அரச காணியில் குடியிருப்போருக்கு நிரந்த காணிப்பத்திரம்!!

ஆவணங்கள் எவையுமின்றி அரச காணிகளை அபிவிருத்தி செய்து அல்லது அவற்றில் குடியிருந்துவரும் மக்களுக்கு அக்காணிகளுக்கான சட்ட ரீதியான ஆவணங்களை வழங்குவது தொடர்பான அதிசிறப்பு வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை கம்பஹா மற்றும் கொழும்பு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதற்காக விண்ணப்பிப்பதற்குரிய மாதிரி விண்ணப்பப்படிவம் மற்றும் வழிகாட்டுநெறிகளை உள்ளடக்கிய அதிசிறப்பு வர்த்தமானி அறிவித்தல் காணி ஆணையாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

Related Posts