காவல்துறையினர் மீது தாக்குதல் – உப காவல்துறை பரிசோதகர் காயம்

சட்டவிரோத மணல் கடத்தல்காரர்களை கைது செய்ய சென்ற போது அவர்கள் காவல்துறையினரை தாக்கியுள்ளனர் என்று கொடிகாமம் காவல்துறையினர் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு ஏழு மணியளவில் தென்மராட்சி கொடிகாமம் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட கெற்பேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது. ‘கெற்பேலி கிராமத்தில் வழமை... Read more »

போலி நாணயத்தாள் விநியோகஸ்த்தர்கள், சாவகச்சேரி காவற்துறையினரால் கைது!

போலி ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்களை விநியோகிக்க முற்பட்ட இரண்டு இளைஞர்களை சாவகச்சேரி காவற்துறையினர் கைதுசெய்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை 12.30 மணிக்கு தென்மராட்சி பகுதியில் இடம்பெற்றது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது நேற்று புதன்கிழமை மாலை (09.01.19) போலி ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்களை... Read more »

வவுனியாவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

வவுனியா- இராசபுரம் கனகராயன்குளம் பகுதியில் கட்டுத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் கனராயன்குளத்தைச் சேர்ந்த தர்மதாசன் செல்வநாயகம் (வயது 48) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமான முறையில் குறித்த பகுதியிலுள்ள ஒருவர், கட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாக புளியங்குளம் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. அதனைத்... Read more »

போதைப்பொருளுக்கு அடிமையாகிய மாணவனுக்கு பொலனறுவையில் ஒரு ஆண்டு மறுவாழ்வு

கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையாகிய 17 வயது மாணவனை பொலனறுவை கந்த காடு மறுவாழ்வு நிலையத்தில் அனுமதித்து ஒரு ஆண்டு மறுவாழ்வு வழங்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.போல் உத்தரவிட்டார். “மகன் எமது சொல்லைக் கேட்பதில்லை. போதைப்பொருளுக்கு அடிமையாகிவிட்டார். வீட்டில் இருந்து பொருள்களைத்... Read more »

சுன்னாகத்தில் தனியார் நிதி நிறுவன ஊழியர்களின் பணம் கொள்ளை

யாழ்.சுன்னாகம் பகுதியில் தனியார் நிதி நிறுவன ஊழியர்களின் பணத்தினை மூவரடங்கிய கொள்ளைக்குழு கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளது. சுன்னாகம் சூராவத்தை பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்று உள்ளது. குறித்த இரு ஊழியர்களும் தமது நிறுவனத்தில் இருந்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தினை எடுத்து... Read more »

புதூரில் வீசப்பட்ட ஆயுதங்கள் -பெண் உள்ளிட்ட மூவர் கைது!!

வவுனியா புதுர்ப் பகுதியில் கைப்பற்றிய கைத் துப்பாக்கி மற்றும் கையெறி குண்டுகளுடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் இதுவரை பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுர்ப் பகுதியில. சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய நபர், பொலிசாரைக் கண்டவுடன் கையில் இருந்து பை ஒன்றினை தூக்கி எறிந்து... Read more »

மாணவிகளிடம் பாலியல் சேஷ்டை புரிந்த பாடசாலை அதிபர் கைது

வவுனியாவில் பாடசாலை மாணவியை பாலியல் ரீதியான சேஷ்டை மேற்கொண்ட பாடசாலை அதிபரை நேற்று (04.01) மாலை பொலிஸார் கைது செய்து பொலிஸ் தடுப்பு காவலில் வைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா நகரிற்கு அண்மையில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் அதிபர்... Read more »

சினிமா பாணியில் இளம் பெண் கடத்தல்!!! காவல்துறையினர் அசமந்தம்!!

சினிமா பாணியில் பெற்றோரை வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களைக் காண்பித்து மிரட்டி இளம் பெண் ஒருவரைக் கடத்திய சம்பவம் மிருசுவில் படித்த மகளிர் திட்டம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. வட்டுக்கோட்டை வடக்கிலிருந்து சென்ற கும்பல் ஒன்றே இந்தக் கடத்தலை மேற்கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணை சுமார் 17 மணிநேரம்... Read more »

நீதவான் உத்தரவை ஏற்று அழைத்துச் சென்ற சந்தேகநபரை பொலிஸாரிடம் ஒப்படைத்தார் பெண் சட்டத்தரணி!

யாழ். பருத்தித்துறையில் கொள்ளைச் சம்பவம் ஒன்றில் தொடர்புடைய சந்தேகநபரை வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறும் பருத்தித்துறை நீதவான் நளினி சுதாகரன் உத்தரவிட்டார். இதன்படி தனது வாகனத்தில் ஏற்றிச்சென்ற குறித்த சந்தேகநபரை பெண் சட்டத்தரணி, வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் இரண்டு பொலிஸ்... Read more »

அடாவடியில் ஈடுபட முயன்றனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐந்து பேருக்கும் விளக்கமறியல்

யாழ்ப்பாணம், கொக்குவில் காந்திஜி சனச சமூகப் பகுதியில் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் அடாவடியில் ஈடுபட முயன்றனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் வரும் 14ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் உத்தரவிட்டார்.... Read more »

இரண்டு பொலிஸ் நிலையங்களால் தேடப்படும் சந்தேகநபரை தனது வாகனத்தில் நீதிமன்றுக்கு அழைத்துச் சென்ற பெண் சட்டத்தரணி!!!

