தியாகதீபன் தீலீபனின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழில் எழுச்சியுடன் ஆரம்பம்

தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான போராட்டத்தில் மெழுகாய் உருகி தன்னுயிரை ஈகம் செய்த மாவீரன் தியாகி லெப் கேணல் திலீபன் அவர்களின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நல்லூர் தெற்கு வீதியில் உள்ள அவரது நினைவுத் தூபி அமைந்திருந்த இடத்தில் காலை 10.10... Read more »

கேரளா டயரீஸ் நூலின் இரண்டாம் பாகத்தினை மிக விரைவில் யாழில் வெளியீடு செய்வேன் : ம. அருளினியன்

யாழில். சர்ச்சையை தோற்றுவித்த நூல் வெளியீடு யாழ்.நகர மத்தியில் உள்ள பிரபல விடுதியில் நேற்று மதியம் 1 மணியளவில் நடைபெற்றது. ஆனந்த விகடனில், ம. அருளினியன் என்பவர் கடந்த 2012ஆம் ஆண்டு கால பகுதியில் , மாணவ பத்திரிகையாளனாக இருந்த வேளை பெண் போராளி... Read more »

அமிர்தலிங்கத்தின் 90 ஆவது பிறந்தநாள் நினைவுப் பேருரை!

மறைந்த முன்னாள் எதிர்கட்சி தலைவர் அ.அமிர்தலிங்கத்தின் 90வது பிறந்தநாள் நினைவுப் பேருரையும் ‘இலட்சிய இதயங்களோடு’ நூல் வெளியீடும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் மாலை 4 மணிக்கு ஆரம்பமாகியது. இந்த நிகழ்வில் தமிழ் தேசிய... Read more »

யாழ். சர்வதேச திரைப்பட விழா எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பம்!

யாழ்ப்பாணம் சர்வதேச திரைப்படவிழா எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. குறித்த திரைப்பட விழா யாழ்ப்பாணம் மெஜஸ்டிக் திரையரங்கில் எதிர்வரும் செப்டம்பர் 15ஆம் திகதி முதல் 20ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. மூன்றாவது தடவையாக ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள இந்த சர்வதேச திரைப்படவிழாவில் 25 நாடுகளைச் சேர்ந்த... Read more »

யாழில் கொண்டாடப்பட்ட இந்திய சுதந்திர தினம்

இந்திய சுதந்திர தின நிகழ்வுகள், யாழ்ப்பாணத்திலும் இன்று நடைபெற்றன. யாழில் அமைந்துள்ள இந்திய துணை தூதரகத்தின் துணைத் தூதுவர் ஆ.நடராஜனின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இந்நிகழ்வுகள் நடைபெற்றன. இதன்போது இந்திய துணைத் தூதுவர் தேசியக் கொடியை ஏற்றி வைக்க, தொடர்ந்து இந்திய... Read more »

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கண்காட்சியும் வர்த்தக தொழில்ற்துறையினருக்கான செயலமர்வும்

CTA அனுசரணையில் CCIY யின் ஒத்துழைப்பில் NCIT யினால் ஒழுங்கு செய்யப்பட்டு யாழ்ப்பாணத்தில் நடாத்தப்படவுள்ள மேற்படி நிகழ்வில் இணையம் , மென்பொருள், இணைய வடிவமைப்பு , மொபைல் அப்ஸ், இலத்திரனியல் தகவல் பாதுகாப்பு , நெற்வேக்கிங் , இலத்திரனியல் சந்தைப்படுத்தல் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும்... Read more »

முள்ளிவாய்க்காலில் த.தே.ம.முன்னணியின் ஏற்பாட்டில் இனவழிப்பின் 8ஆம் ஆண்டு நினைவேந்தல்

தமிழ் மக்கள் மீதான சிறீலங்கா அரசின் திட்டமிட்ட இனவழிப்பின் 8ஆஅம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று பி.ப 3.30 மணிக்கு முள்ளிவாய்க்கால் கிழக்கு கடற்கரையில் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திலகநாதன் கிந்துஜன் தலைமையில் இடம்பெற்றது. ஸ்ரீலங்கா அசினால் படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப் பொது... Read more »

தென்மராட்சி கல்வி வலயத்தின் வர்த்தகத் துறைக் கண்காட்சி

தென்மராட்சி வலயக் கல்விப் பணிமனையின் ஏற்பாட்டில் ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் ‘தென்னவன்’ வர்த்தகத் துறைக் கண்காட்சி இம்முறை சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியில் நேற்று வெள்ளிக்கிழமை (12.05.2017) ஆரம்பமாகியுள்ளது. இக்கண்காட்சியை வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார். மாணவர்களிடையே... Read more »

யாழ்ப்பாணத்தில் சர்வதேச நடன தின நிகழ்வு

சர்வதேச நடன தினத்தை முன்னிட்டு யாழ். இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் வடக்கு மற்றும் மத்திய மாகாண பிரபல நடன ஆசிரியர்களின் நெறியாள்கையில் உருவான நடன அளிக்கைகளின் தொகுப்பான ” ஆடல் அரங்கம் ” நடன நிகழ்வு (29.04.2017) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.... Read more »

புதுக்குடியிருப்பில் படையெனத் திரண்ட கூட்டுறவாளர்கள்

புதுக்குடியிருப்பு நகரமே அதிர்ந்தது என்று குறிப்பிடும் அளவுக்கு நேற்று திங்கட்கிழமை (01.05.2017) புதுக்குடியிருப்பில் நடைபெற்ற கூட்டுறவாளர்களின் மேதினப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான கூட்டுறவாளர்கள் கலந்து கொண்டிருந்ததோடு நூற்றுக்கணக்கான ஊர்திகளும் பங்கேற்றிருந்தன. வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் கொடி அசைத்துத் தொடக்கி வைக்க புதுக்குடியிப்பு சிவன்கோவில் முன்றலில் இருந்து... Read more »

