வடக்கு, கிழக்கில் 50 ஆயிரம் நிரந்தரமான கல்வீடுகளை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 50 ஆயிரம் நிரந்தரமான கல்வீடுகளை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தேசிய ஒருங்கிணைப்புக்கும் நல்லிணக்கத்திற்குமான அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “30 வருட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு நிரந்தரமான கல்வீடுகளை வழங்குவதற்காக அமைச்சரவைப் பத்திரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டு...

யாழில் இந்தியாவின் தெற்கு பிராந்தியத்திற்கான இராணுவத்தளபதி!

இந்தியாவின் தெற்கு பிராந்திய இராணுவத் தளபதி பி.எம்.ஹரிஸ் தலைமையிலான இராணுவக் குழுவினர் இன்று யாழ்ப்பாணம் வந்ததுடன், யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய இராணுவத்தினரின் நினைவிடங்களில் அஞ்சலியும் செலுத்தியுள்ளனர். 1987 – 89ஆம் ஆண்டு இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்தபோது இடம்பெற்ற மோதல்களில் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்ட இந்திய இராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக குறித்த இந்தியாவின் தெற்கு பிராந்திய இராணுவத்...
Ad Widget

சாவகச்சேரி விபத்தில் குடும்பஸ்தர் பலி!

சாவகச்சேரியில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தை ஏற்படுத்திய சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரியை சேர்ந்த குறித்த குடும்பஸ்தர் வீட்டில் பறித்த தேங்காயை விற்பனை செய்ய சாவகச்சேரி பொதுச்சந்தைக்கு கொண்டு சென்ற வழியில் டிப்பருடன் மோதுண்டு சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இந்த விபத்தில் தோப்பு ஒழுங்கை மட்டுவில் பகுதியைச்...

சிறையிலேயே ஜீவசமாதி அடைய விரும்புகிறேன் : முருகன்

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் முருகன் இன்று காலை முதல் தண்ணீர் மட்டுமே அருந்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்டோர் வேலூர் ஆண்கள் சிறையிலும் முருகனின் மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறையிலும் சிறை...

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு இராணுவ புலனாய்வு பிரிவினரால் அச்சுறுத்தல்!!

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு இராணுவ புலனாய்வு பிரிவினரின் அச்சுறுத்தல் இருந்து வருகின்றது.எமது பாதுகாப்புக்கு அரசாங்கம் உத்தரவாதம் அளிக்கவேண்டும் என காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் யோகராசா கனக ரஞ்சனி தெரிவித்தார். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் நேற்று முன்தினம் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே...

கோப்பாயில் இந்திய இராணுவ அதிகாரியின் கல்லறையை சுத்தம் செய்யும் படையினர்!!

கோப்பாய் தெற்கு பகுதியில் அமைந்துள்ள இந்திய இராணுவ அதிகாரி ஒருவரின் சமாதியை புனரமைக்க 50 க்கும் மேற்பட்ட படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த கல்லறை 30 வருடங்களின் பின்னர் மீண்டும் புனரமைப்பதற்கான நடவடிக்கை இரகசியமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். கல்லறையின் புனரமைப்பு பணிகளை முன்னிட்டு அங்கு இராணுவ பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், இந்த புனரமைப்பு பணிகள்...

தமிழர்களின் கடவுள் பிரபாகரன்’ : சொல்ஹெய்ம்

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்த பல தகவல்கள் மர்மமாகவே இருப்பதாக, நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கில் வாழந்த தமிழ் மக்களின் பேராதரவைப் பெற்ற பிரபாகரன், எவ்வாறு தமிழர்களின் காவலனாகவும், கடவுளாகவும் மாறினார் என்பதை இன்றுவரையில் புரிந்து கொள்ள முடியாத ஒன்றாகவே இருப்பதாகவும் கூறினார். சர்வதேச ஊடகம்...

