- Thursday
- July 3rd, 2025

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழுவால் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய தன் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்து கடிதம் அனுப்பியுள்ள சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், கட்சியினால் முன்னெடுக்கப்படும் ஒழுக்காற்று விசாரணைக்கு ஒத்துழைப்பேன் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அத்தோடு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச்செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதுமுக மாணவர்கள் மீது ‘இம்சை’ மேற்கொள்ளப்பட்டால் சிரேஸ்ட மாணவர்கள் ஈவிரக்கமின்றித் தண்டிக்கப்படுவார்கள் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஸ்ட பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தெரிவித்துள்ளார். இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பல்கலைகழகத்திற்குள் வெவ்வேறு காலகட்டங்களில் நடந்து வந்துள்ளது. கொரோனாவிற்கு பின்னர்...

உளுந்து இறக்குமதி மீதான தடையை மறுபரிசீலனை செய்வது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவிற்கு, பிரதமர் மகிந்த ராஜபக்ச யோசனை முன்வைத்துள்ளார். தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் உளுந்து முக்கியத்துவம் பெறுவதனால், உளுந்து மீதான இறக்குமதி தடையை தளர்த்துமாறு யாழ்ப்பாணம் வணிகர் கழகம், பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் எழுத்துமூல கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது. இந்த கோரிக்கையை...

“நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட செம்மணி சிந்துபாத்தி மைதானத்தில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சபையின் செயலாளர் முழு மூச்சாக வேலைகளை செய்து வரும் நிலையில் யாழ்.மாநகர சபையின் ஊழியர் அவரை அலுவலகம் தேடி வந்து தாக்கியமை குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்” இவ்வாறு நல்லூர் பிரதேச சபையின் சார்பில்...

பாம்பு தீண்டியதில் 7 வயதுச் சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். வட்டுக்கோட்டை தெற்கைச் சேர்ந்து செல்வம் ஜெசிந்தன் (வயது -7) என்ற வட்டுக்கோடை அமெரிக்கன் மிஷன் கல்லூரியில் 2ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவனே உயிரிழந்துள்ளார். “சிறுவன் நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் மலசல கூடத்துக்குச் சென்றுள்ளான். அங்கு பாம்பு தீண்டியுள்ளது. அதனை தாயாரிடம்...

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் வலம்புரி பத்திரிகை விநியோகப் பணியில் ஈடுபட்டிருந்தவரை வழிமறித்த கும்பல் ஒன்று, அவரை வாளால் வெட்டிவிட்டு அவர் பயணித்த மோட்டார் சைக்கிளை பறித்துச் சென்றுள்ளது. இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கோண்டாவிலைச் சேர்ந்த பாலச்சந்திரன் மதனகரன் (வயது -43) என்பவரே வாள்வெட்டுக்கு இலக்காகி தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். கொள்ளைக் கும்பல்...

தமிழர்களின் போராட்டங்களை – விடுதலையை எதிர்கால சந்ததிகள் அறிய முடியாத நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளோமோ என்று இருந்த நிலையில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை நீதிமன்றத் தடையை பொலிஸார் பெற்றுக் கொண்டதன் இளம் சமுதாயமும் உலக நாடுகளும் எங்களுடைய போராட்டங்கள் தொடர்பாக இங்கு நடந்தவையை அறிந்துள்ளது என்று இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான...

கொரோனா குறித்த சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் பொது மக்கள் நடந்து கொள்வது பாரதூரமானது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘நாட்டில் சமூகத்தினுள் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்படாவிட்டாலும்...

கரவெட்டி பிரதேச சபை தலைவர் ஐங்கரன் தங்கவேலாயுதம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கரவெட்டி பிரதேச சபை எல்லைக்குட்ப்பட்ட நெல்லியடிப் பகுதியில் காணிப் பிணக்கு ஒன்று தொடர்பாக பார்வையிடச் சென்ற வேளை, நேற்று(வியாழக்கிழமை) இவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர். தலையில் காயங்களுக்கு உள்ளான கரவெட்டி பிரதேச சபை தலைவர் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில்...

நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் கிளிநொச்சி இரணைமடு விவசாய சம்மேளன உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பு நேற்று (புதன்கிழமை) பிற்பகல் 5 மணியளவில் இரணைமடு விவசாய சம்மேளன கட்டடத்தில் இடம்பெற்றது. வடக்கு மாகாண ஆளுநராக இருந்த காலம் தொட்டு இரணைமடு விவசாய சம்மேளனத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் சுரேன் ராகவனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு...

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் மாணவர்கள் சிலருக்கு சமூக வலைத்தளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படுகின்ற பகிடிவதைகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பான ஊடக சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். யாழ். பல்கலைகழகத்தில் முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் whatsapp சமூக வலைத்தளங்கள்...

நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் எஸ்.சுதர்சன் மீது ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார். தாக்குதல் நடத்தியவருடன் இணக்கமாகச் செல்லுமாறு கோப்பாய் பொலிஸார் பிரதேச சபைச் செயலாளருக்கு அழுத்தம் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது. நல்லூர் அரசடியைச் சேர்ந்த ஒருவர், திருநெல்வேலி சந்தை தொகுதியில் உள்ள கடை தொடர்பில் பிரதேச சபைச்...

வன்முறைக் கும்பலைச் சேர்ந்த விக்டர் சுந்தர் மீது மற்றொரு கும்பலால் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கால்கள் மற்றும் கைகளில் படுகாயமடைந்த விக்டர் சுந்தர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று காலை 7 மணியளவில் யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம், நாயன்மார்க்கட்டு பகுதியைச் சேர்ந்த விக்டர் சுந்தர்,...

கிளிநொச்சி முகமாலை பகுதியில் சீருடைகள், கால் பகுதி எலும்பு துண்டுகள், பற்றிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்களினால் இவை அடையாளம் காணப்பட்டு பளை பொலிசாருக்கு நேற்று(புதன்கிழமை) தகவல் வழங்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பான விசாரணைகளை பளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

சர்வதேச நாடுகளில் பட்டம் பெற்ற மாணவர்களை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் நாயகம் எப்.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார். அதற்கமைய குறித்த பட்டதாரிகளிடம் இருந்து 4,100 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய அவர்களை அரச சேவையில் உள்ளீர்க்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதனடிப்படையில்...

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உயர் அரச அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளுமாறு முன்வைக்கப்படும் வேண்டுகோள்களை தயங்காது நிராகரிக்குமாறு அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின், ஜனாதிபதி அலுவலக அதிகாரிகளின், பிரதமரின், பிரதமரின் அலுவலக அதிகாரிகளின் மற்றும் ஏனைய உயர் அரச அதிகாரிகளின்...

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்புப்பெற சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை தொடர்ந்தும் முழுமையாக கடைப்பிடித்து பாடசாலை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சினால் சகல பாடசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கொரோனா தொற்று அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் தற்போது அனைத்து மாணவர்களுக்கும்...

இது ஒரு துன்பியல் சம்பவம். தரப்பாருக்கு இடையே புரிந்துணர்வு இல்லாமையால் இதுவரையில் இவ்விடயம் தாமதிக்கப்பட்டு வந்துள்ளது என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். [caption id="attachment_105059" align="aligncenter" width="720"] sdr[/caption] டெனிஸ்வரன் தொடர்ந்த வழக்கு நேற்று(புதன்கிழமை) முடிவுகள் வந்ததன் பின்னர் நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்த ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர்...

“நீதிமன்றத் தடை உத்தரவையும் மீறி தியாக தீபம் திலீபனுக்கு நினைவேந்தல் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்துக்கு கடும் எச்சரிக்கையின் பின் பிணை வழங்கி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், அவருடன் கைது செய்யபட்ட வாடகைக்கு அமர்த்தப்பட்ட முச்சக்கர வண்டிச் சாரதியும் பிணையில் விடுவிக்கப்பட்டார். ” உங்களுக்கு...

வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளை மேற்கொள்வதற்கு வவுனியா நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது. நெடுங்கேணி பொலிஸ் மற்றும் தொல்லியல் திணைக்களத்தால் ஆலயத்திற்கு செல்வதற்கு தடை விதிக்க கோரி, வவுனியா நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கினை தள்ளுபடி செய்த மன்று, ஆலய உற்சவத்தை வழமை போன்று நடத்த அனுமதி வழங்கியதுடன், ஆலய நிர்வாகத்திற்கு இடையூறோ, அச்சுறுத்தலோ...

All posts loaded
No more posts