யாழில் அன்னை பூபதி அவர்களின் 29ஆம் ஆண்டு நினைவு

தமிழ் மக்களின் உரிமைக்காக அகிம்சை வழியில் உண்ணாநோன்பிருந்து தனது இன்னுயிரைத் தியாகம் செய்த அன்னை பூபதி அவர்களின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நேற்று 19-04-2017 மாலை 5.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர்... Read more »

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி யாழ். நல்லூரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி, தமிழகம் முழுவதும் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நல்லூர் ஆலயத்திற்கு அருகாமையில் நேற்று மாலை 4.00 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 03... Read more »

ஈழத்தில் எங்களை நாங்கள் ஆளுவதே எம்.ஜி.ஆரின் விருப்பம் ; சிவாஜிலிங்கம்

தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனின் விரும்பியதை போன்று ஈழத்தில் எங்களை நாங்கள் ஆளும் ஆட்சியை வென்றெடுக்க வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். தமிழகம் மற்றும் ஈழத்தின் இணைப்பு பாலமாக எம்.ஜி.ஆர். விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். தமிழக முன்னாள் முதலமைச்சர்... Read more »

வடக்கு தகவல் தொழில்நுட்பத்துறை சம்மேளன ஒன்றுகூடல்

வடக்கு தகவல் தொழில்நுட்பத்துறை சம்மேளனத்தினால் (NCIT) ஒழுங்கு செய்யப்பட்ட வடமாகாண தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த நிறுவனங்களினை சேர்ந்தவர்களுக்கான வருடாந்த ஒன்றுகூடல் 15.1.2017 ஞாயிற்றுக்கிழமை இரவு கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் அதன் தலைவர் த.தவரூபன் தலைமையில் இடம்பெற்றது. இது வடக்கு தகவல் தொழில்நுட்பத்துறை சம்மேளனத்தின்... Read more »

புங்கையின் புதிய ஒளி அமைப்பால் புங்குடுதீவில் பனம் விதைகள் நடுகை

வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு புங்குடுதீவில் இயங்கி வரும் புங்கையின் புதிய ஒளி என்னும் இளைஞர் அமைப்பால் புங்குடுதீவில் பனம் விதைகள் நாட்டப்பட்டுள்ளன. நேற்று செவ்வாய்க்கிழமை (15.11.2016) நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வடமாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்து கொண்டு முதல் பனம் விதையை நாட்டி,... Read more »

வலி வடக்குப் பிரதேச நிர்வாகம் மீதுபொது மக்கள் அதிருப்தி

அளவெட்டி வடக்கு கிராமியச் செயலகத்தின் முதலாமாண்டு நிறைவு நிகழ்வுகள் அண்மையில் கிராமசேவையாளர் க.கணேசதாஸ் தலமையில் நடைபெற்றன. இந் நிகழ்வில் அரச அதிபர் நா.வேதநாயகன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். இந் நிகழ்வுக்கு வலி வடக்குப் பிரதேச செயலகத்தின் உயர்மட்ட அதிகாரிகள் ஆன உதவிப்பிரதேச செயலர்... Read more »

தியாகதீபம் லெப்.கேணல் திலீபனுக்கு ஆனந்தசங்கரி அஞ்சலி செலுத்தினார்!

தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு நேற்று கிளிநொச்சி மாவட்டத்தில், தமிழர் விடுதலைக்கூட்டணி அலுவலகத்தில் நடைபெற்றது. ஜனநாயகப் போராளிகள் கட்சியினரால் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்நிகழ்வில் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்காக ஐந்தம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாநோன்பிருந்த தியாகி லெப்.கேணல் திலீபனின்... Read more »

நல்லூரில் தியாக தீபம் திலீபனின் 29ஆவது நினைவுதினம் அனுஷ்டிப்பு

தியாகதீபம் திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த 29ஆவது தினமாகிய இன்றைய தினத்தில் நல்லூர் ஆலயச் சூழலில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று காலை பொதுமக்கள் சிலரால் மலர்தூவி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் காலை 10 மணியளவில் ஜனநாயகப் போராளிகள்... Read more »

புலம்பெயர் தமிழர்களின் உதவிகள் போருக்குப் பின்னர் முறையாக ஒருங்கிணைக்கப்படவில்லை :பொ.ஐங்கரநேசன்

எமது விடுதலைப் போராட்டத்தைப் புலம்பெயர்ந்து சென்ற எமது தமிழ் உறவுகளே பொருளாதார ரீதியாகத் தாங்கி நின்றார்கள். அவர்கள் இப்போதும் இங்குள்ளவர்களுக்கு ஏராளமான உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். போராட்ட காலத்தில் அவர்களது உதவிகள் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. ஆனால், போருக்குப் பின்னர் புலம்பெயர் தமிழர்களின் உதவிகள் முறையாக ஒருங்கிணைக்கப்படவில்லையென்று... Read more »

சூழலியல் விவசாயக் கண்காட்சி நல்லூரில் ஆரம்பமாகியது

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு வடக்கு மாகாண விவசாய அமைச்சால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ‘சூழலியல் விவசாயத்தை நோக்கி’ என்னும் விவசாயக் கண்காட்சி நேற்று முன்தினம் திங்கட்கிழமை (22.08.2016) ஆரம்பமாகியுள்ளது. நல்லூர் ஆலயத்தின் பின்வீதியில் அமைந்துள்ள மங்கையர்க்கரசி வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தில் இக்கண்காட்சியை... Read more »