- Thursday
- July 3rd, 2025

இலங்கையின் கல்வி நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சி. ஶ்ரீசற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ள நிலையில் 2194/ 29 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் இதற்கான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானியில், “இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 33ஆவது உறுப்புரையினால்...

கிளிநொச்சி, ஊற்றுப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை பாடசாலை பிரதான வாயிலை மறித்து இடம்பெற்றது. நேற்றைய தினம் பாடசாலை அதிபரை ஒரு தரப்பினர் தாக்க முற்பட்டதாகத் தெரிவித்து தமது பிள்ளைகள், அதிபர், ஆசிரியர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தித் தருமாறு கோரியே இந்தப் போராட்டம்...

13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக ஒவ்வொருவரும் தங்களது அரசியல் தேவைகளுக்காக பல்வேறு கருத்துக்களை முன்வைத்து குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று( புதன்கிழமை) நடைபெற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவிதார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,...

நாட்டில் கிராம சேவகர்களினால் ஆற்றப்பட வேண்டிய கடமைகள் மற்றும் பொறுப்புக்களை முறைமைப்படுத்தும் சுற்றுநிரூபம் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில், கிராம சேவகர்கள் தமக்குரிய பொறுப்புக்களை நிறைவேற்றுவதை முறைமைப்படுத்தும் விதமாக உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவினால் உள்நாட்டு அலுவல்கள் தொடர்பான 16/2020 இலக்க சுற்றுநிரூபம்...

ஒரு குடும்ப ஆட்சி யாழ்ப்பாண அரச செயலகத்தில் நடைபெறுகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மிக முக்கியமாக தேர்தல் ஆணைக்குழு பற்றிய பல்வேறுபட்ட கருத்துக்கள் இந்த சபையிலே பல உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டது....

நெடுங்கேணியில் பதியும் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரரைத் தரிசிக்கத் திரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆலய பரிபாலன சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “விக்கினங்கள் தீர்ந்து விழா நாளை நெருங்கியிருக்கிறோம். நம் நெடுங்கேணியில் பதியும் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் இறுதிநாளை அண்மித்திருக்கிறோம். எங்கே இருக்கிறார் இந்த ஆதி லிங்கேஸ்வரர்? வவுனியா மாவட்டத்தின்,...

வடக்கு மாகாணத்தின் புதிய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்ம ரட்ண கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். காங்கேசன்துறையில் உள்ள அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றார். வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அண்மையில் ஓய்வு பெற்ற நிலையில் வடக்கு மாகாணத்திற்கான புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா...

பட்டப்பகலில் வீடு புகுந்து ஓய்வுபெற்ற அதிபருக்கும் அவரது துணைவியாருக்கும் கூரிய ஆயுதங்களைக் காண்பித்து உயிர் அச்சுறுத்தல் விடுத்து நகைகளை கொள்ளையிட்டுத் தப்பித்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கீரிமைலப் பகுதியில் பட்டப்பகலில் இந்தக் கொள்ளைச் சம்பவம் அண்மையில் இடம்பெற்றது. “ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர் ஒருவரின் வீட்டுக்குள் கொட்டான்கள், கத்திகளுடன் உள்நுழைந்த இருவர்,...

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, திலீபன் என்கிற புனிதமான பெயரைக் கூட உச்சரிக்கத் தகுதியற்ற நபராவார். அப்படியானவர் தியாக தீபம் திலீபனைப் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்து எனக்கு ஒரு வாசகத்தை ஞாபகப்படுத்துகிறது. “சாத்தான்கள் வேதம் ஓதக்கூடாது”. இவ்வாறு சட்டத்தரணி கனகரட்னம் சுகாஷ் தெரிவித்துள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் “அரசியலுக்காக திலீபனை எல்லாம்...

நாகர்கோவிலில் 1995ம்ஆண்டு இலங்கை விமானப்படையின் குண்டுவீச்சு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 21 மாணவர்களின் 25ம் ஆண்டு நினைவேந்தல் நேற்றைய தினமாகும். இதற்கு பாதுகாப்பு தரப்பு மற்றும் வலய கல்வி திணைக்களம் என்பன பலத்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. ஆகவே, பாடசாலை வளாகத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்விற்கு பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களில் ஆறாம் ஆண்டிற்கு மேற்பட்ட மாணவர்களே...

எதிர்காலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான ரஷ்யாவின் தடுப்பூசியை போட திட்டமிட்டுள்ளதாக இலங்கைக்கான மாஸ்கோ தூதுவர் Meegahalande Durage Lamawansa தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக Meegahalande Durage Lamawansa மேலும் கூறியுள்ளதாவது, “நான் இலங்கையிலிருந்து மாஸ்கோ...

