Ad Widget

குருந்தூர் மலை ஐயன் கோவிலில் நிறுவப்பட்டிருந்த திரிசூலம் உடைக்கப்பட்டுள்ளது!

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள, தமிழர்களின் பூரவீக குருந்தூர் மலை ஐயன் கோவிலில் நிறுவப்பட்டிருந்த திரிசூலம் அண்மையில் விசமிகளால் உடைக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் அப் பகுதி மக்களால் இதுதொடர்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கு தெரியப்படுத்தப்பட்டதையடுத்து, அவர் நேற்று (வியாழக்கிழமை) குமுழமுனைப் பகுதி இளைஞர்கள் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோருடன், குருந்தூர் மலைக்கு சென்று நிலைமைகளைப் பார்வையிட்டார்.

மேலும் இவ்வாறு திரிசூலம் உடைக்கப்பட்டதற்கு அவர், தனது கடுமையான கண்டனத்தினையும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சூலமானது நீக்கப்பட்மை அங்கு கட்டுமான பணிகள் சிலர் இடம் பெற்று வருவதாக பிரதேச மக்களினால் நீதிமன்றத்திற்கு நகர்த்தல்ப் பத்திரம் மூலம், கடந்த புதன்கிழமை அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று தொல்லியல் திணைக்களத்தினர், குறித்த வழக்கிற்காக அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கில், பிரதேச மக்கள் சார்பாக, சட்டத்தரணி சுகாஷ், முன்னிலையாகியிருந்தார். இதன்போது, அங்கு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்ற, தொடர்ந்து குறித்த கட்டுமான பணிகள் வழிபாட்டு தலமாகவோ அல்லது பௌத்த விகாரையோ இல்லை எனவும் குறித்த தொல்லியல் எச்சங்களை பாதுகாக்கும் ஒரு காவல் அரணாகவே அது கட்டப்படுவதாக நீதிமன்றத்தில் தொல்லியல் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

இதற்கு முன் குறித்த பகுதிக்குு தேரர்கள் சிலர் கட்டுமானப்பொருட்கள் மற்றும் புத்தசிலையுடன் குறித்த இடத்துக்கு சென்றதை அடுத்து பிரதேச மக்களாால் தடுக்கப்பட்டு பொலிசாரால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதன் போது நீதிமன்றால் குறித்த பகுதியில் கட்டுமான பணிகளில் ஈடுபடக்கூடாது என உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts