Ad Widget

டெனிஸ்வரனை ரெலோவில் இருந்து 6 மாதங்களுக்கு விலக்கி வைப்பு!

டெனிஸ்வரனை கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு விலக்கி வைப்பதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) கட்சிச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அமைந்துள்ள தலைமைக் காரியாலயத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற கட்சியின் உயர் மட்டக் குழுக்கூட்டத்திலேயே மேற்படி முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் உயர் மட்டக் குழுக்கூட்டத்திற்கு சமுகமளிக்குமாறு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் தான் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை எனவும், கட்சிக்கெதிராக நீதிமன்றத்தினை நாடப்போவதாகவும் அமைச்சர் டெனிஸ்வரன் முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts