. October 2020 – Page 11 – Jaffna Journal

பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணை விடுமுறை!!

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் இரண்டாம் தவணை விடுமுறைக்காக நாளை (05) முதல் மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்குமான 2 ஆம் தவணைக்கான விடுமுறை எதிர்வரும் வௌ்ளிக்கிழமை (09) முதல் வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தமை... Read more »

புங்குடுதீவைச் சேர்ந்த 20 பேர் சுயதனிமைப்படுத்தலில்!!

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை பெண் பணியாளருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்றிரவு கண்டறியப்பட்டுள்ள நிலையில் அங்கு பணி புரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்கள் இருவர் உள்பட அவர்களுடன் தொடர்புடையவர்கள் என 20 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். வேலணை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு... Read more »

யாழ்.மாநகரில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல்

கம்பஹா திவுலபிட்டியவில் சமூகத் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் நாடுமுழுவதும் சுகாதார கட்டுப்பாடுகளை இறுக்கமாக நடைமுறைப்படுத்த பொலிஸாருக்குப் பணிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் யாழ்ப்பாணம் மாநகரில் பொலிஸார் வீதி சுற்றுக்காவல் நடவடிக்கைகளை இன்று மாலை ஆரம்பித்துள்ளனர். அத்துடன், பேருந்துகளில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு அமைய பயணிகள் ஏற்றப்படுகின்றரா என்று பரிசோதனை... Read more »

யாழ் மாவட்ட மக்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபரின் அவசர அறிவிப்பு!!

யாழ் மாவட்ட மக்கள் சமூகத்தொற்று தொடர்பில் விழிப்பாக செயற்படுங்கள் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அவசர அறிவிப்பு விடுத்துள்ளார். தற்போது நாட்டில் உள்ள Covid19 நிலைமை தொடர்பில் யாழ் மாவட்ட மக்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் விடுத்துள்ள அவசர... Read more »

பிள்ளைகளுக்கு சுதந்திரமாக மனமகிழ்வுடன் கல்வி கற்கக் கூடிய கல்வி சீர்த்திருத்தம் இந்நாட்டிற்கு உடனடியாக அவசியம் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

பிள்ளைகளுக்கு சுதந்திரமாக மனமகிழ்வுடன் கல்வி கற்கக் கூடிய கல்வி சீர்த்திருத்தமொன்று இந்நாட்டிற்கு உடனடியாக தேவைப்படுவதாக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ‘அபே கம’ வளாகத்தில் நேற்று முன்தினம் (2020.10.02) நடைபெற்ற சர்வதேச சிறுவர் தின தேசிய நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர்... Read more »

மொறிசன் ஒளடத உற்பத்தி மற்றும் பரிசோதனை நிலையம் பிரதமரினால் திறந்து வைப்பு!

ஹோமாகம, பிடிபன ஸ்லின்டெக் (SLINTEC) வலயத்தில் நிறுவப்பட்டுள்ள மொறிசன் ஒளடத உற்பத்தி மற்றும் பரிசோதனை நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த வெள்ளிக்கிழமை 2020.10.02 கலந்து கொண்டார். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட நிர்மாணப் பணிகளை நிறைவு செய்வதற்காக... Read more »

புங்குடுதீவில் பூசகர் அடித்துக் கொலை!!

புங்குடுதீவில் வீடு புகுந்து பூசகரை அடித்துக் கொலை செய்துள்ள கும்பல் அங்கிருந்து தப்பித்துள்ளது. அவரது உதவியாளரைக் கட்டிவைத்துவிட்டு இந்தக் கொலை நள்ளிரவு இடம்பெற்றது என்று ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். புங்குடுதீவு ஊரதீவுச் சிவன் கோவில் பூசகரான கிளிநொச்சியைச் சேர்ந்த ரூபன் சர்மா (வயது-33) என்பவரே... Read more »

எச்சரிக்கை..! கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்களுக்கு முக்கிய வேண்டுகோள்!!

பதிவுசெய்யப்படாத கையடக்கத் தொலைபேசிகளில் பயன்படுத்தப்படும் அனைத்து சிம் அட்டைகளும் இன்று முதல் இரத்து செய்யப்படும் என்று இலங்கை தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வெளிநாடுகளில் இருந்து கையடக்க தொலைபேசிகளை கொண்டு வந்தவர்கள் தங்கள் தொலைபேசிகளை இலங்கை தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல்... Read more »

நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் சிறுவர் வைத்தியசாலையொன்று நிறுவப்பட வேண்டும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

அனைத்து மாகாணங்களிலும் சிறுவர் வைத்தியசாலையொன்று நிறுவப்பட வேண்டும் என தான் எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (2020.10.01) தெரிவித்தார். கொழும்பு மற்றும் கண்டி மாவட்டத்திற்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள சிறுவர் வைத்தியசாலைகள், எதிர்காலத்தில் மாகாணத்திற்கொரு வைத்தியசாலை என்ற ரீதியில் அபிவிருத்தி செய்யப்பட்டு முன்னெடுத்து செல்வது... Read more »

மதுவரித் திணைக்களத்தை மறுசீரமைக்க ஒருங்கிணைப்பு குழுவொன்றை நியமிக்க பிரதமர் ஆலோசனை!

மதுவரித் திணைக்களத்தை மறுசீரமைப்பதற்கு ஒருங்கிணைப்பு குழுவொன்றை நியமிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 2020.09.30 பிற்பகல் தெரிவித்தார். மதுவரித் திணைக்கள அதிகாரிகளின் தொழில்சார் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடும் வகையில் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது, மதுவரித் திணைக்கள... Read more »

யாழில் 15 சதவீதமானவர்களுக்கு நீரிழிவு!!

யாழ். மாவட்டத்தில் ஏறக் குறைய 15 சதவீதமானவர்களுக்கு நீரிழிவு நோய் காணப்படுகிறது. முன்னைய காலத்தில் வயது முதிர்ந்தவர்களுக்கு வருகின்ற இந்த நீரிழிவு நோய் இன்றைய காலத்தில் இளம் சமுதாயத்தினரையும் தாக்கி வருகிறது. 20, 30, 40 வயதுடையவர்களுக்கும் இந்த நீரிழிவு நோய் காணப்படுகிறது. இதற்கு... Read more »

முன்னணியிலிருந்து விலகமாட்டேன் – மணிவண்ணன்

“தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஜனநாயக பண்பற்ற கட்சியாக மாறிவிடக்கூடாது என்பதற்காகவே நான் தொடர்ந்து கட்சிக்குள் இருந்து போராடுவேன். கட்சிக்குள் நடக்கும் ஜனநாயக மீறலை பார்த்துக்கொண்டு இருப்பவன், தமிழர்களுக்கு எதிரான ஜனநாயக மீறலை எதிர்க்க தகுதியற்றவன்” இவ்வாறு சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில்... Read more »

புற்றுநோய் வைத்திய சிகிச்சை பிரிவை மத்திய அரசு கையகப்படுத்துவதை ஏற்கமுடியாது – சத்தியலிங்கம்

தெல்லிப்பளை ஆதாரவைத்தியசாலையின் கீழ் இயங்கும் புற்றுநோய் மற்றும் உளநல வைத்தியசிகிச்சை பிரிவுகளை மத்திய அரசின் கீழ் கொண்டுவருவதற்கு எடுக்கும் முயற்சியானது 13 வது திருத்தச்சட்டத்தினை ஒழிக்கும் செயற்பாடாகவே பார்க்கமுடியும் என வட மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியாவில்... Read more »

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழையுடனான காலநிலை நிலவக்கூடும்!

நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டளவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில்... Read more »