முதலமைச்சர் பாப்பாண்டவரின் பெயரை உவமைக்கு எடுத்துக் கொண்டமை கண்டிக்கத்தக்கது : சி.தவராசா

வட மாகாண சபையின் கையாலாகாத் தன்மைக்கு விடையளிக்கத் தெரியாமல் முதலமைச்சர் பாப்பாண்டவரின் பெயரை உவமைக்கு எடுத்துக் கொண்டமை கண்டிக்கத்தக்கது என வட மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். தான் ஊடக விளம்பரத்திற்காகச் செயற்படுவதாக தெரிவித்து விடயத்தைத் திரிபுபடுத்த முதல்வர் முயன்றுள்ளதாகவும் அவர் நேற்றைய தினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது செயற்பாடுகளை...

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு பிஸ்கட் சாப்பிடுவதற்கு தடை!! : கோபமடைந்த வீரர்கள் ஓய்வறையில் அட்டகாசம்!!

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு தங்களது ஓய்வறையில் பிஸ்கட் சாப்பிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில், அதனை அணி முகாமையாளர் அசங்க குருசிங்கவும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தியாவுடனான கண்டியில் இடம்பெற்ற 3 ஆவது டெஸ்ட் போட்டியின் போது மைதானத்தில் துடுப்பாடிக் கொண்டிருந்த இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர் ஒருவர் பிஸ்கட் கேட்டுள்ளார். ஆயினும் அவருக்கு பிஸ்கட்...

வடக்கு, கிழக்கு இளைஞர்,யுவதிகளை பொலிஸ் சேவையில் இணையுமாறு கூறுங்கள்: மனோ

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரத்தைக் கோருவதற்கு முன்னர், இலங்கை பொலிஸ் சேவையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள இளைஞர், யுவதிகளை சேர்ந்து கொள்வதற்கு ஆர்வமூட்டுமாறு அமைச்சர் மனோ கணேசன் வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஷ்வரனிடம் வேண்டுகொள் விடுத்துள்ளார். தமிழ் பேசும் பொலிஸ் ஊழியர்களின் எண்ணிக்கை குறைவாகவுள்ள நிலையில், பொலிஸ் அதிகாரத்தை மாகாண சபைகளுக்கு கோருவதை தாம்...

அரசாங்க சேவையில் உள்ளவர்கள் அர்ப்பணிப்புடன் சேவைகளை வழங்க முன்வரவேண்டும் : ஜனாதிபதி

அரசாங்க சேவையில் உள்ளவர்கள் மக்களின் நன்மதிப்பை பெறும்வகையில் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் அர்ப்பணிப்புடன் தமது சேவைகளை வழங்க முன்வரவேண்டுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரசாங்க சேவையில் ஏதேனும் ஒரு துறை மக்களின் எதிர்ப்புக்கும் வெறுப்புக்கும் உள்ளானால் அது தொடர்பில் அத்துறைகளின் தலைவர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என தெரிவித்த ஜனாதிபதி தமது மனச்சாட்சிக்கு ஏற்ப நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும்...

அகற்றப்பட்ட கடைகளுக்கு நீதி கோரி சட்டத்தின் எல்லைவரையிலும் சென்று நீதி கேட்போம் : சட்டத்தரணி கே.சுகாஸ்

யாழ்.நகரில் அகற்றப்பட்ட கடைகளுக்கு நீதி கோரி இலங்கையில் எத்தனை சட்ட எல்லை வரை செல்ல முடியுமோ அதுவரை சென்று நீதி கேட்போம். என சட்டத்தரணி கே.சுகாஸ் தெரிவித்துள்ளார். யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக மின்சார நிலைய வீதியில், அமைக்கப்பட்டு இருந்த 9 கடைகளை கொண்ட கடைத்தொகுதி யாழ்.நீதவான் நீதிமன்றினால் அகற்ற உத்தரவு இடப்பட்டு இருந்தது....

வரி குறைப்பு மகிழ்ச்சிக்குரியதாகும் : இணைய தள ஊடகவியலாளர்கள்

இணையதளத்திற்காக அறவிடப்பட்ட வரி குறைக்கப்பட்டமைக்கு மகிழ்ச்சி தெரிவிப்பதாக இணைய தள ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, இந்த கட்டணத்தை இலகுவாக செலுத்தக்கூடிய வசதிகளையும் ஏற்படுத்திககொடுக்குமாறும் இணையதள ஊடகவியலாளர்கள் கேட்டுக்கொண்டனர். அரச தகவல் திணைக்களத்தில் நடைபொற்ற செய்தியாளர் மகாநாட்டில் இணைய தள ஊடகவியலாளர்கள் இவ்வாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர். இவ்வாறான வரி குறைப்பு நடவடிக்கையின் மூலம் தமது தொழிற்றுறையை...

கட்சியிலிருந்து நீக்கினால் நீதிமன்றத்தினை நாடுவேன்: டெனீஸ்வரன்

சட்டத்துக்கு எதிராகக் கட்சியிலிருந்து என்னை நீக்கினால் நீதிமன்றத்தினை நாடுவேன் என அமைச்சர் பா.டெனீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதற்கு மறுத்துள்ளமையால் பா.டெனீஸ்வரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு இன்று (சனிக்கிழமை) ரெலோவின் உயர்மட்டக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் கட்சியில் இருந்து டெனீஸ்வரன் நீக்கப்படுவது குறித்து வெளியாகியுள்ள நிலையில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே நேற்று (வெள்ளிக்கிழமை) இதனைத்...

பொலிஸாருக்கும் முன்னாள் போராளிகளுக்கும் இடையில் முறுகல்!

மன்னார் அடம்பன் ஆள்காட்டி வெளி பிரதேசத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை சுத்தம் செய்யும் பணி இடம்பெற்ற போது பொலிஸாருக்கும், ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மன்னார் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் போராளிகள் மற்றும் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த போராளிகளின் குடும்பத்தைச்...

அரசின் புதிய கடன் திட்டங்கள் மக்களின் கஷ்ட நிலையை ஓரளவு போக்கும் : டக்ளஸ் தேவானந்தா

நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ள புதிய கடன் திட்டங்கள் இந்த நாட்டில் தற்போது பல்வேறு இடர்களுக்கு முகங்கொடுத்து வருகின்ற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தவதற்கான வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு ஓரளவு கைகொடுக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நிதி அமைச்சு வெளியிட்டுள்ள வரிகள் குறைப்பு, வரி நீக்கம் மற்றும் கடன்...

நாட்டின் பல பாகங்களிலும் மழை வீழ்ச்சி அதிகரிக்கலாம்!

நாட்டின் தென்மேற்கு பிரதேசங்களுக்கு இன்று மற்றும் நாளை மழை வீழ்ச்சி வீதம் அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. விசேடமாக ஊவா, வடமத்திய, வடமேல் மாகாணங்களுக்கும் மாத்தளை, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கும் பலமான காற்று வீசக்கூடிய வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பாக கடற்பிரதேசங்களுக்கு பலத்த காற்று வீசலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சபரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களுக்கும்...

தேர்தலில் வெற்றிப் பெறும் பெண்களை கண்டு அஞ்சும் அரசியல் தலைமைகள்!! : அனந்தி

தேர்தலில் வெற்றிப் பெறும் பெண்களை கண்டால் அரசியல் தலைமைகள் தமது ஆசனம் பறிபோய்விடும் என்ற பயத்துடன் இருப்பதாக வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் சிக்கன கடன் கூட்டுறவுச்சங்க பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் மக்களுக்கான சேவையில்,...

வடமாகாண சபை மீது தமிழ் மக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர்: வரதராஜப் பெருமாள்

வடமாகாண சபை மீது தமிழ் மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக ஒன்றிணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப் பெருமாள் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்று வடக்கு மாகாணசபையில் அடிபட்டுக் கொண்டிருப்பவர்கள் தேர்தல் காலத்தில்...

21வது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரால் ட்ரவிஸ் சின்னையா நியமனம்

இலங்கை கடற்படையின் 21வது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரால் ட்ரவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (18) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். 1982ஆம் ஆண்டு இலங்கை கடற்படையில் இணைந்த ட்ரவிஸ் சின்னையா, வீர விக்ரம விபூஷ, ரணவிக்ரம, ரணசூர (மூன்று முறை) மற்றும் உத்தம சேவா...
Loading posts...

All posts loaded

No more posts