- Tuesday
- May 19th, 2026
இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்து சட்டவிரோதமான முறையில் வெவ்வேறு வியாபாரங்களில் ஈடுபட்ட 27 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் இரகசிய புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பல்கலைக்கழக பட்டதாரி ஒருவரும்...
யாழ்.மாவட்டத்தில் இதுவரை காலமும் பொது மக்கள் தாங்கள் விண்ணப்பித்த வாகன இலக்கத் தகடுகள் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்றமை தொடர்பில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திலேயே பார்வையிட்டு வந்தனர். இதனை இலகுவாக்கும் முறையில் இணைய சேவை ஊடாக தற்போது யாழ்.மாவட்ட செயலக உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பொது மக்கள் பார்வையிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இச் சேவையினை www.jaffna.dist.gov.lk எனும்...
கிளிநொச்சி இரணைமடு நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இராமநாதபுரம் மற்றும் பன்னங்கண்டி ஆகிய பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட நெற்களஞ்சியங்கள் இன்று (திங்கட்கிழமை) திறந்து வைக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் பாரிய நீர்ப்பாசனக் குளமான இரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்புப்பணிகள் இபாட் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இதன் ஒரு அங்கமான நெற் களஞ்சியங்கள், நெல் உலரவிடும் தளங்கள் போன்ற கட்டுமானங்களும்...
இலங்கைக்கு சுற்றுப் பயணத்தினை மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் போட்டிகளைத் தொடர்ந்து தற்போது ஒரு நாள் போட்டித் தொடர்களில் விளையாடி வருகின்றது. இந்த நிலையில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி, பாலிவூட் நடிகை அனுஷ்கா ஷர்மாவுடன் இணைந்து இலங்கையில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புக்கு அவசியமான மரக்கன்றுகளை நடும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். குறித்த செயற்பாட்டுக்காக கண்டியில் அவர்கள்...
விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் மெர்சல் திரைப்படத்தின் இசை வெளியீடு விழாவில் தனது ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்யும் விதமாக நடிகர் விஜய் பேசியுள்ளார். விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் இப்படத்தை அட்லி இயக்கியுள்ளார். படத்தின் மீது அதீத எதிர்ப்பார்ப்பு நிலவி வரும் நிலையில், படத்தில் இருந்து ஆளப்போறான் தமிழன்,...
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தை கதைக்களமாக கொண்டு தெலுங்கில் உருவாகியிருக்கும் “ஒக்காடு மிகிலாடு” Okkadu Migiladu என்ற திரைப்படத்தின் முன்னோடி காட்சி (trailer) வெளியாகியுள்ளது. குறித்த திரைப்படமானது “நான் திரும்ப வருவேன்” என தமிழ் மொழியில் வெளியாகவுள்ளதுடன், தமிழ் மொழி மூலமான இந்த திரைப்படத்தின் காட்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நேற்றைய தினம் வெளியாகியுள்ள “நான்...
இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்களுக்கு ரசிகர்கள் கடும் அதிருப்தியையும் எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளனர். தம்புள்ள ரங்கிரி மைதானத்தில் நேற்றைய தினம் இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இலங்கை படு தோல்வியைத் தழுவியிருந்தது. இதனைத் தொடர்ந்து அணியின் வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்திற்கு எதிராக ரசிகர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். அணி வீரர்கள் பயணம் செய்த பஸ்ஸை...
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் அனுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். தமக்கு எதிரான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கோரி மூன்று முன்னாள் போராளிகள் இவ்வாறு உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வவுனியா நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வரும் வழக்குகளை துரிதப்படுத்துமாறு கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அனுராதபுரத்தில் சுமார் 20 முன்னாள்...
க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு முன்னர் வெளியாகியதாக கூறப்படும் இரசாயனவியல் வினாப்பத்திர வினாக்கள் மூன்று தொடர்பில் விசாரணை நடாத்துமாறு பரீட்சைகள் திணைக்களத்தினால் பொலிஸ் மா அதிபருக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளை கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. உதவிப் பொலிஸ் அதிகாரியொருவரின் கீழ் இது தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த துண்டுப்...
நுண் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களின் ஊழியர்கள், தாங்கள் வழங்கும் கடன்களை அறவிடும் போது, மக்களிடம் அநாகரிகமாக நடந்துகொள்வதாக. பொதுமக்கள் தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டி வருகின்றனர். அண்மையில் ஊற்றுப்புலம் கிராமத்துக்குச் சென்ற கிளிநொச்சியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றின் கடன் அறவிடும் ஊழியர் ஒருவர், அன்றைய மாதாந்தக் கடன் தவணைப் பணத்தை மீளச் செலுத்தத் தவறிய...
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. தம்புள்ளையில் நடைபெற்ற போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி தலைவர் விராட் கோலி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார். அதற்கமைய முதலில் களமிறங்கிய இலங்கை அணி 43.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 216...
