழமை (19-10-2020) கண்டறியப்பட்டுள்ளது. இந்த தகவலை இராணுவத் தளபதி வெளியிட்டுள்ளார். அவர்களில் 4 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள். ஏனைய 43 பேர் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களுடன் தொடர்புடையவர்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மினுவாங்கொட...

யாழ்ப்பாணத்தில் நிமலராஜனின் 20ஆவது நினைவேந்தல் நிகழ்வு!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின், 20ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. 2000ஆம் ஒக்ரோபர் 19ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் கச்சேரியடிப் பகுதியில், உள்ள தனது வீட்டில் ஊடகங்களுக்கு செய்தி எழுதிக் கொண்டிருந்த ஊடகவியலாளர் ம.நிமலராஜன், ஆயுததாரிகளால் துப்பாக்கியால் சுட்டும், குண்டு வீசியும் படுகொலை செய்யப்பட்டார். யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், யாழ்.ஊடக...

சமூகத்திலிருந்து பரவும் கொரோனா கொத்தணிகளால் அதிக ஆபத்து – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

சமூகத்திலிருந்து பரவும் கொரோனா கொத்தணிகளால் சமூகமயமாக்கப்படுவதற்கான அதிக ஆபத்து இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார். சமூகத்திலிருந்து பரவும் கொரோனா கொத்தணிகளால் சமூகமயமாக்கப்படுவதற்கான அதிக ஆபத்து உள்ளது என தெரிவித்துள்ளார். கோவிட் -19 நோயாளிகளின் மூலம் இதுவரை கண்டறியப்பட்டிருந்தாலும், கண்காணிக்கப்பட்டிருந்தாலும், பல சந்தர்ப்பங்களில் அந்த மூலத்தை...

வவுனியா வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டது!!

வவுனியா, பூந்தோட்டம் தேசிய கல்வியற் கல்லூரியில் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த மூவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதால் வவுனியா வைத்தியசாலைக்கு நோயாளர் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு தற்காலிகமாக காலை முதல் மூடப்பட்டுள்ளது. மூவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சிஆர் பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று...

பருத்தித்துறை சாலை நடத்துனருக்கு மருதங்கேணி கோவிட் – 19 சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை!!

இலங்கை போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறை சாலை பேருந்து நடத்துனருக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்றிரவு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரை மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை கோவிட் – 19 சிகிச்சைப் பிரிவில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கோவிட் -19 நோய் சிகிச்சை நிலையம் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட நிலையில் முதலாவது கோவிட்...

இளவாலையில் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கால் 10 மாதக் குழந்தை உயிரிழப்பு!!

காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட 10 மாதக் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இந்த சோகம் யாழ்ப்பாணம், இளவாலையில் நடந்துள்ளது. இளவாலை, உயரப்புலத்தைச் சேர்ந்த தனீஸ்வரன் அக் ஷ்யன் என்ற 10 மாதக் குழந்தையே உயிரிழந்துள்ளான். குழந்தைக்கு நேற்றுமுன்தினம் காய்ச்சலுடன் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டுள்ளது. முதலில் குழந்தைக்கு பரசிட்டமோல் வழங்கியுள்ளனர் பெற்றோர். ஆனால் காய்ச்சல் தொடர்ந்ததால் அவர்கள் நேற்றுக்காலை...

பல்கலை. பரீட்சைகளை ஒன்லைனில் நடத்தும் திட்டத்தில் மானிய ஆணைக்குழு கவனம்!!

பல்கலைக்கழகங்களின் பரீட்சைகளை இணையம் (Online) ஊடாக நடத்துவதில் கவனம் செலுத்துவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கோரோனா வைரஸ் பரவல் நிலமை காரணமாப பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் பரீட்சைகள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். இது குறித்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள்...

புங்குடுதீவு பெண் பயணித்த பருத்துறை இ.போ.ச பேருந்து நடத்துனருக்கு கொரோனா தொற்று உறுதியானது!!

கொரோனா தொற்றுக்குள்ளான யாழ்.புங்குடுதீவு பெண் பயணித்த யாழ்.பருத்துறை இ.போ.ச சாலைக்கு சொந்தமான பேருந்தின் நடத்துனருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டள்ளது. குறித்த நடத்துனருக்கு நடத்தப்பட்ட 2ம் கட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. மேற்படி தகவலை வடமாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் உறுதிப்படுத்தியுள்ளார்.

யாழ் மக்களுக்கு அவசர அறிவித்தல் – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான அநாவசியமான பயணிப்பதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார் அத்தோடு புங்குடுதீவு முடக்க நிலைமை வெகு விரைவில் நீக்கப்படும் எனவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டத்தில் தற்போதய கொரோனா நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே க.மகேசன் இவ்வாறு...

நாட்டில் மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 61 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 58 பேர் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்கள் எனவும் ஏனைய மூவர் குறித்த தொழிலாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இதுவரை மினுவங்கொட கொரோனா...

20 ஆவது திருத்தச் சட்டத்தினால் தமிழ் மக்களுக்கு பாதிப்பில்லை : அமைச்சர் டக்ளஸ்

கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அறுவடைக்குப் பின்னரான இழப்பு வீதத்தினை குறைப்பதற்கு கனேடிய அரசாங்கத்தின் அனுபவத்தினையும் தொழில்நுட்ப உதவிகளையும் வரவேற்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கனேடிய உயர் ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சிற்கு இன்று(16.10.2020) வருகை தந்த கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மைக்கினன் உடனான கலந்துரையாடலின் போதே கடற்றொழில் அமைச்சரினால் குறித்த...

உழவு இயந்திரம் மோதி பொலிஸ் சார்ஜென்ட் பலி!!

முல்லைத்தீவு, கொக்கிளாய் வீதியில் சிலாபத்துறை பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில், முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்றிரவு (15) இடம்பெற்றுள்ளது. கொக்கிளாய் நோக்கி பயணித்த உழவு இயந்திரமொன்று, வீதி போக்குவரத்து கடமையிலிருந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மோதியுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதில் படுகாயமடைந்த குறித்த பொலிஸ்...
Loading posts...

All posts loaded

No more posts