Ad Widget

வடக்கு முதலமைச்சருக்கு பட்டதாரி நியமனங்களை பெற்றுக் கொடுக்க முடியவில்லை!

வடக்கு கிழக்கில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் கேட்டு பல்வேறு வகையில் போராட்டங்களை நடத்தி வருகின்ற போதிலும், வடக்கு முதலமைச்சருக்கு கூட இந்த பட்டதாரி நியமனங்களை பெற்றுக் கொடுக்க முடியாமல் போயிருக்கின்றது என மத்திய மாகாண தமிழ் கல்வி மற்றும் விவாசாயத்துறை அமைச்சர் எம்.ரமேஸ்வரன் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான ‘இந்து விழி’ கணித பாட பயிற்சிக் கையேடு வெளியீட்டு விழா கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவது தொடர்பில் வடக்கு கிழக்கில் போராட்டங்கள் செய்யப்பட்டு வந்த போதிலும் மத்திய மாகாணத்தில் போராட்டங்களின்றி 742 பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்கப்பட்டது.
ஆனால் பட்டதாரிகள் நியமனங்கள் வழங்கப்பட்டும் ஆசிரியர்கள் பலர் பாடசாலைகளுக்கு சமூகமளிக்கவில்லை என்பது வேதனைக்குரியது.

வடக்கு கிழக்கில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் கேட்டு பல்வேறு வகையில் போராட்டங்களை நடத்தி வருகின்ற போதிலும், வடக்கு முதலமைச்சருக்கு கூட இந்த பட்டதாரி நியமனங்களை பெற்றுக் கொடுக்க முடியாமல் போயிருக்கின்றது.

ஆனால் மத்திய மாகாணத்தில் எந்தவொரு போராட்டங்களுமின்றி பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் கிடைத்துள்ளது. இவ்வாறு கிடைக்க பெற்ற நியமனங்களை பெற்றுக்கொண்ட ஆசிரியர்கள் பலர் பாடசாலைக்கு சமூகம் தரவில்லை” என மத்திய மாகாண தமிழ் கல்வி மற்றும் விவாசாயத்துறை அமைச்சர் எம்.ரமேஸ்வரன் தெரிவித்தார்.

Related Posts