20 ஆயிரம் பட்டதாரிகள் அபிவிருத்தி உதவியாளர்களாக இணத்துக்கொள்ளப்படவிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர்கள் என்னைச் சந்தித்து பட்டதாரிகளின் பிரச்சினைகள் தொடர்பாக பேசினார்கள். இதுதொடர்பாக கல்வி அமைச்சருடன் பேசி கிழக்கு மாகாணத்தில் 1700 ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள ஏற்பாடு செய்துள்ளோம் என்றும் பிரதமர் கூறினார். மட்டக்களப்பு ஏறாவூரில் 96 மில்லியன் செலவில்...
யாழ்மாவட்டத்தில் ஓரளவு மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் மேற்கு , சப்ரகமுவ , மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி , மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும். ஊவா மாகாணத்தின் பல பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று திணைக்களம் இன்று...
வடக்கு கிழக்கில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் கேட்டு பல்வேறு வகையில் போராட்டங்களை நடத்தி வருகின்ற போதிலும், வடக்கு முதலமைச்சருக்கு கூட இந்த பட்டதாரி நியமனங்களை பெற்றுக் கொடுக்க முடியாமல் போயிருக்கின்றது என மத்திய மாகாண தமிழ் கல்வி மற்றும் விவாசாயத்துறை அமைச்சர் எம்.ரமேஸ்வரன் தெரிவித்தார். நுவரெலியா மாவட்டத்தில் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான ‘இந்து விழி’...
அவுஸ்ரேலியாவுக்கு அகதியாகச் சென்ற ஈழத்து இளைஞன் ஒருவர், எதிர்வரும் தேர்தலில் அவுஸ்ரேலிய பசுமைக் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ளார். யாழ். சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட சுஜன் செல்வன் (வயது – 31) என்பவரே ஆஸி. தேர்தல் களத்தில் இறங்கவுள்ளார். கடந்த 2000ஆம் ஆண்டு அகதி அந்தஸ்து கோரி ஆஸி. சென்ற இந்த இளைஞன், தற்போது மனித உரிமை...
உலகளாவிய ரீதியில் அப்பாவிகளுக்கு எதிரான சித்திரவதைகளை மேற்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் இலங்கை மீண்டும் முதலிடத்தைப் பெற்றுள்ளது. பிரித்தானியாவை தலைமையகமாக கொண்டு இயங்கும், ப்ரீடம் ப்ரம் டோர்ச்சர் என்ற அமைப்பின் வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு உலகளாவிய ரீதியில் அப்பாவி மக்களுக்கு எதிரான சித்திரவதைகள் தொடர்பான ஆய்வொன்றை குறித்த அமைப்பு...
டெனிஸ்வரனை கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு விலக்கி வைப்பதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) கட்சிச் செயலாளர் தெரிவித்துள்ளார். வவுனியாவில் அமைந்துள்ள தலைமைக் காரியாலயத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற கட்சியின் உயர் மட்டக் குழுக்கூட்டத்திலேயே மேற்படி முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் உயர் மட்டக் குழுக்கூட்டத்திற்கு சமுகமளிக்குமாறு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் தான் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை...
சராஹா எனும் செயலி கடந்த சில வாரங்களில்உலகமுழுவதும் அதிக பிரபலமாகி வருகிறது. சமூக வலைத்தளங்களில் உள்ள நண்பர்களுக்கு மொட்டைக் கடுதாசி போன்று தகவல்களை சராஹா மூலம் அனுப்ப முடியும். இதில் குறுந்தகவலை அனுப்புபவர் யார் என்ற தகவல் குறுந்தகவல் பெறுபவருக்கு தெரியாது. எனினும் சராஹா செயலியில் யார் மெசேஜ் அனுப்புகிறார்கள் என்ற தகவலை இதனை உருவாக்கியவரகள்...
மோட்டார் சைக்கிள்களுக்கு அரசாங்கம் வழங்கிய வரி குறைப்பு இந்தியாவில் தயாரிக்கப்படும் மோட்டார் சைக்கிள்களுக்கு வழங்கப்பட மாட்டாது எனவும் அந்த வரி குறைப்பு ஜப்பானில் தயாரிக்கப்படும் மோட்டார் சைக்கிள்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. ஜப்பான் மோட்டார் சைக்கிள்களின் விலை அதிகம் என்பதால் மீண்டும் ஜப்பான் மோட்டார் சைக்கிள் சந்தையை உருவாக்குவதே இந்த வரி...
ஜே.வி.பி.யில் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்து பல விடயங்களை செய்யும்போது 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு சில பிரச்சினைகளை தீர்க்கமுடியாமல் இருப்பது கவலைக்குரியது என ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர சுனில் ஹெந்துநெத்தி தெரிவித்தார். ஊழல், மோசடிகள் அற்ற நாடு ஒன்றை கட்டியெழுப்ப அனைவரும் தங்களது ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் அவர்...
Loading posts...
All posts loaded
No more posts