கொள்ளைச் சம்பவம் ஒன்றில் தொடர்புடைய சந்தேகநபரை தனது வாகனத்தில் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றுக்கு அழைத்துச் சென்ற பெண் சட்டத்தரணியால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது. சந்தேகநபருக்கு எதிராக பிடியாணை உள்ளதால் அவரைக் கைது செய்ய முற்பட்டதால் பெண் சட்டத்தரணிக்கும் பொலிஸாருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாட்டால் பருத்தித்துறை... Read more »

தப்பியோடிய ஆயுததாரியை தேடுவதற்கு பெருமளவு இராணுவம் குவிப்பு!!

வவுனியா வடக்கின் புதூர் பகுதியில் ஆயுதங்களுடன் தலைமறைவான நபரைத் தேடுவதற்கு பெருமளவு இராணுவத்தினர் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். புதூர் நாகதம்பிரான் ஆலயத்துக்குச் செல்லும் பிரதான வீதியில் நேற்றிரவு ஆயதங்களுடன் நபர் ஒருவர் செல்வதாகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. குறித்த நபரைக் கைது செய்யும் நோக்குடன்... Read more »

யாழ்.வைத்தியசாலையில் நோயாளியிடம் நகையைத் திருடிய பெண்ணுக்கு விளக்கமறியல்

யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளியிடம் தங்க நகையைத் திருடிய குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட பெண், நல்லூர் ஆலயத் திருவிழாக் காலத்தில் பெண் ஒருவரிடம் சங்கிலி அறுத்தவர் என்பது விசாரணைகளில் தெரியவந்தது. அதனால் வைத்தியசாலையில் நோயாளியிடம் திருடிய குற்றச்சாட்டு வழக்கில் பிணை வழங்கிய யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம்,... Read more »

சிவப்பு உடை அணிந்து வந்த பெண்ணை எச்சரித்த நீதிவான்

மல்லாகம் நீதிவான் நீதிமன்றுக்கு சிவப்பு உடை அணிந்து வருகை தந்திருந்த பெண் ஒருவரை எச்சரித்த நீதிவான், நீதிமன்றுக்கு நாகரிகமான முறையில் சமூகமளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அறிவுரை வழங்குமாறு மூத்த பெண் சட்டத்தரணி திருமதி சிவபாதத்தை அழைத்து நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா ஆலோசனை... Read more »

பொலிஸின் சித்திரவதையால் சந்தேகநபர் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி!!

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சட்டவிரோதமாகத் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளான இளைஞன், கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்த இரண்டாவது சம்பவமும் பதிவாகியுள்ளது. கடந்த மாத இறுதியில் சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்த அதே பாணியில் இந்த இளைஞரும் முயற்சித்துள்ளார். இந்தச் சம்பவம்... Read more »

வட்டுக்கோட்டையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

பண்டத்தரிப்புப் பகுதியில் பிறோன் ஐஸ் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த உயிர்க்கொல்லி போதைப்பொருள் யாழ்ப்பாணத்தில் முதன்முறையாகக் கைப்பற்றப்பட்டுள்ளது என்று பொலிஸார் சுட்டிக்காட்டினர். இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. “வட்டுக்கோட்டை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின்... Read more »

யாழில் கையூட்டல் பெற்ற கிராம சேவகர் இடைநீக்கம்!

யாழ்.மாவட்டத்தில் கையூட்டு பெற்ற கிராம சேவகரை உடன் அமுலுக்கு வரும் வகையில் மாவட்ட செயலர் நா.வேதநாயகன் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்துள்ளார். யாழ். சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் பணியாற்றும் கிராம சேவகர் ஒருவரே அவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குறித்த கிராம... Read more »

பளை பகுதியில் குழு மோதல் -இருவர் கைது

பளை பகுதியில் குழு மோதலுக்கு தயாராகச் சென்ற இருவரை பளை பொலிஸார் இன்று (வெள்ளிக்கிழமை) கைது செய்துள்ளனர். பளை பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் குழு மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதன் தொடர்சியாக இன்று அதிகாலை ஒரு மணிக்கு மோதலுக்கு தயாராக குழுவொன்று... Read more »

யாழ் நோக்கி போதை கலந்த இனிப்புகள் பண்டங்களை கொண்டுவந்தவர் கைது!

யாழ் நோக்கி கொண்டு வரப்பட்ட போதை கலந்த இனிப்பு பண்டங்கள் ஒரு தொகுதியை வவுனியா ஓமந்தை பொலிஸாரினால் நேற்று மாலை கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதனை கொண்டு வந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நடத்திய வாகன சோதனையின்போது கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு... Read more »

கோப்பாய் பொலிஸாருக்கு எதிராக தவராசா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

சிங்களத்தில் தண்டப்பத்திரம்(தடகொல) எழுதிக்கொடுத்தமைக்காக வடமாகாண முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா யாழ்.பிராந்திய மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் கோப்பாய் பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தார். இந்த முறைப்பாடு தொடர்பில் இன்றைய தினம் மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் பிராந்திய பணிப்பாளர் த.கனகராஜ் தலைமையில் நடைபெற்றது.... Read more »