Ad Widget

ஊ.சே.நி மிகுதியை SMS இல் பெற்றுக் கொள்ள முடியும்!

ஊழியர் சேமலாப நிதியின் தற்போதைய மிகுதியையும் அதுதொடர்பான தகவல்களையும் தத்தமது அலைபேசிக்கு குறுந்தகவலாக மாதாந்தம் அனுப்பும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தொ​ழில் தி​ணைக்கள ஆணையாளர் ஏ. விமலவீர இதனைத் தெரிவித்துள்ளார். தேசிய அடையாள அட்டையை உள்ளீர்த்து, தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் செயற்படுத்தப்பட்டு வந்த திட்டம் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஊழியர் சேமலாப நிதியின் தற்போதைய இருப்பு...

கொக்குவில் பகுதியில் ஹெரோயின் நுகர்ந்து கொண்டிருந்த ஐவர் கைது!!

கொக்குவில் கிழக்கு பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டில் ஐந்து சந்தேகநபர்களை பொலிஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொக்குவில் கிழக்கு பகுதியில் உள்ள ஆலய வளாகத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் இளைஞர்கள் கூடி நிற்பதாக கோப்பாய் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் பொலிஸார்...
Ad Widget

யாழில் 90.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவு!

யாழ்ப்பாணத்தில் 90.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி பிராந்திய வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களப் பொறுப்பதிகாரி த.பிரதீபன் தெரிவித்தார். வளிமண்டல கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள மழைவீழ்ச்சியானது மேலும் 18 மாதங்களுக்கு தொடரலாம் என வளிமண்டல திணைக்களத்தினால் எதிர்பார்க்கப்படுகிறது. யாழில் கடந்த இரண்டு நாட்கள் மட்டும் 90.8 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது....

ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் வடக்கு, கிழக்கு புறக்கணிப்பா?- ஜனாதிபதி வழங்கிய உறுதி மொழி

ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பினை பெற்றுத் தரும் வேலைத் திட்டத்தில் வடக்கு, கிழக்கு புறக்கணிக்கப்படமாட்டாது என்றும் குறித்த பிரதேசங்களுக்கான ஒதுக்கீடு உரிய முறையில் விரைவில் வழங்கி வைக்கப்படும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் உறுதியளித்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை...

20ஆவது திருத்தச் சட்டமூல வரைபு – வர்த்தமானியில் உள்ளடக்குவதற்கான நடவடிக்கை ஆரம்பம்

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூல வரைபை வர்த்தமானியில் உள்ளடக்குவதற்காக அரசாங்க அச்சுத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நீதியமைச்சினால் தயாரிக்கப்பட்ட 20ஆம் திருத்தச் சட்டமூலத்தின் வரைபு சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதனை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் நிறைவேற்ற முடியும் என சட்டமா அதிபரால் ஆலோசனை வழங்கப்பட்டது. சட்டமா அதிபரின் ஆலோசனையைத்...

2020 ஆம் ஆண்டுக்கான பொதுப் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன!!

அடுத்த வருடம் ஜனவரி முதலாம் ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை க.பொ.த சாதாரணதர மாணவர்களுக்கு கற்றல் விடுமுறை வழங்கப்படும் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது. க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் ஜனவரி 18 ஆம் திகதி தொடக்கம் ஜனவரி 27 ஆம் திகதி வரை நடைபெறும். க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக் காலப்பகுதியில்...

சுதந்திரக் கட்சியின் 69ஆவது ஆண்டு நிறைவில் நல்லூரில் வழிபாடு

சிறிலங்கா சுதந்திரகட்சியின் 69ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன. யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புகுழுவின் இணைத்தலைவரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான அங்கஜன் இராமநாதனின் ஏற்பாட்டில் இன்று ( செப்.2) காலை ருத்திராபிஷேகமும் சிறப்பு வழிபாடுகளும் இடம்பெற்றன. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன்...

கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு – சாதாரணமாக கருத முடியாதென்கிறார் இராணுவத்தளபதி

வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படுபவர்களிடமிருந்து சமூகத்தில் கொவிட்-19 வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா , கடந்த 24 மணித்தியாலங்களில் 53 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமையை சாதாரணமாகக் கருத முடியாது என்றும் குறிப்பிட்டார். கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி முதல் சமூகத்தில் தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்படவில்லை...

மாணவர்களின் கல்வித் தரத்தையும் ஆளுமையையும் மேம்படுத்தும் பொறிமுறையை உருவாக்கும் பணியில் தமிழ் மக்கள் பேரவை

மாணவர்களின் கல்வித் தரத்தையும் ஆளுமையையும் மேம்படுத்தும் பொறிமுறையை உருவாக்கும் பணியை முன்னெடுத்துள்ளதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளது. இதற்கான தொடர் திட்டமிடல் செயலமர்வுகளில் கலந்துகொள்ள விரும்பும் அமைப்புகள், கல்வியாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் பேரவையுடன் தொடர்புகொள்ளுமாறும் கேட்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் தமிழ் மக்கள் பேரவை அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; ஆசிரியர்களின் பெருமுயற்சியுடனும் பெற்றோர்களின் உழைப்பு, ஊக்குவிப்புகளுடனும் மாணவர்களின்...

காணாமற்போனோரின் உறவுகள் யாழ்.நகரில் நடத்திய போராட்டத்தில் பங்கேற்பதில் நடைமுறைச் சிக்கல்கள்!! – சுகாஷ்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் நகர மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகி நடைபெற்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொள்ள முடியாமைக்கு சில நடைமுறைச் சிக்கல்களே காரணம் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி விளக்கமளித்துள்ளது. “காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சகல அமைப்புக்களையும் அவர்களது போராட்டங்களை நாம் ஆதரிக்கின்றோம்....

ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித் திட்டம்- இலஞ்சம் வழங்கினால் நிராகரிப்பு

ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் வறுமை நிலையில் உள்ள ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் இன்று (புதன்கிழமை) முதல் ஆரம்பமாவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பல்துறை அபிவிருத்தி செயலணி மூலம் குறைந்த வருமானமுடைய மற்றும் தேர்ச்சி பெறாதவர்களை பொருளாதார ரீதியாக பலப்படுத்துவதே இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த...

100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி – 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக தற்போது காணப்படும் மழையுடனான வானிலை இன்றும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தோடு, சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு...