Ad Widget

இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதால் நாட்டின் நாலாபுறங்களிலும் புத்தர்சிலையை வைத்து வழிபடும் உரிமை எமக்குள்ளது!!

வடக்கில் பௌத்த சிலைகளை வைக்க வேண்டாமென கூற நாடாளுமன்ற உறுப்பினர் க.வி. விக்னேஸ்வரனுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின், தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவித்தார்.

நாடாளுமன்றில் நேற்றையதினம் (09) இடம்பெற்ற உற்பத்தி வரிகள் சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“செவ்வி ஒன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி. விக்னேஸ்வரன், மகாவம்சத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனக் கூறியுள்ளார். அவர் மகாவம்சத்தை ஏற்றுக்கொள்கிறாரா இல்லையா என்பது எமக்கு முக்கியமில்லை. ஆனால், வடக்கில் புத்தர் சிலைகளை வைக்க வேண்டாம் என்று கூறுவதற்கு அவருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை.

இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதால் நாட்டின் நாலாபுறங்களிலும் புத்தர்சிலையை வைத்து வழிபடும் உரிமை எமக்குள்ளது” என்றும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே குறிப்பிட்டார்.

Related Posts