Ad Widget

சுமந்திரன், ஸ்ரீதரன் குறித்த முறைப்பாடுகள் கிடைத்தன: நடவடிக்கை எடுக்கப்படும்- சி.வி.கே.

நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் ஸ்ரீதரன் உள்ளிட்டவர்கள் பற்றிய முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக வடக்கு மாகாண அவைத் தலைவரும் தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், குறித்த முறைப்பாடுகள் தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கைக் குழு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் தலைவர், ஜனாதிபதி...

சிங்கள தேசிய சக்திகள் வடக்கு கிழக்கில் மையம்கொள்வதை நிறுத்த நாம் பலமடைய வேண்டும்- மணிவண்ணன்

சிங்களத் தேசிய சக்திகள் அல்லது அவர்களோடு சேர்ந்து பயணிக்கின்ற கட்சிகள் வடக்கு கிழக்கை மையப்படுத்தி உருவெடுக்கின்ற சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது என தமிழ் தேசிய இளைஞர் பேரவையை தலைமைதாங்கும் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சிங்கள தேசிய சக்திகள் மையம்கொள்வதை தடுக்க ஒன்றிணைய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் தேசிய இளைஞர் பேரவையின் கலந்துரையாடல்...
Ad Widget

மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவதை கண்டித்து நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள் போராட்டம்

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அமைந்துள்ள சிந்துபாத்தி இந்து மயானத்தில் மருத்துவக்கழிவுகள் கொண்டப்படுவதனை கண்டித்து நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள் போராட்டம். குறித்த மயானத்தில் பாரிய கிடங்கு வெட்டி அதனுள் மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்ட அதன் மேல் உக்கக்கூடிய கழிவுகளை கொட்டி கிடங்கு மூடப்பட்டு வந்த நிலையில் அது தொடர்பில் பிரதேச...

யாழில் பாரிய வெடிப்பு சத்தம்!! – காரணம் வெளியானது

யாழ்ப்பாணம் அராலி இராணுவ முகாம் பகுதியில் பயன்பாட்டிற்கு உதவாத வெடிப்பொருட்களை செயலிழக்க வைக்கும் நடவடிக்கை இன்று(வெள்ளிக்கிழமை) முன்னெடுப்பட்டுள்ளது. இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக பொதுமக்கள் இவ்விடயம் குறித்து அச்சமடையதேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பதவியை இராஜினாமா செய்தார் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தன் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், சுயவிருப்புடனும் தனது பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அந்த வகையில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். கடந்த 2020ம் ஆண்டு நாடாளுமன்ற...

குருந்தூர் மலை ஐயன் கோவிலில் நிறுவப்பட்டிருந்த திரிசூலம் உடைக்கப்பட்டுள்ளது!

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள, தமிழர்களின் பூரவீக குருந்தூர் மலை ஐயன் கோவிலில் நிறுவப்பட்டிருந்த திரிசூலம் அண்மையில் விசமிகளால் உடைக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் அப் பகுதி மக்களால் இதுதொடர்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கு தெரியப்படுத்தப்பட்டதையடுத்து, அவர் நேற்று (வியாழக்கிழமை) குமுழமுனைப் பகுதி இளைஞர்கள் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன்...

புத்தரின் உருவம் பொறித்த சேலையை அணிந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி

புத்த பெருமானின் உருவம் பொறித்த சேலையை அணிந்து, கொழும்பு - நாரஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு வந்த பெண் ஒருவர் நாரஹேன்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 62 வயதுடைய , உப்புக் குளம் வடக்கு, மன்னார் பகுதியைச் சேர்ந்த பெண்ணே இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர். பிரிதொருவருக்கு சிகிச்சைப் பெற்றுக்கொள்வதற்காக, மன்னாரில் இருந்து குறித்த பெண்...

அரச காணியில் குடியிருப்போருக்கு நிரந்த காணிப்பத்திரம்!!

ஆவணங்கள் எவையுமின்றி அரச காணிகளை அபிவிருத்தி செய்து அல்லது அவற்றில் குடியிருந்துவரும் மக்களுக்கு அக்காணிகளுக்கான சட்ட ரீதியான ஆவணங்களை வழங்குவது தொடர்பான அதிசிறப்பு வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை கம்பஹா மற்றும் கொழும்பு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பிப்பதற்குரிய மாதிரி விண்ணப்பப்படிவம் மற்றும் வழிகாட்டுநெறிகளை உள்ளடக்கிய அதிசிறப்பு வர்த்தமானி அறிவித்தல்...

யாழ்.மாநகரில் வீடொன்றுக்குள் புகுந்து கும்பல் அட்டூழியம்!!

யாழ்ப்பாணம் மாநகரில் வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று, அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் இரண்டை தீயிட்டு எரியூட்டி அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. சுண்டுக்குளி குருசர் வீதியில் உள்ள வீடொன்றிலேயே இந்த அட்டூழியம் இன்று அதிகாலை 1.40 மணியளவில் இடம்பெற்றது என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். அத்தோடு வீட்டின் வாயில் கதவு வாள்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் யன்னல் கண்ணாடிகளும்...

பங்களாதேஷில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களை விடுவிக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

பங்களாதேஷில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அம்பாலாங்கொடை பிரதேச கடற்றொழிலாளர்கள் 24 பேரும் விரைவில் நாடு திரும்புவார்கள் என்று நம்பிக்கை வெளியிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தார். கடந்த பெப்ரவரி 05 ஆம் திகதி நான்கு பல நாள் மீன்பிடி கலங்களில் தொழிலுக்கு சென்ற சுமார் 24 கடற்றொழிலாளர்கள் தவறுதலாக எல்லைத் தாண்டி...

சமூக மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமே தற்கொலைகளை தடுக்க முடியும் –வைத்தியர் யமுனா நந்தா

சமூக மட்டத்தில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதன் மூலமே வடபகுதியில் தற்கொலைகளை தடுக்க முடியும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி. யமுனா நந்தா தெரிவித்தார் உலக தற்கொலை தடுப்பு தினம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “இன்றைய தினம் உலக தற்கொலை தொடர்பான...

மாடுகளை இறைச்சிக்கு வெட்டுவதை தடை செய்யும் விவகாரம்; ஒத்திவைத்தது அமைச்சரவை!!

இலங்கையில் இறைச்சிக்காக மாடுகள் கொலை செய்யப்படுவதை தடை செய்வது தொடர்பான அரசின் முடிவு ஒரு மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சரவை இணைப்பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இவ்வாறு ஒரு மாத காலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இன்று அரச தகவல் திணைக்கத்தில் இடம்பெற்ற வாராந்திர அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 28ஆம் திகதியிலிருந்து ஒரு வாரம் டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடனம்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் இம்மாதம் 28 ஆம் திகதியிலிருந்து ஒரு வாரம் டெங்கு ஒழிப்பு வாரமாக அறிவிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க .மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு விசேட கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “டெங்கு...

ரவிராஜ் படுகொலை விவகாரம் – போலி ஆதாரங்களை உருவாக்குமாறு ரணில் கூறியதாக குற்றச்சாட்டு

யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை தொடர்பாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க போலியான ஆதாரங்களை உருவாக்குமாறு சிஐடியினருக்கு அழுத்தம் கொடுத்ததாக ஓய்வுபெற்ற கடற்படை புலனாய்வு அதிகாரி காமினி செனவிரட்ண தெரிவித்துள்ளார். அரசியல் பழிவாங்கல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ரணில்...

காணாமல் போன இளைஞனும், பெண்ணும் சடலமாக மீட்பு !!

காணாமற்போயிருந்த இளைஞனும், பெண்ணும் 7 நாள்களின் பின் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களது சடலங்கள் பரந்தன் ஓவிசியர் கடைச் சந்திக்கு அண்மையாகவுள்ள பாழடைந்த கட்டடம் ஒன்றுக்குள் பழுதடைந்த நிலையில் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன என்று கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி குமரபுரத்தைச் சேர்ந்த இளைஞனும் திருநகரைச் சேர்ந்த இளம் பெண்ணுமே கடந்த 3ஆம்...

இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதால் நாட்டின் நாலாபுறங்களிலும் புத்தர்சிலையை வைத்து வழிபடும் உரிமை எமக்குள்ளது!!

வடக்கில் பௌத்த சிலைகளை வைக்க வேண்டாமென கூற நாடாளுமன்ற உறுப்பினர் க.வி. விக்னேஸ்வரனுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின், தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்றையதினம் (09) இடம்பெற்ற உற்பத்தி வரிகள் சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்....

கடன் வழங்கும் போது தளர்வான கொள்கைகளை பின்பற்றுமாறு பிரதமர் வலியுறுத்து

பல்வேறு பொருளாதா நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ள மக்களை அதிலிருந்து மீட்டெடுப்பதற்கு கடன்களை வழங்கும் போது தளர்வான கொள்கைகளை கடைப்பிடிக்குமாறு அத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று ( 2020.09.09) அரச வங்கிகளின் தலைவர்களுக்கு அறிவுறுத்தினார். நிதி அமைச்சில் நடைபெற்ற நிதி அமைச்சின் முன்னேற்ற மறுஆய்வுக் கூட்டத்தின் போதே பிரதமர் இவ்வாறு...

தியாகி திலீபனின் நினைவு தினம் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேரணிக்கு தடை

தியாகி திலீபனின் நினைவு தினத்தினை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் முன்னெடுக்கப்படவிருந்த பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பாக வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றைச் செய்யவுள்ளதாக நகரசபை உறுப்பினர் ஜானுஜன் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 16ஆம் திகதி வவுனியா பொங்கு தமிழ் தூபிக்கு முன்பாக இருந்து நல்லூர் வரை...

குடாநாட்டுக்கு இந்தியாவில் இருந்து வருவோர் தொடர்பாக அவதானமாக இருக்க வேண்டும் – வைத்தியர் கேதீஸ்வரன்

யாழ் குடாநாட்டுக்கு இந்தியாவிலிருந்து சட்டவிரேதமாக வருவோர் தொடர்பாக மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில் , “இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மிகவும் அதிகளவில் காணப்படுகின்றது. எனவே,...

பொது இடங்களில் குப்பை கொட்டுவோரை கைது செய்யுங்கள் – ஆர்.கேசவன்

பொது இடங்கள் மற்றும் வெற்று காணிகளில் குப்பை கொட்டுவோரை சிறப்பு அதிரடிப்படையினரின் உதவியுடன் கைது செய்யுங்கள் என வட மாகாண சமுதாய மருத்துவ வல்லுநர் ஆர்.கேசவன் யோசனை முன்வைத்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட டெங்கு ஒழிப்பு தொடர்பான சிறப்புக் கூட்டம் மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. அதில் உரையாற்றிய போதே மருத்துவ வல்லுநர் ஆர்.கேசவன் இதனைத் தெரிவித்தார்....
Loading posts...

All posts loaded

No more posts