Ad Widget

மாடுகளை இறைச்சிக்கு வெட்டுவதை தடை செய்யும் விவகாரம்; ஒத்திவைத்தது அமைச்சரவை!!

இலங்கையில் இறைச்சிக்காக மாடுகள் கொலை செய்யப்படுவதை தடை செய்வது தொடர்பான அரசின் முடிவு ஒரு மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சரவை இணைப்பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இவ்வாறு ஒரு மாத காலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இன்று அரச தகவல் திணைக்கத்தில் இடம்பெற்ற வாராந்திர அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயள அவர் இதனைத் தெரிவித்தார்.

பிரதமர் மகிந்த ராஜபக்ச, மாடுகளை இறைச்சிக்காக கொலை செய்வதைத் தடை செய்வது தொடர்பில் இந்த வாரம் ஒரு ஆரம்ப கருத்தை மட்டுமே முன்வைத்துள்ளார் என்று அமைச்சர் இணைப் பேச்சாளர் கூறினார்.

இலங்கையில் கால்நடை படுகொலைக்கு தடை விதிக்கும் திட்டத்திற்கு ஆளும் கட்சியின் நாடாளுமன்ற குழு, நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை (08), ஒப்புதல் அளித்தது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்ச, மாடுகள் இறைச்சிக்காக கொலை செய்யப்படுவதற்கு தடை விதிக்கப்படுவதற்கான முன்மொழிவை முன்வைத்தார் என்று அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல கூறினார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுப் பிரதமரைப் பாராட்டினர் என்று அவர் குறிப்பிட்டார்.

எந்தவொரு உத்தியோகபூர்வ திட்டமும் பிரதமரால் சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறிய அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல, ஆனால் விரைவில் இந்த முன்மொழிவை பிரதமர் முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார்.

மாடுகள் இறைச்சிக்காக கொலை செய்யப்படுவது தொடர்பான திட்டத்தை எப்போது, எப்படி சமர்ப்பிக்க வேண்டும் என்பதை பிரதமர் தீர்மானிப்பார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related Posts