Ad Widget

சித்திரவதைகளை மேற்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு மீண்டும் முதலிடம்

உலகளாவிய ரீதியில் அப்பாவிகளுக்கு எதிரான சித்திரவதைகளை மேற்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் இலங்கை மீண்டும் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

பிரித்தானியாவை தலைமையகமாக கொண்டு இயங்கும், ப்ரீடம் ப்ரம் டோர்ச்சர் என்ற அமைப்பின் வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு உலகளாவிய ரீதியில் அப்பாவி மக்களுக்கு எதிரான சித்திரவதைகள் தொடர்பான ஆய்வொன்றை குறித்த அமைப்பு மேற்கொண்டிருந்தது. சர்வதேச அளவில் இலங்கை உள்ளிட்ட 76 நாடுகளில் இது தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டிருந்தன.

அந்த வகையில் சர்வதேச அளவில் அப்பாவிகள் மீதான சித்திரவதைச் சம்பவங்கள் கடந்த ஆண்டு ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் கூடுதலான அளவில் நடைபெற்றுள்ளது.

கடந்த ஆண்டு இலங்கையில் 230 சித்திரவதைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால் வெளியில் வராத மேலும் பல சம்பவங்கள் நடைபெற்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

சித்திரவதைகள் நடைபெறும் நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ள ஈரானில் கடந்த ஆண்டு 140 சித்திரவதைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக பதிவாகியுள்ளது.

Related Posts