பஸ்ஸில் இருந்து தவறி விழுந்த 6 மாதக் குழந்தை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று சாவகச்சேரி பிரதேசத்தில் நடந்துள்ளது. கிளிநொச்சி, அக்கராயனில் இருந்து பெண் ஒருவர் பஸ்ஸில் யாழ்ப்பாணம் வந்துள்ளார். பஸ் வாசலின் அருகில் இருந்த இருக்கையில் அவர் அமர்ந்திருந்த நிலையில், பஸ் சடுதியாக பிறேக் அடித்து நிறுத்தப்பட்டுள்ளது. வீதியில் குறுக்கே...

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே புதிய பேச்சாளர் மற்றும் கொரடா பொறுப்புக்கள் இறுதிசெய்யப்படும். இன்று (22) கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் இடம்பெறும் என முன்னர் தீர்மானிக்கப்பட்ட போதும், இரா.சம்பந்தன் இன்று நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள மாட்டார் என்பதால், அவர் நாடாளுமன்றத்திற்கு வரும்...

வடக்கு – கிழக்கில் உள்ள 2 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 8 மாணவர்களுக்கு ஆயுட்காலம் தடை விதிக்க பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. பகிடிவதைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளதால், யாழ்ப்பாணம், தென்கிழக்கு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 8 மாணவர்களே இந்த வாழ்நாள் தடையை எதிர்கொள்ளவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒலுவில் பல்கலைக்கழகத்தில் பிரயோக விஞ்ஞான பீடத்தின் புதுமுக மாணவர்கள் பகிடிவதைக்கு...

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு அமைய மன்றினால் வழங்கப்பட்ட தடை உத்தரவை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்ற கட்டளை வரும் 24ஆம் திகதி வியாழக்கிழமை வழங்க்கப்படும் என நீதிவான் நீதிமன்றம் திகதியிட்டுள்ளது. எதிர்மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் ஆவணங்களை சமர்ப்பித்து பொலிஸாரின் வாதத்துக்கு சரியான சட்ட ஏற்பாடுகளை முன்வைக்காத நிலையில்...

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதன்முறையாக பெண் மூத்த பொலிஸ் அதிகாரியை பிரதிப் பொலிஸ் மா அதிபராக (டி.ஐ.ஜி) பதவி உயர்வு செய்ய தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. 9 பெண் மூத்த பொலிஸ் அத்தியட்சகர்களின் (எஸ்.எஸ்.பி), பெயர்களை பதில் பொலிஸ் மா அதிபர் சந்தனா விக்ரமரத்ன தேசிய பொலிஸ் அத்தியட்சகருக்கு பிரதிப் பொலிஸ் மா...

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீளப்பெறப்பட்டால் தமிழ் மக்களால் திலீபனின் நினைவேந்தலை நினைவுகூர முடியுமென வட.மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கமானது, பொதுவான அரசியல் தீர்மானமொன்றை எடுத்து பொலிஸாரின் மூலம் இந்த மனுக்களை நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். யாழ்ப்பாணத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து...

வன்முறைக் கும்பலைச் சேர்ந்த விக்டர் சுந்தர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆவா வன்முறைக் கும்பலைச் சேர்ந்த நிசா விக்டரை வரும் 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்தோடு செம்மணி பகுதியில் கைக்குண்டு மற்றும் ஜொனி ரக மிதிவெடி என்பனவும் நிசா விக்டரால் மறைத்து...

பல்கலைக்கழகங்களில் இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களுக்கு மடிக்கணினியை கொள்வனவு செய்வதற்கு தேவையான கடன் வசதியை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அரச வங்கிகளுடன் இணைந்து இந்த கடன் வசதியை பெற்றுக்கொடுக்கவுள்ளதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. ஒரு இலட்சம் ரூபாய் சலுகை கடன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கடன் வழங்கப்படவுள்ளது. அத்தோடு, பட்டப்படிப்பை நிறைவு செய்ததன் பின்னர்...

வவுனியா- வடக்கின் தனிக்கல்லு பிரதேசத்தில் அமைந்துள்ள வயல் நிலங்களிற்கு செல்வதற்கு இராணுவத்தினர் அனுமதி மறுப்பதாக பிரதேச ஒருங்கிணைப்பு குழுவில் குற்றம் சாட்டப்பட்டது. வவுனியா வடக்கு பிரதேசத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் கு.திலீபன் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த அப்பகுதி பொதுமக்கள், “தனிக்கல்லு பகுதியில் அமைந்துள்ள எருக்கலம்...

All posts loaded
No more posts