- Friday
- July 4th, 2025

க.பொ.த. உயர்தர பரீட்சைகள் முடிந்ததும் எந்தவொரு தனியார் பேருந்துகளும் இயக்கப்படாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “க.பொ.த. உயர்தர பரீட்சைகள் அடுத்த மாதம் 09ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளன. அதன் பின்னர் எந்தவொரு தனியார் பேருந்துகளும் இயக்கப்பட மாட்டாது. பாரிய தொழிற்சங்க நடவடிக்கையொன்று...

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்னால் கைக்குண்டு ஒன்றுடன் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவத்தில் கிளிநொச்சி- பரந்தன் பகுதியைச் சேர்ந்த 22வயதுடைய இளைஞரையே பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞன், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாக மோட்டார் சைக்கிளுடன் சந்தேகத்திற்கிடமாக நின்றுள்ளார். இதனை அவதானித்த பொலிஸார் அவரை சோதனைக்கு உட்படுத்தியபோது,...

யாழ்.மாநகர சபை உறுப்புரிமையிலிருந்து மணிவண்ணனை நீக்குமாறு தேர்தல் அதிகாரிக்கு தமிழ் காங்கிரஸ் கடிதம்
யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர்கள் சட்டத்தரணி வி.மணிவண்ணன், மயூரன் ஆகிய இருவரது உறுப்புரிமையை நீக்குமாறு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், யாழ்ப்பாணம் உதவித் தேர்தல் ஆணையாளருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளது. இதுதொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் செயலாளருக்கும் அந்தக் கடிதத்தின் பிரதி அகில இலங்கை தமிழ் காங்கிரஸால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் தேசிய...

தனிமைப்படுத்தல் தொடர்பில் புதிய சட்டங்கள் உள்ளடக்கப்பட்ட விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பேணல் மற்றும் முகக் கவசங்களை அணிதல் உள்ளிட்ட பிரதான சுகாதாரப் பாதுகாப்பு முறைகள், குறித்த வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளன. சட்டங்களை மீறும் நபர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாவுக்கு மேற்படாது அபராதம் விதிக்கவும், ஆறு மாத கால சிறைத் தண்டனை விதிக்கவும்...

நாட்டில் தற்போது மிகவும் அபாயகரமான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “தற்போது ஏற்பட்டுள்ள அலை அல்லது கொத்தனி மிகவும் கடுமையானது. நாளாந்தம் நுறு இருநூறு என நோயார்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றார்கள். ஆனால் 15, 20...

20வது திருத்த சட்டத்திற்கு அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும் எதிராக வாக்களிக்கவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடியில் 20வது திருத்தம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.கே.சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக...

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 49 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 13 பேரும் அவர்களுடன் நெருங்கிப் பழகிய 36 பேரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மினுவாங்கொடை தனியார் ஆடைத்தொழிற்சாலையை அடிப்படையாக கொண்டு அடையாளப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 770 ஆக உயர்வடைந்துள்ளது.

பல்கலைக்கழகங்களில் PCR பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனைத் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சின் செயலாளரினால் எழுத்து மூலம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கோரிக்கை தொடர்பில், அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கும் அறிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அனைவரும் அதற்கு...

இலங்கையில் உள்ள 12 கொரோனா வைரஸ் சிகிச்சை நிலையங்களில் மொத்தம் 168 படுக்கைகள் மாத்திரமே உள்ளன என்று கொவிட் -19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் (NOCPC) தெரிவித்துள்ளது. மினுவங்கொடையில் புதிய கொரோனா தொற்றாளர்கள் அதிகம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து 1,544 படுக்கைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அந்த மையம் குறிப்பிட்டுள்ளது. இதேநேரம் மினிவங்கொட கொத்தணியில் கண்டறியப்பட்ட கொரோனா...

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய மாவட்டச் செயலாளராக இலங்கை அரச நிர்வாக சேவையில் மூத்த அதிகாரியான கணபதிப்பிள்ளை கருணாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, களுதாவளை பிரதேசத்தினை சேர்ந்த அவர், இலங்கை நிர்வாக சேவை சிறப்புத் தரத்தில் உள்ளவர். கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும்...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புதுமுக மாணவர்கள் மீது இம்சை வதை புரிந்த சிரேஷ்ட மாணவர்களின் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்குக் கடுமையான தண்டனைகளை வழங்குமாறு பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபை பரிந்துரைத்துள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையின் இரண்டாவது கூட்டம் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தின் போது, கடந்த மாதம் மூன்றாம் திகதி சித்த...

வேலைக்கு செல்வோர் பொதுப்போக்குவரத்தில் பயணிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா கொத்தணியானது சமூகத்தில் பல்வேறு இடங்களில் விஸ்தரித்துள்ளது. இருப்பினும் சென்ற முறைப் போன்று நாடளாவிய ரீதியில் முடக்கப்படாமல் குறிப்பிட்ட...

கட்டுநாயக்கா பொலிஸ் பிரிவில் இன்று(வியாழக்கிழமை) அதிகாலை 5.00 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுப்படுத்தப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை இது அமுலில் இருக்கும் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலையத்தின் தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களின் நிறுவன அனுமதி அட்டைகளை ஊரடங்கு அனுமதிகளாக பயன்படுத்த முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக கடும் ஆபத்து நிலவுகின்ற பகுதிகளில் தேவைப்பட்டால் ஊரடங்கினை பிறப்பிப்பதற்கு தயார் என இராணுவதத தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் குறித்து நாளாந்தம் வெளியாகும் புள்ளிவிபரங்களை அதிகாரிகள் அவதானித்து வருகின்றனர் என தெரிவித்துள்ள அவர், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான நோயாளிகள் காணப்படும் பகுதிகளில் அவசியமென்றால் ஊரடங்கைப்...

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை கோரோனா பரவல் தொடர்சியில் மேலும் 17 பேர் இன்று கோரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த தகவலை இராணுவத் தளபதி தெரிவித்தார். அவர்களில் 5 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள். ஏனைய 12 பேர் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களுடன் தொடர்புடையவர்கள் என்று அவர் குறிப்பிட்டார். அதனடிப்படையில் மினுவாங்கொட...

பொது போக்குவரத்தை பயன்படுத்தும்போது மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பொது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களின் இலக்கங்களை குறித்துக்கொள்ளுமாறு பயணிகளிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதன்மூலம் குறித்த வாகன சாரதிகளுக்கும் தொற்று குறித்து எச்சரிக்கை விடுக்க முடியும் என சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை,...

யாழ்ப்பாணத்தில் இதுவரை 501 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 98 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் தற்போதைய கொரோனா நிலைவரம் தொடர்பாக இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் கூறுகையில், “யாழ். மாவட்டத்தில் தற்போது கொரோனா நிலைவரம் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும்கூட அபாயமான...

கோவிட் -19 நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்க வடக்கு மாகாணத்தில் சிறப்பு வைத்தியசாலையை அமைக்க இராணுவம் தயாராக உள்ளது என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 100 படுக்கைகளைக் கொண்டதாக இந்த சிறப்பு வைத்தியசாலையை தயார்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் கோவிட் -19 நோயாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 700 பேரை...

மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையுடன் தொடர்புடைய கொவிட்-19 கொத்தணி 21 மாவட்டங்களில் பரவியுள்ளது. இவ்வாறு 21 மாவட்டங்களில் பரவியுள்ள போதிலும் தொற்று மூலம் இனங்காணப்படுவதால் இன்னும் சமூகப்பரவல் ஏற்படவில்லை என்று சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் வைத்தியர் ஜயருவான் பண்டார தெரிவித்தார். கொழும்பில் மாத்திரம் மினுவாங்கொடை கொத்தனியுடன் தொடர்புடைய 160 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் சனத்தொகை அதிகம்...

டவர் மண்டப நாடக மற்றும் அரங்கியல் கல்லூரியின் மாணவர்களுக்கு வழங்கப்படும் 2 ஆயிரம் ரூபாய் மாதாந்த புலமைப்பரிசில் நிதியை 3 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று 2020.10.13 அறிவுறுத்தியுள்ளார். டவர் மண்டப அரங்க அறக்கட்டளையின் 296ஆவது நிர்வாக சபை குழுக் கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில்...

All posts loaded
No more posts