Ad Widget

இலங்கையில் பொலிஸ் வரலாற்றில் முதல் பெண் டிஐஜி நியமனத்துக்கு ஒப்புதல்!!

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதன்முறையாக பெண் மூத்த பொலிஸ் அதிகாரியை பிரதிப் பொலிஸ் மா அதிபராக (டி.ஐ.ஜி) பதவி உயர்வு செய்ய தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

9 பெண் மூத்த பொலிஸ் அத்தியட்சகர்களின் (எஸ்.எஸ்.பி), பெயர்களை பதில் பொலிஸ் மா அதிபர் சந்தனா விக்ரமரத்ன தேசிய பொலிஸ் அத்தியட்சகருக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவி உயர்வு தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது என்று அதன் செயலாளர் நிஷாந்த வீரசிங்க தெரிவித்தார்.

பொலிஸ் திணைக்களத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவைச் சேர்ந்த மூத்த பொலிஸ் அத்தியட்சகர் பிமினி ஜசினராச்சியே மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

அவர் 1997 இல் பொலிஸ் பரிசோதகராக பொலிஸ் சேவையில் இணைந்தார். பின்னர் 2017 இல் மூத்த பொலிஸ் அத்தியட்சகராகப் பதவியுயர்வு பெற்றார்.

இலங்கை பொலிஸ் துறையில் உயர் பதவி வகித்த முதல் பெண் அதிகாரி மூத்த பொலிஸ் அத்தியட்சகர் பிரமிலா திவாகர ஆவார். பொலிஸ் சேவையில் சேர்ந்த முதல் பெண் அதிகாரியான அவர், மூத்த பொலிஸ் அத்தியட்சகர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.

ஒரு பெண் பொலிஸ் அதிகாரியை பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிப்பது பொலிஸ் திணைக்களத்தால் இதுவே முதன்முறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts